பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பழமொழி நானூறு : 13

“கல்லாதான் கண்ட கழி நுட்பம் காட்டு அரிதால்‘நல்லேம் யாம்’ என்று ஒருவன் நன்கு மதித்தல் என்?சொல்லால் வணக்கி, வெகுண்டு, அடுகிற்பார்க்கும்,-சொல்லாக்கால் சொல்லுவது இல்” கல்வி அறிவு இல்லாதவன் தன் நுட்பமான விஷயத்தை சொல்லமுடியாது,ஒருவன் தான் நல்லவன் என தன்னை தானே சொல்வதால் அவனை எல்லோரும் எப்படி மதிப்பார்கள்? ஒருவன் நல்லவன் என்பது அவன் நடக்கும் நடத்தையாலும் அவன் சொல்லாலும் பிறர் அறிந்து சொல்லவேண்டுமே தவிர அவனே சொன்னால் அதை யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள் அப்படி கல்லாதவன் தான் கற்றவன் […]

வீரப்பனார் சந்தண தொழிற்சாலை,

அன்று பெங்களூர் மிக மிக பரபரப்பாக இருந்தது, காரணம் மாநில சட்ட ஒழுங்கு பிரச்சினையை காக்கும் பொறுப்பு கூடுதலாக மத்திய அரசின் படைகளும் குவிக்கபட்டிருந்தன, காரணம் 1986ம் ஆண்டின் சார்க மாநாடு பெங்களூரில் நடைபெற்றது, சிங்களர்களின் “ராஜகுரு ஜெயவர்த்தனே” வருகிறார், புலிகளின் தலைவர் பிரபாகரன் சென்னையில் இருக்கிறார், எப்படி இருக்கும் நிலமை? (அடுத்த 5 ஆண்டுகளில் ராஜிவ் கொல்லபட்டபோது பெங்களூரில் குவிந்திருந்த புலிகள் ஏராளம், அந்த அளவிற்கு புலிகள் ஒரு அடைக்கல நகரமாக அதனை மாற்றி இருந்தார்கள்) […]

நேற்று தமிழக ஐகோர்ட் முக்கியமான தீர்ப்பு ஒன்றை சொல்லியுள்ளது, இலங்கை தமிழர் குடியுரிமை தொடர்பான அவ்வழக்கில்

நேற்று தமிழக ஐகோர்ட் முக்கியமான தீர்ப்பு ஒன்றை சொல்லியுள்ளது, இலங்கை தமிழர் குடியுரிமை தொடர்பான அவ்வழக்கில் நீண்ட நாளாக தூங்கிய அல்லது மறைக்கபட்ட உண்மை வெளிவந்திருக்கின்றது இதனை நாம் அடிக்கடி முன்பே சுட்டிகாட்டியும் இருந்தோம் இலங்கையில் இருந்து அகதியாக வந்த தமிழர்களுக்கு இங்கு குடியுரிமை வழங்கவேண்டும் என்ற கோரிக்கை நெடுநாளாய் உண்டு, அவ்வகையில் ஒரு வழக்கு தமிழக உச்சநீதிமன்றத்துக்கு வந்தது அதனை தொடுத்தவர் இலங்கை தமிழக தம்பதிகளுக்கு இந்திய தமிழகம் திருச்சியில் பிறந்த ஒரு வாரிசு, அவர் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 180 – தூய ஒளிகாண்டல் / குறள் : 04

“பளிங்கு வலம்புரி பானிகர்த்த தாகில்துளங்கொளியாந் தூய நெறி” இக்குறள் “பளிங்கு வலம்புரி பான் நிகர்த்ததாகில் துளங்கு ஓளியாம் தூய நெறி” என பிரிந்து பொருள் தரும்முறையாக மூச்சு பிராணாயாம் செய்து யோகத்தின் உச்சிக்கு செல்லும் பொழுது பளிங்கு போல் வெண்ணிற ஜோதி அககண்களில் தெரியும் அது தூய வழிக்கு சென்றதன் அடையாளம் என்பது குறளின் பொருள் இங்கு “வலம்புரி பானிகர்த்த” எனும் வார்த்தைக்கு இருபொருள் உண்டு முதலாவது அந்த வெண்ணிற ஒளி வலம்புரி சங்குபோல் வெண்மை பிரகாசமானது […]

பழமொழி நானூறு : 12

“கல்லாதான் கண்ட கழி நுட்பம் கற்றார்முன்சொல்லுங்கால், சோர்வு படுதலால் – நல்லாய்வினா முந்துறாத உரை இல்லை; இல்லை,கனா முந்துறாத வினை” இப்பாடல் ஒரு பெண்ணுக்கு புலவர் போதிப்பதாக அமைந்துள்ளது அதாவது நற்குணங்கள் நிரம்பிய பெண்ணே, கல்லாத ஒருவன் நுட்பமான பொருளை உணர்ந்தாலும் அவனால் அதனை தெளிவாக கற்றோர் முன் சொல்லமுடியாது கேள்வி கேட்பதற்குமுன் அதற்குரிய பதில் எழுவதில்லை, ஒன்றை விரும்பிக் கனவு காணாது அதற்கேற்ற செயல் துவங்குவதில்லை அவ்வாறே, அடிப்படைக் கல்வியற்றவர் தக்க அறிவு பெற்றிருக்கவும் வழியில்லை […]

நாம் கண்ட கம்பனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

தமிழகம் சித்தர்களின் பூமி, அந்த சித்தர்களில் பலர் கவிஞர்களாகவும் விளங்கினார்கள், அந்த சித்தர்களின் பாடல்களே அக்காலம் முதல் இக்காலம் வரை தமிழகத்து ஆன்மீக பெருமைகளை அழகாக சொல்லிகொண்டிருக்கின்றன‌ காலம் தோறும் ஒரு சித்தர் வந்து ஏதோ ஒரு வடிவில் சிவன் கொடுத்த தமிழ்மொழியில், முருகனும் அகத்தியனும் வளர்த்த தமிழ்மொழியில் அழகான ஆன்மீகத்தையும் வாழ்வியலையும் பதிவு செய்வர் அந்த ஆசீர்வாதம் தமிழுக்கு உண்டு, காலம்தோறும் ஒருவர் வந்து அந்த அதிசயத்தை செய்து கொண்டே இருப்பார்கள் அப்படி நம் தலைமுறையில் […]

திண்ணையில படுத்தாவது

“அதாவது சிங்கு எங்க ஊர்ல என்ன பிரச்சினைன்னா உனக்கு புரியமாதிரி சொல்றேன் கேளு கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி “திண்ணையில படுத்தாவது திராவிட நாடு அடைவோம்”ம்னு சொலலி எங்க வீட்டு திண்ணையில படுத்தானுக, அப்புறம் திராவிட நாட்ட விட்டுபுட்டு இந்த திண்ணைதான் தமிழ்நாடுன்னு புதுசா ஒண்ண கிளப்பி எங்க திண்ணைய விட்டு எழும்பாம அங்கேயே உக்காந்தானுக‌ அப்புறமா மெல்ல மெல்ல தமிழ், சென்னை தமிழ், ஈழதமிழ் இப்படி டிசைன் டிசைனா தமிழ் பேசி வீட்டுக்குள்ள வந்துட்டானுக, அவனுககுள்ள எல்லா […]

பழமொழி நானூறு : 11

“கற்றானும் கற்றார் வாய்க் கேட்டானும் இல்லாதார்தெற்ற உணரார், பொருள்களை எற்றேல்,அறிவு இலான் மெய்த் தலைப்பாடு? பிறிது இல்லைநாவல்கீழ்ப் பெற்ற கனி” கற்றவர் சொல்லி தருவதை நேரடியாக‌ படிக்கவோ அல்லது செவியால் கேட்கவோ வாய்ப்பு இல்லாதவர்கள் தங்களை கற்றவர்கள் என சொல்லிகொண்டாலும் தெளிவான அறிவோ ஞானமோ கொண்டிராதவர்கள், அவர்களை கற்றவர்கள் என சபையோர் ஒப்புகொள்ளமாட்டார்கள், அப்படி முறையாக கல்லாமல் தனக்கு அறிவு இருக்கின்றது என ஒருவன் சொல்லி திரிந்தாலும் அது நாவல் மரத்தில் ஏறி பழம்பறிக்காமல் மரத்தடியில் தானே […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 180 – தூய ஒளிகாண்டல் / குறள் : 03

“மின்போ லுருவ விளக்கொளிபோல் மேற்காணில்முன்போல மூலம் புகும்” “மின்போல் உருவம் விளக்கொளிபோல் மேற்காணில் முன்போல் மூலம் புகும்” என இக்குறள் பிரிந்து பொருள் தரும் இந்த குறள் யோக தத்துவத்தை மிக சரியாக சொல்லும் குறள் குண்டலின் சக்தி மூலாதாரத்தில் இருந்து கிளம்பி உச்சகச்சரமான துரியத்தினை அடையும் பொழுது மின்னல் போன்ற ஒரு வெளிச்சம் நெற்றி புருவத்தில் தோன்றும், அதனை அக கண்களால் காணலாம், அந்நிலையில் ஜீவாத்மா தன் மூலமான பரமாத்மாவுடன் ஒன்றியிருக்கும், அந்த மூலத்துடன் கலந்திருக்கும் […]

திமுக எனும் நாடக கம்பெனியின் சில நாடக காட்சிகள் இப்பொழுது சுவாரஸ்யமானவை

திமுக எனும் நாடக கம்பெனியின் சில நாடக காட்சிகள் இப்பொழுது சுவாரஸ்யமானவை திராவிட நாடு வாங்கி, தனி தமிழ்நாடு வாங்கி, காங்கிரசோடு எக்காலமும் கூட்டணி இல்லை எனும் கொள்கையில் உறுதியாக இருந்து, ஈழநாடு வாங்கி இப்படி எவ்வளவோ சாதனைகளை முன்பு செய்தார்கள் தமிழீழம் அவர்களால்தான் உருவானது கடந்த தேர்தலில் வாக்களித்தபடி நீட் தேர்வை மானத்துடன் ஒழித்து, தங்க நகை கடனை எல்லாம் ரத்து செய்து, அரசு ஊழியர்க்கெல்லாம் அள்ளிகொடுத்து, தற்காலிக நர்ஸ்களையெல்லாம் நிரந்தமாக்கி இப்படி தாங்கள் சொன்ன […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications