பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மார்கழி சதயம் நீலகண்ட தீட்சிதர் குருபூஜை

மார்கழி சதயம் நீலகண்ட தீட்சிதர் குருபூஜை 25/12/2025 அன்று மார்கழி சதய நட்சத்திர‌ நாள், அந்நாளில் ஒரு மாபெரும் மகானை அவதாரத்தை ஆதிசங்கரர், ராமானுஜர் சாயல் கொண்ட ஞானத் திருவுவரும் ஒன்றை நினைத்து பார்த்து வழிபடவேண்டியது தமிழக இந்துக்களின் தலையாயக் கடமை. மதுரையில் எக்காலமும் மீனாட்சி உண்டு, அவள் ஆட்சி உண்டு எனும் மெய்சிலிர்க்கும் உண்மையும், அவள் காலம் காலமாகத் தன் அடியார்களைக் கொண்டு தன் ஆலயத்தை மீட்டெடுத்துக் கொண்டே இருக்கின்றாள் என்பதற்கு இந்த அவதாரமும் ஒரு […]

பஞ்ச ஆரண்ய தலங்கள் 05 : திருக்கொள்ளம்புதூர் வில்வனேஸ்வரர் ஆலயம்.

பஞ்ச ஆரண்ய தலங்கள் 05 : திருக்கொள்ளம்புதூர் வில்வனேஸ்வரர் ஆலயம். பஞ்ச ஆரண்ய தலங்களில் கடைசி ஆலயம் ஐந்தாம் ஆலயமான திருகொள்ளம்புதூர் வில்வனேஸ்வரர் ஆலயம். இது தஞ்சாவூர் பாபநாசம் பக்கம் கொடராச்சேரி அருகில் முள்ளியாற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்தத தலம் சிவனின் ஐந்து தொழில் தாத்பரியத்தில் ஐந்தாம் தொழிலான அருளல் தொழிலைக் குறிக்கும் ஆலயம். அதாவது, முக்தியினை அருளும் ஆலயம். காசி முக்தி அளிக்கும் தலம் அப்படியே தமிழகத்தில் திருவெண்காடு, திருவையாறு , திருவிடை மருதூர், மயிலாடுதுறை, […]

பஞ்ச ஆரண்ய தலங்கள் 04 : ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம்.

பஞ்ச ஆரண்ய தலங்கள் 04 : ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம். பாபநாசம் அருகே அமைந்திருக்கும் ஆலங்குடி ஆலயம் பஞ்ச ஆரண்ய தலங்களில் நான்காவதானது. இதன் பழைய பெயர் திருஇரும்பூளை என்பது, கருமை நிறமான பூளை செடிகள் நிறைந்து கிடந்ததால் இது பூளைவனம் எனப்பட்டது. பின்னாளில் சிவன்குடி கொண்ட இடமாததால் திருஇரும்பூளை எனப் பெயர்பெற்றது. இந்த ஆலயத்தின் வரலாறு சிவன் ஆலகால விஷம் உண்டு தேவர்களைக் காத்த அந்தப் புராண காலத்தில் இருந்து துவங்குகின்றது, சிவன் தேவர்களைக் காக்க […]

பஞ்ச ஆரண்ய தலங்கள் 03 : அரித்துவாரமங்கலம் எனும் திருஅரதைப்பெரும்பாழி

பஞ்ச ஆரண்ய தலங்கள் 03 : அரித்துவாரமங்கலம் எனும் திருஅரதைப்பெரும்பாழி பஞ்ச ஆரண்ய ஆலய தலங்களில் அடுத்த ஆலயம் திருஅரதைப்பெரும்பாழி ஆலயம். இது தஞ்சை பாபநாசம் அருகே அமைந்துள்ளது, அதன் இன்றைய பெயர் அரித்துவார மங்கலம். “பைத்தபாம் போடுஅரைக் கோவணம் பாய்புலிமொய்த்தபேய் கள்முழக் கம்முது காட்டிடைநித்தமா கந்நட மாடிவெண் ணீறணிபித்தர்கோ யில்அர தைப்பெரும் பாழியே” எனச் சம்பந்த பெருமானால் பாடப்பட்ட தலம் இது, தேவாரம் பாடப்பட்ட 216 ஆம் தலம் இது. இதன் வரலாறு அடிமுடி காணமுடியாதபடி […]

பஞ்ச ஆரண்ய தலம் 02 : அவளிவண‌நல்லூர் சாட்சிநாதர் ஆலயம்.

பஞ்ச ஆரண்ய தலம் 02 ; அவளிவண‌நல்லூர் சாட்சிநாதர் ஆலயம். தேவாரம் பாடப்பட்ட 163 ஆம் தலமான இந்த ஆலயம் தஞ்சாவூர் பாபநாசம் அருகே முதல் ஆரண்ய தலமான திருக்காவூரை அண்மித்து அமைந்துள்ளது இந்தத் தலம். “பதிக இன்இசை பாடிப்போய், பிறபதி பலவும்நதிஅ ணிந்தவர் கோயில்கள் நண்ணியே வணங்கி,மதுர முத்தமிழ் வாசகர் அணைந்தனர் மன்றுள்அதிர்சி லம்புஅடி யார்மகிழ் அவளிவ ணல்லூர்” எனச் சம்பந்த பெருமான் பாடிய தலம் இது, இந்தத் தலத்தின் தொன்மை யுகங்களைத் தாண்டியது. பாதிரி […]

பஞ்ச ஆரண்ய தலங்கள் 01 : திருக்காவூர்.

பஞ்ச ஆரண்ய தலங்கள் 01 : திருக்காவூர் “முத்தி லங்குமுறு வல்லுமை யஞ்சவேமத்த யானைமறு கவ்வுரி வாங்கியக்கத்தை போர்த்தகட வுள்கரு காவூரெம்அத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே” எனச் சம்பந்தர் தேவாரத்தில் பாடித் தொழுத தலம் இது. ஆரண்யம் என்றால் காவல் நிறைந்த காடு எனப் பொருள், காவல் அமைப்பு என்றும் அர்த்தமாகும். வேதாரண்யம் நைமிசாரண்யம் எனும் பெயரால் அப்படி அமைந்தவை, அப்படி இந்த ஐந்து ஆலயங்களும் முன்பு காடாக இருந்து பின் தலமாக உருவானவை. பஞ்ச ஆரண்ய […]

பஞ்ச ஆரண்ய தலங்கள் – முன்னுரை.

பஞ்ச ஆரண்ய தலங்கள். ஆரண்யம் என்றால் நல்ல விஷயங்களைத் தரும் காவலான வனம் எனப் பொருள். பஞ்ச ஆரண்யம் என்றால் ஐவகை காவல்களை, அருளை, நலங்களை அருளும் ஆலயம் எனப் பொருள், தஞ்சைஅருகே அப்படி ஐந்து சிவாலயங்கள் அருகருகே உண்டு. ஒரே நாளில் இவற்றைத் தரிசிக்கலாம். இவற்றை ஒரே நாளில் எந்த வரிசையில் தரிசிக்க வேண்டுமென போதித்து தரிசனம் செய்து பாடியவர் சம்பந்த பெருமான், அவரின் தேவாரத்தில் இந்த ஆலயங்கள் இடம்பிடித்துள்ளன‌. காவேரியின் தென்கரையில் அமைந்துள்ள இந்தச் […]

சப்தஸ்தான ஆலயங்கள்

சப்தஸ்தான ஆலயங்கள் 01 : திருவையாறு ஐயாறப்பன் ஆலயம் “மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி, போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன், யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது, காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன். கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்” என அப்பர் பாடிய தலம் இது. தமிழகச் சிவாலயங்களில் முக்கியமானதும் மிக மிக சூட்சுமமானதுமானது திருவையாறு ஆலயம். மகா தொன்மையானதுமான ஆலயம் தஞ்சை […]

அட்ட வீரட்டான தலங்கள்

அட்ட வீரட்டான தலங்கள் : 01 திருக்கண்டியூர். பொதுவாக கார்த்திகை மாதம் என்பது அதர்மத்தை அழிக்க வந்த, மாயைகளை அழிக்க வந்த அவதாரங்களுக்கான மாதம். இதனாலே கார்த்திகை மாதம் முருகப்பெருமான் வழிபாடுகள் அதிகம் உண்டு, சுவாமி ஐயப்பன் சாஸ்தாவின் வழிபாடும் அதிகம் உண்டு. பிரம்மா, விஷ்ணு இருவரின் அகங்காரத்தை திருவண்ணாமலையில் சிவபெருமான் அழித்தார் என்பதால் கார்த்திகை தீப கொண்டாட்டமும் உண்டு. அப்படியான கார்த்திகை மாதம் முழுக்க அதர்மக்காரர்கள், அதர்மம் பெருக மூல காரணமான மாய மயக்கங்கள், அகங்காரங்கள் […]

முருகப்பெருமான் ஆலயங்கள்

முருகப்பெருமான் ஆலயங்கள். கந்தன்குடி. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பேரளத்தில் இருந்து திருநள்ளாறு செல்லும் சாலையில் அமைந்துள்ளது அந்த கந்தன்குடி ஆலயம். முருகப்பெருமான் குடிகொண்டுள்ள ஆலயங்களில் இந்த கந்தன்குடி ஆலயமும் மகா முக்கியமானது. இந்த ஆலயம் அமைந்த வரலாறு சுவாரஸ்யமானது. அது இரு வரலாறுகளுடன் தொடர்புடையது. முதலில் அந்த அம்பரன், அம்பன் எனும் அசுரர்கள் கதையினை கொண்ட வரலாறு உண்டு. துர்வாச முனிவர் அவசரமான காரியம் ஒன்றிற்காக சென்றபோது அசுர பெண் ஒருத்தி அவர்மூலம் குழந்தை ஒன்றை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications