பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கடவுளுக்கு அர்பணிக்கபட்டவள் என பொருள்படும் “நிவேதிதை”

இந்துமதம் உண்மையான ஞானதேடலும் பிரபஞ்ச தத்துவமும் ஆன்ம ரகசியங்களை அறிந்துகொள்ள துடிப்போர் எங்கிருந்தாலும் ஏற்றுகொள்ளும், மதங்களின் தாயான அந்த தாய் மானிட லவுகீக தேவைகளை விட ஞானமே பெரிதென தேடிவருக்கெல்லாம் தன் மடியில் இடம் கொடுத்து ஞானம் ஊட்டும் அப்படி பல சாட்சிகளை உலகம் கண்டிந்தாலும் ஒப்பற்ற பெரும் சாட்சி சகோதரி நிவேதிதா அவள் இயற்பெயர் மார்கரட் எலிசபெத் நோபல், 1867ல் பிரிட்டனின் அயர்லாந்தில் பிறந்தார், அக்காலத்தில் இந்தியா பிரிட்டனின் அரச கட்டுபாட்டில் இருந்தது, இந்தியர் பற்றியும் […]

மருது சகோதரரர்கள்

சுதந்திர போராட்டத்தை இந்தியாவில் தொடங்கிய வீரர்களில் முக்கியமானோர் மருது சகோதரரர்கள் அவர்களின் வீரமும் தியாகமும் பெரிது. தமிழகத்தில் மிகபெரிய போர்குரலாக அவர்கள்தான் விளங்கினார்கள், ஆங்கிலேயன் கண்ணில் விரலைவிட்டு ஆட்டியவர்களில் முக்கியமானவர்கள் அவர்கள் அவர்கள்தான் இங்கு தேசமும் தெய்வீகமும் இரு கண்கள் என முதலில் சொன்னவர்கள், தேசத்துக்காக பெரியமருதுவும் கோவிலுக்காக சின்னமருதுவும் உயிரையே கொடுத்தார்கள், அந்த வீர அடையாளம் அவர்கள் சாதரண குடும்பத்து சகோதரர்கள், ஆனால் தங்கள் வீரத்தாலும் விசுவாசத்தாலும் சிவகங்கை அரசின் தளபதிகளாயினர், முத்துவடுகநாதரின் நம்பிக்கைகுரியவர்களாயினர். இருவருமே […]

ஹர்தீப்சிங் பூரி

நேற்று சென்னை மெட்ரோ ரயில் அலுவகம் திறப்புக்கு வந்திருந்த மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி, முக ஸ்டாலினுடன் சேர்ந்து அதை திறந்து வைத்தார் பூரிக்கும் ஸ்டாலினுக்குமான தொடர்பு ஒரு வகையில் புன்னகைக்க வைப்பது, நடந்த வரலாறு அப்படி, அதனால் உருவாகிவிட்ட கோரங்கள் அப்படி, அதையெல்லாம் தாண்டி எதிரும் புதிருமானவர்கள் இனைந்து நின்றதெல்லாம் புன்னகைக்க வேண்டிய இடங்கள் அந்த பூரி ஒரு சீக்கியர், இன்றைய ஜெய்சங்கரை போல அன்று உலக அரசியலில் தேர்ந்தவராக இருந்தார் இதனால் இந்திய அயலக […]

பழமொழி நானூறு : 20

“கல்லாதும் கேளாதும் கற்றார் அவை நடுவண்சொல்லாடு வாரையும் அஞ்சற்பாற்று-எல் அருவிபாய் வரை நாட! பரிசு அழிந்தாரோடுதேவரும் ஆற்றல் இலர்” அதாவது கற்றார் அவை நடுவிலிருக்கும் கற்றவர்கள், கல்லாத‌ புல்லறிவாற் பேசும் கயவ ரிடத்தே எதுவும் எதிர்மாற்றம் பேசமாட்டார்கள், அவர்கள் நல்லறிவும் நற்பண்பும் அற்றவர்கள் என்பதால் அவர்களை அமைதியாக கடந்து செல்வார்கள் இதனை “பரிசழிந்தாரோடு தேவரும் மாற்றல் இலர்” எனும் பழமொழி சொல்லும், அதாவது தேவர்கள் கூட பழிகொண்ட புல்லறிவுகளோடு தொடர்பு வைத்து கொள்ள் மாட்டார்கள் என்பது இதுவே […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 190 – சதா சிவம் / குறள் : 02

“விண்ணிறைந்து நின்று விளங்குஞ் சுடரொளிபோல்உண்ணிறைந்து நிற்குஞ் சிவம்” இக்குறள் “விண நிறைந்து நின்று விளங்கும் சுடரொளி போல உள் நிறைந்து நிற்கும் சிவம்” என பிரிந்து பொருள் தரும்அ தாவது ஆகாயம் எங்கும் நிறைந்து நிற்கும் பிரகாசமான வெளிச்சம், சூரிய ஒளிச்சம் போல மனதில் ஞான வெளிச்சமாய் சிவம் பரவி நிற்கும் என்பது பொருள்சிவனை ஒளிவடிவம் என்கின்றார் ஒளவையார், ஆகாயத்தில் சூரியன் வந்தால் ஆகாயமெங்கும் வெளிச்சம் வந்து அது பூமியின் எல்லா இடங்களிலும் வெளிச்சம் கொடுப்பதை போல […]

பழமொழி நானூறு : 19

“துன்னி இருவர் தொடங்கிய மாற்றத்தில்பின்னை உரைக்கப் படற்பாலான் – முன்னிமொழிந்தால் மொழி அறியான் கூறல், முழந்தாள்கிழிந்தானை மூக்குப் பொதிவு” இருவர் வாதிடும் பொழுது ஒருவன் வினா எழுப்பி பேசி முடித்தபின் இன்னொருவன் பதில் சொல்ல வேண்டும், அதுதான் சரியானது. அது அல்லாது ஒருவன் வினவும்பொழுதே அல்லது அதற்கு முன்னமே இன்னொருவன் பதில் சொல்லி குழப்புவது முழங்காலில் அடிபட்டால் மூக்குக்கு கட்டுபோடுவது போல பொருத்தமற்றது பலனற்றது என்பது பொருள் கேள்வி அறிந்து அதை முழுக்க விளங்கி பொறுமையாக பதில் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 190 – சதா சிவம் / குறள் : 01

“பத்துத் திசையும் பரந்த கடலுலகும்ஒத்தெங்கும் நிற்குஞ் சிவம்” அதாவது எட்டு திசையும் அப்படியே மேல் கீழ் எனும் பத்து திசையும் பரந்த கடலும் கொண்ட இந்த நிலமெல்லாம் சிவம் எனும் பெரும் சக்தி வியாபித்து கலந்திருக்கும் என்பது பாடலின் பொருள் இந்த உலகம் பஞ்ச பூதத்தினாலானது, சிவன் பஞ்சபூத வடிவம் என்பது எல்லோரும் அறிந்தது, அந்த சிவன் இந்த பூமியாக இருக்கும் நேரம் அதை தாண்டிய பிரபஞ்சமாகவும் இருக்கின்றார் என்கின்றார் ஒளவையார் இந்த பூமி, இந்த பிரபஞ்சம் […]

சூரசம்ஹாரம் : 01

இந்து சமயத்தின் 18 புராணங்களில் ஒன்று கந்தபுராணம், அதன் நாயகன் முருகபெருமான் அர்ஜூனா சேனைதலைவர்களின் நான் கந்தன் என்கின்றான் கீதையில் கண்ணன் ஆம் கண்ணனை போல் ஞானகடவுளாக வணங்கபடுபவன் முருகன். கண்ணனும் முருகனுமே உபதேசிக்கும் கடவுளர்களாக, ஞானத்தின் மூலங்களாக போற்றபடுகின்றார்கள் முருகனுக்கான இடம் அங்கே பெரிது ஆம், இந்து தர்மத்தில் அவனுக்கான இடம் பெரிது, இன்றும் உலகமெல்லாம் வணங்கபடும் அவனின் கீர்த்தியும் வல்லமையும் புகழும் அழகும் மிக மிக பெரிது அந்த முருகன் ஞானபண்டிதன், ஆப்த்பாந்தவன், தர்ம […]

சூரசம்ஹாரம் : 02

வீரபாகு தூது செல்ல கிளம்பிய நேரம் சூரபத்மன் மாளிகை கொதித்தெழுந்தது, தாரகன் எனும் தன் தம்பியினை கொன்ற முருகனை பிடிக்க தன் சேனைகளுடன் தயாரானான் சூரபத்மன் ஆனால் அவனின் தம்பி சிங்கமுகனும் அவன் அமைச்சர் அமோகன் என்பவனும் நிதானமாக சில ஆலோசனைகளை சொன்னார்கள். “சூரபத்மா, யாராலும் கொல்லமுடியாத தாரகனை சிவமைந்தன் வீழ்த்தியிருக்கின்றான் என்றால் அவன் சாதாரணமானவனாக இருக்க முடியாது, ஒருவேளை சிவனே அவனை தூண்டிவிடுகின்றாரோ என்னவோ? நாம் அவசரபட்டு மோதுவதில் பலனில்லை ஒரு சிறுவனை ஏன் அனுப்பியிருக்கின்றார்கள் […]

நேற்று அண்ணாமலை கொடுத்துள்ள அந்த பேட்டி

நேற்று அண்ணாமலை கொடுத்துள்ள அந்த பேட்டி ஆழ்ந்து கவனிக்கதக்கது மட்டுமன்றி 75 ஆண்டுகால தமிழகம் சந்திக்கும் பெரும் அச்சுறுத்தல் பற்றிய கவலையினையும் கொடுத்திருக்கின்றது தமிழகம் எப்பொழுதும் தேசிய உணர்வுமிக்க பகுதி, அதனாலே இங்கிருந்து புலித்தேவன், கட்டபொம்மன், வாஞ்சிநாதன், பாரதி, வ.உ.சி என அழியா பாரத சுடர்கள் தோன்றின‌ வடக்கே இந்து இஸ்லாம், இஸ்லாம் சீக்கியம் என குழப்பத்தை செய்து வங்கம், பஞ்சாபில் சுதந்திர போராட்டத்தை நசுக்கபார்த்த பிரிட்டிஷ்காரனுக்கு தமிழகத்தில் இந்துக்கள் பெரும்பான்மை என்பதால் சாதி, தமிழுனர்வு போன்றவை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications