பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வடமாநில இளைஞர்களை பார்த்து நாடு பெருமைபடுகின்றது : மோடி

வடமாநில இளைஞர்களை பார்த்து நாடு பெருமைபடுகின்றது : மோடி கொஞ்சம் ஆழமாக ராணுவத்தில் மிகுதியாக பணியாற்றும் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உபி போன்ற வடமாநிலங்களில் இளைஞர்களை பார்த்து நாடு பெருமைபடுகின்றது என சொல்லியிருக்கலாம் வீட்டுகொருவர் எனும் அளவில் அவர்கள் ராணுவத்தில் இருக்கின்றார்கள், மிகுதியான உளவுபணியில் உயிரை கொடுத்துகொண்டிருப்பவர்கள் அவர்களே உண்மையில் நாட்டு பாதுகாப்பு பணியில் மிகுதியாக பணியாற்றுவது அவர்களே. மற்றபடி இந்த தமிழகத்தின் சில‌ கும்பல்கள் எல்லாம் தமிழகத்திற்கு இந்தியா என்ன செய்தது என கேட்பார்களே தவிர, […]

கலைஞருக்கு பாரத ரத்னா வழங்கபட வேண்டும் : தமிழிசை

கலைஞர் சமாதியில் மலரலங்காரம், காய்கனி அலங்காரம் என தினமும் பல‌ மரியாதைகள், உடன்பிறப்புகள் சிலாகிப்பு இந்த அலங்காரங்களை ஆலய சிலைகளுக்கு செய்தால் அதன் பெயர் மூடநம்பிக்கை, வீணர்கள் நம்பிக்கை, முட்டாள்கள் வேலை, அடிமைசதி , பார்ப்பானின் வியாபார தந்திரம் இன்னபிற‌ அதையே கலைஞர் சமாதியில் செய்தால் அது அவர் மீதான தொண்டர்கள் அன்பு ஆக பகுத்தறிவு என்பது சில இடங்களில் கண்ணை மூடிகொள்வது அல்லது பழைய கொள்கைகளை எல்லாம் சுத்தமாக மறந்துவிடுவது. கலைஞருக்கு பாரத ரத்னா வழங்கபட வேண்டும் […]

ஜோதிகாவிற்கு நேரம் சரியில்லை

ஜோதிகாவிற்கு நேரம் சரியில்லை கிறிஸ்தவர்கள் பொறுமையாக சகித்து செல்வார்களா என்பது தெரியவில்லை, ஆனால் சிலுவையில் அறைந்துவிடும் வாய்ப்பு அதிகம் சந்தடி சாக்கில் மூஸா நபியினை ஜோதிகா கேவலபடுத்துகின்றார் என யாராவது கிளப்பிவிட்டால் போதும் பக்ரீத் ஆடு நிச்சயம் ஜோதிகாதான்

கில்லாடி கிளைவ் : 03

கில்லாடி கிளைவ் : 03 சென்னை கோட்டைக்கு வந்த கிளைவின் கையில் கால் காசு இல்லை, லண்டனில் அவர் தந்தைக்கு தெரிந்த நபர் ஒருவர் இருப்பதாக நம்பி வந்த கிளைவிற்கு அந்த நபரும் லண்டன் சென்றது பின்னர்தான் தெரிந்தது சென்னை வெயில் அவருக்கு ஒத்துவரவில்லை, உடல் நலம் கெட்டது, அவருக்காக கொடுக்கபட்ட குமாஸ்தா அறையும் அவருக்கு உகந்ததில்லை அக்காலங்களில் அவருக்கு ஆறுதலை கொடுத்த இடம் கடற்கரை, கோட்டையின் மாதா கோவில் , அந்த நூலகம் சென்னை கவர்னர் […]

பாரதியார் கவிதையினை மேற்கோள் காட்டி சுதந்திர தின உரை ஆற்றினார் மோடி

பாரதியார் கவிதையினை மேற்கோள் காட்டி சுதந்திர தின உரை ஆற்றினார் மோடி என்னதான் சர்ச்சை என்றாலும் வாழ்த்தவேண்டிய இடங்களில் வாழ்த்தவேண்டும் பாரதி இத்தேசத்தையும் அதன் விடுதலையினையும் அதன் எதிர்காலத்தையும் பாடி பாடி செத்த கவிஞன் அவனுக்கு இதுகாலம் வரை இத்தேசத்தில் பெரும் அடையாளமில்லை, அதுவும் காங்கிரஸ் பிரதமர்கள் பெரும்பாலும் அவனை கண்டுகொண்டதே இல்லை முதன் முதலாக அந்த சிங்க தமிழனின் வரிகளை பாரத பிரதமர் செங்கோட்டையில் முழங்குகின்றார், அந்த நன்முயற்சிக்கு வாழ்த்துக்கள் அய்யா மோடி எம் பாரதியின் […]

தலைவி இருப்பதால் இத்தேசம் இன்னும் அழகாக கம்பீரமாக‌ இருக்கின்றது

தலைவியின் நாட்டில் இருப்பதை விட என்ன பெருமை வேண்டி இருக்கின்றது? தலைவி இருப்பதால் இத்தேசம் இன்னும் அழகாக , கம்பீரமாக‌ இருக்கின்றது, அந்த மகிழ்ச்சியில் தேசம் சுதந்திர நன்னாளை மகா உற்சாகமாக கொண்டாடுகின்றது இத்தேசத்தின் பெருமையான‌ ஒரு விஷயம் மீட்கபட வேண்டுமென்றால் அந்த கோஹினூர் வைரம் லண்டனில் இருந்து மீட்கபட வேண்டும் மிக விரைவில் அது மீட்கபட்டு தலைவியின் மூக்குத்தியில் பொருத்தபடும் என சங்கம் சுதந்திர தினநாள் உறுதி ஏற்கின்றது

பணமதிப்பு எப்படி சரிந்தது

சில மோடி பக்தர்கள் வந்து உலக பொருளாதாரமே சரிகின்றது, இந்திய பணம் சரியாதா? அவரை சொல்ல ஒன்றுமில்லை என சொல்லிகொண்டிருக்கின்றார்கள் உதாரணம் சொல்லுங்கள் என்றால் துருக்கி பணம் சரிந்துவிட்டதாம் துருக்கி மேல் கடும் வெறுப்பில் இருக்கின்றது அமெரிக்கா, அதன் ராணுவபுரட்சி சதி திட்டத்தை துருக்கி முறியடித்ததிலும் இன்னும் அரபு அரசியலில் அது காட்டும் சில பிடிவாதங்களும் அமெரிக்காவிற்கு கடும் எரிச்சலை கொடுத்தன‌ குறிப்பாக அதிபர் எனும் முரட்டுபதவிக்கு வந்திருக்கும் எர்டோகன் அமெரிக்காவிற்கு பிடித்த நபர் அல்ல‌ இதனால் […]

தமிழன் என்பதற்காக திமுகவிலும் வரமுடியாது

ஏதோ நாம் அண்ணா காலத்தில் இருந்து திமுக போலவும், கலைஞருடன் பாளையங்கோட்டை சிறையில் இருந்தது போலவும், மிசாவில் ஸ்டாலினுடன் அடிவாங்கியவன் போலவும் இப்பொழுது சில விஷயங்களை சொன்னால் ஏய் உன் பதிவு சரி இல்லை , நீ ஆரிய அடிவருடி என பல திமுகவினர் கிளம்புகின்றார்கள் இந்த திமுக அபிமானம் என்ற முத்திரை எப்பொழுது விழுந்ததென்றால் இந்த தும்பிகளை பற்றி எழுதியபொழுது, சைமனை கிழித்தபொழுது ஒரு இந்தியனாகத்தான் புலிகளை சாடினோம், அவர்களுக்கு கலைஞரும் இத்தேசமும் செய்த உதவிகளை […]

பொருளாதாரத்தை மீட்டுள்ளோம்: பிரதமர் சுதந்திர தின உரை

ஆபத்தான நிலையில் இருந்த பொருளாதாரத்தை மீட்டுள்ளோம்: பிரதமர் சுதந்திர தின உரை எந்த நாட்டு பொருளாதாரம் என சொல்லவில்லை,ஒருவேளை அமெரிக்க பொருளாதாரமாக இருக்குமோ? இதெல்லாம் அம்பானி தன் அலுவலத்தில் சொல்ல வேண்டிய விஷயம், இவர் ஏன் செங்கோட்டையில் சொல்லி கொண்டிருகின்றார் நாட்டு பொருளாதாரம் நாசமான நிலையில், உலகளவில் இந்திய பொருளாதார நிலை கீழிறங்கிவிட்ட நிலையில், வளரும் நாடு எனும் அந்தஸ்தை இந்தியா இழந்துவிட்ட நிலையில் எப்படிபட்ட பொய் இது? இதற்கு பதிலாக பாபர் மசூதியினை பாஜகவும் அதன் […]

அரவிந்த கோஷ் பிறந்த நாள்

அவர் பெயர் அரவிந்த கோஷ், வங்காளாத்துக்காரர். முதலில் நல்ல படிப்பாளி லண்டன் எல்லாம் சென்று படித்தார் பின் சுதந்திர போராட்டத்தில் குதித்தார், வங்க பிரிவினை காலங்கள் அவரின் போராட்டத்திற்கு அணல் சேர்த்தன, ஆனால் வெள்ளையரின் கடும் கட்டுபாடுகள் அவருக்கு தடையிட்டன‌ ஒரு வழக்கில் சிக்கி சிறையில் இருந்தபொழுதான் ஆன்மீகபக்கம் திரும்பினார், ஆன்மீகவாதி ஆனார் வங்கத்தில் அவருக்கு கட்டுபாடுகள் அதிகம் என்பதால் அருகிருந்த சந்திரநாகூருக்கு தப்பினார், அது பிரென்ஞ் பகுதி அங்கு தங்கி இருந்தபொழுதுதான் ஆன்மீகத்தை முழுக்க தழுவி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications