பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஆட்டத்தை ஆரம்பிக்கின்றார் அழகிரி

ஆட்டத்தை ஆரம்பிக்கின்றார் அழகிரி கலைஞரின் உண்மையான உடன்பிறப்புக்கள் கலைஞரின் அக்கா சன்முகசுந்தரம்பாளும், பெரிய நாயகி அம்மாளும் அவர்கள் இருவருமே இப்போது இல்லை ஒருவேளை சன்முகசுந்தரம்பாளின் வாரிசுகளான மாறன் குடும்பத்தை பற்றி சொல்வாரோ என்றால்? அந்த தினகரன் பத்திரிகை எரிப்பு எல்லாம் அவர்கள் மறக்கமாட்டார்கள் நாளை கலைஞர் இல்லாத முதல் பொதுகுழு கூட்டம் நடக்க இருக்கும் பொழுது, கட்சியில் முதல் அஞ்சலி முன்னாள் திமுக தலைவருக்கு செலுத்தபட இருக்கும்பொழுது அழகிரியின் பேச்சு கவனம் பெறுகின்றது பிரிவு ஒன்றும் திமுகவிற்கு […]

கில்லாடி கிளைவ் : 02

கில்லாடி கிளைவ் : 02 கிளைவ் இந்தியா வந்த காலகட்டத்தை புரிந்து கொள்ள, இரு விஷயங்களை மனதில் கொள்ளவேண்டும் முதலாவது ஐரோப்பிய நிலமை, அங்கே தீரா யுத்தம் நடந்துகொண்டே இருந்தது. வலிமையான கடற்படையினை கொண்ட பிரிட்டன் ஒருபக்கம், அதற்கு சவால்விடும் ஸ்பெயினும் பிரான்சும் இன்னொரு பக்கம் இது போக ரஷ்யா, பிரஷ்யா, இத்தாலி என ஏக சண்டைகள் சண்டை எதற்கென்றால் பெரிதாக ஒன்றுமில்லை, ஐரோப்பா தாண்டி சண்டையிட அவர்களுக்கு அன்று இடமில்லை. அன்று உலக வல்லரசான துருக்கியர் […]

அந்தனன் ஷன்முகம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

சுவாரஸ்யமான எழுத்து என்பது பத்திரிகை உலகில் மிக சிலருக்கே வரும், அதிலும் வலிக்காமல் அடிப்பது என்பதும் ஒரு கலை, மிக மிக பக்குவபட்டவர்களுக்கே அது பயிற்சியாகும் அப்படிபட்ட மிக சுவாரஸ்யமான எழுத்தாளர் Anthanan Shanmugaஅவர்கள், அவர் நடத்தும் www.newtamilcinema.com பத்திரிகையும், அந்த வலைப்பேச்சு வீடியோக்களும் அவ்வளவு சுவாரஸ்யமானவை சினிமா செய்திகளை அவரை விட்டால் உண்மையாக, தெளிவாக அதே நேரம் சிரிக்க சிரிக்க சொல்ல ஆளே இல்லை உண்மையில் அதெல்லாம் மகா சிரமமான எழுத்துக்கள், ஒரு வார்த்தை மிஞ்சினாலும் வில்லங்கம், ஒருவார்த்தை குறைந்தாலும் […]

கார்மேகம் என்ன செய்யும் பாவம்?

கேரள பெருவெள்ளம் எப்படி ஏற்பட்டது என்பது இப்பொழுது தெரிந்தாயிற்று தோகைவிரித்து இளமயில் ஆடும்பொழுதெல்லாம் மழை வரும் என்பது பொய்யல்ல, முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல‌ தலைவியின் தலைமுடியின் வடிவான அழகும் ,, அம்முகமும் தோகை விரித்தாடும் மயில் போலவே இருப்பதால் ஏற்பட்ட‌ கடும் மழையே கேரளாவில் அப்படி கொட்டியிருக்கின்றது கார்மேகம் என்ன செய்யும் பாவம்?, மயில் ஆடினால் மழைகொட்ட வேண்டியது அதன் பொறுப்பு , தலைவியினை கண்டதும் பெரு மழையாக கொட்டிவிட்டது. காவேரி பொங்கி வரும் ரகசியமும் […]

கலைஞர் எல்லா நாளும் கலைஞராக, சுவாரஸ்யமிக்கவராக இருந்தார்

கலைஞர் மிக சிறந்த வசனகர்த்தா என்பது அவர் மிக பொருத்தமாக எழுதும் பல வசனங்களில் வெளிப்படும், சூழலுக்கு அற்புதமாக வசனம் எழுதுவதில் அவருக்கு நிகர் அவரே எத்தனை பேர் கியூபாவினை பற்றி பேசினாலும், கலைஞர் பேசியிருக்கும் அழகு வராது, முன்பே பேசியிருந்தார். அவர் நச்சென்று சொன்னது இது ” ‘கியூபா’ சின்னஞ் சிறிய நாடு ஆயிரக்கணக்கான தீவுகள் கொண்ட அழகிய தேன் கூடு! தேன் கூடென்று ஏன் சொல்கிறேன் தெரியுமா? தெரியாமல் அமெரிக்கா கை வைக்கும் போதெல்லாம் […]

புலிகள்… பூனைகள்…..

நிச்சயம் அந்த மனிதன் இந்த நூற்றாண்டின் புரட்சியாளர்களில் ஒருவன், தன் மக்களை காத்து தன் நாட்டையும் வீட்டு அவர்களுக்கு நல்வழிகாட்டி நின்ற பெருந்தலைவன் லெனின், மாவோ, ஹோ சி மின் வரிசையில் வந்த ஒரு சகாப்தம் பிடல் காஸ்ட்ரோ ஸ்பெயின் தென்னமெரிக்காவினை பிடித்த காலத்திலிருந்தே சுரண்டல் தொடங்கியது, பின் நாடுகள் சுதந்திரமானாலும் ஒரு வகை அரசியல் நிலவியது, ஆனாலும் அது ஐரோப்பாவில் நடந்த மோதல்களில் தொடர்ச்சியாக அமெரிக்க கண்டத்திலும் தொடர்ந்தது வட அமெரிக்க ஐக்கிய மாகானம், கன்டா […]

இலங்கையில் தமிழர்களுக்கு இந்திய அரசு கட்டிதரும் 60 ஆயிரம் வீடுகள்

இலங்கையில் தமிழர்களுக்கு இந்திய அரசு கட்டிதரும் 60 ஆயிரம் வீடுகளில் முதல் பகுதி வீடுகள் நேற்று ஈழதமிழர்களுக்கு ஒப்படைக்கபட்டிருக்கின்றன‌ இதில் நமது பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் முறையில் பங்கெடுத்திருக்கின்றார் ஈழம் , தொப்புள் கொடி அது இது என கத்தும் கோஷ்டி, இங்கு பிரியாணி அண்டாவும் இசுஸ் காருமாக சுற்றும் கோஷ்டி, ஐரோப்பாவில் தமிழர் பெயரை சொல்லி கறக்கும் கோஷ்டி எல்லாம் ஏதாவது ஈழதமிழருக்கு செய்ததா? இல்லை ஐரோப்பாவிலும் கனடாவிலும் நியூசிலாந்திலும் இருந்து கொண்டு “சேவ் […]

திருமுருகன் காந்தி கைதுக்கு முக ஸ்டாலின் கண்டனம்

திருமுருகன் காந்தி கைதுக்கு முக ஸ்டாலின் கண்டனம் : செய்தி இது மிக மிக கண்டனத்திற்குரிய செய்தி, இந்த முக ஸ்டாலின் என்பவரின் போக்கு கொஞ்சமும் சரி அல்ல, அரசியல் செய்வதாக எண்ணிகொண்டு வரவர தேச துரோகிகளுக்கு எல்லாம் குரல் கொடுக்க தொடங்கிவிட்டார் விரைவில் அங்கிள் சைமனுக்கும் இவர் ஆதரவு தெரிவிப்பார் போலிருக்கின்றது திமுகவின் திராவிட அரசியல் வேறு இந்த ஒருமாதிரி குழப்ப பிரிவினைவாதிகளுடன் கரம் கோர்ப்பது வேறு என்பதில் கலைஞர் தெளிவாக இருந்தார் புலிகளை ஆதரித்து […]

கலைஞர் சமாதியில் திமுகவில் உட்கட்சி சலசலப்புகள்

திமுகவில் உட்கட்சி சலசலப்புகள் கலைஞர் சமாதியில் இருந்து தொடங்கிவிடுமோ என சொல்லபட கூடிய சில விஷயங்கள் நடந்திருக்கின்றன, இது பல பத்திரிகையாளர் முன்னால் நடந்தாலும் இந்த திமுக தலைமைக்கும் இந்த உருக்கமான நேரத்திற்கும் அஞ்சி பல பத்திரிகையாளர்கள் சொல்லவே இல்லை உண்மையில் அவர்கள் பத்திரிகையாளர்களே அல்ல, பிழைப்புவாதிகள் என்ன நடந்திருக்கின்றது? கலைஞர் சமாதிக்கு எல்லோரும் சென்றுகொண்டிருப்பது யாவரும் அறிந்தது, வைரமுத்து முதல் சகலரும் சென்று வணங்கி நிற்கின்றார்கள், செல்லாத பிரபலங்கள் இல்லை அப்படி திமுக மகளிரணியினை சேர்ந்த […]

வருண பகவானே வருந்தகூடிய அளவிற்கு கேரள வெள்ளம்

கேரள வெள்ளம் வருண பகவானே வருந்தகூடிய அளவிற்கு சென்றாயிற்று அணைகள் எல்லாம் கலைஞரின் கோபாலபுரம் வீடு போல திறந்தே வைக்கபட்டாயிற்று, மிக பெரும் வெள்ளம் முதல் முறையாக கேரளம் முல்லைபெரியாரில் 152 அடிவரை தேக்குங்கள் என சொல்கின்றது, மிக பெரும் வினோதம் இது முன்பெல்லாம் அந்த அளவு நீர் தேக்கபட்டது, இந்த இடுக்கி அணைக்கு நீர் வேண்டும் என்பதற்காக குறைக்க சொன்னார்கள், சொல்லி பார்த்தார்கள் பின்பு சொல்ல வேண்டியவர்கள் மூலம் சொன்னார்கள் அதாவது டெல்லி வழியாக ராமசந்திரனுக்கு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications