பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 180 – தூய ஒளிகாண்டல் / குறள் : 03

“மின்போ லுருவ விளக்கொளிபோல் மேற்காணில்முன்போல மூலம் புகும்” “மின்போல் உருவம் விளக்கொளிபோல் மேற்காணில் முன்போல் மூலம் புகும்” என இக்குறள் பிரிந்து பொருள் தரும் இந்த குறள் யோக தத்துவத்தை மிக சரியாக சொல்லும் குறள் குண்டலின் சக்தி மூலாதாரத்தில் இருந்து கிளம்பி உச்சகச்சரமான துரியத்தினை அடையும் பொழுது மின்னல் போன்ற ஒரு வெளிச்சம் நெற்றி புருவத்தில் தோன்றும், அதனை அக கண்களால் காணலாம், அந்நிலையில் ஜீவாத்மா தன் மூலமான பரமாத்மாவுடன் ஒன்றியிருக்கும், அந்த மூலத்துடன் கலந்திருக்கும் […]

திமுக எனும் நாடக கம்பெனியின் சில நாடக காட்சிகள் இப்பொழுது சுவாரஸ்யமானவை

திமுக எனும் நாடக கம்பெனியின் சில நாடக காட்சிகள் இப்பொழுது சுவாரஸ்யமானவை திராவிட நாடு வாங்கி, தனி தமிழ்நாடு வாங்கி, காங்கிரசோடு எக்காலமும் கூட்டணி இல்லை எனும் கொள்கையில் உறுதியாக இருந்து, ஈழநாடு வாங்கி இப்படி எவ்வளவோ சாதனைகளை முன்பு செய்தார்கள் தமிழீழம் அவர்களால்தான் உருவானது கடந்த தேர்தலில் வாக்களித்தபடி நீட் தேர்வை மானத்துடன் ஒழித்து, தங்க நகை கடனை எல்லாம் ரத்து செய்து, அரசு ஊழியர்க்கெல்லாம் அள்ளிகொடுத்து, தற்காலிக நர்ஸ்களையெல்லாம் நிரந்தமாக்கி இப்படி தாங்கள் சொன்ன […]

பழமொழி நானூறு : 10

“விதிப்பட்ட நூலுணர்ந்து வேற்றுமை இல்லார்கதிப்பவர் நூலினைக் கையிகந்தார் ஆகிப்பதிப்பட வாழ்வார் பழியாய செய்தல்மதிப்புறத்துப் பட்ட மறு” நல்ல நூல்களை அதன் இயல்பு மாறாமல் உண்மை பொருளுடன் கற்று , தான் கற்றதற்கும் தன் நடத்தைக்கும் வேறுபாடு இல்லாமல் ஊரும் சபையும் உலகமும் போற்ற வாழ்பவர் ஒரு சிறிய தவறு செய்தாலும் அது நிலவில் கரை போல் களங்கமாய் படிந்துவிடும் என்பது பாடலின் பொருள் எவ்வளவு பெரும் நுண்ணிய நூல்களை கசடற கற்று அதன் வழி போதனையும் வாழ்வும் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 180 – தூய ஒளிகாண்டல் / குறள் : 02

“தெளிவாய தேச விளக்கொளியை காணில்விளக்காய வீடதுவே யாம்” இப்பாடல் “தெளிவாய தேச விளக்கு ஒளியை காணில் விளக்காய வீட்துவே ஆம்” என பிரிந்து பொருள் தரும் அதாவது இந்த உடலாகிய வீட்டில் சிவனின் ஒளியினை கண்டால் அந்த பரமனின் ஒளியினை கண்டால் அண்டத்தில் உள்ளவற்றையெல்லாம் காணலாம் என்பது பொருள் இது கொஞ்சம் சூட்சுமமான விஷயம் அண்டதில் இருப்பதெல்லாம் பிண்டத்திலும் உண்டு என்பார்கள் ரிஷிகள், அவ்வகையில் இந்த உடலே அண்டத்தின் எல்லா அம்சமும் அடங்கிய கூடு இங்கு அதாவது […]

அபிராமி அந்தாதி 55

அபிராமி அந்தாதி 55 “மின்னாயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றதுஅன்னாள் அகம் மகிழ் ஆனந்தவல்லி அருமறைக்குமுன்னாய் நடு எங்குமாய் முடிவாய முதல்வி தன்னைஉன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது” கடந்த பாடலை சேர்மின் என முடித்த பட்டர் இப்பாடலை மின்னாயிரம் என தொடங்குகின்றார், இங்கு மின் என்பது மின்னலை குறிப்பது அன்னையின் தோற்றம் எப்படியானது என்பதை இங்கு முதல் வரியில் சொல்கின்றார் பட்டர் “மின்னாயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது” என்கின்றார் அதாவது அன்னையின் தோற்றம் […]

ஆச்சர கோவை : 71

“இறைவர் முன் செல்வமும் கல்வியும் தேசும்குணனும், குலம் உடையார் கூறார் – பகைவர்போல்பாரித்து பல் கால் பயின்று” அரசன் முன்னால் தன் செல்வம், கல்வி அறிவு, அழகு, தன் குணம், தன் குலம் ஆகியவற்றை பற்றி பேசவே கூடாது. பகைவனிடம் தன்னைபற்றி பேசுவதுபோல் நினைந்து மிக எச்சரிக்கையாக பேசவேண்டும் என்பது பாடலின் பொருள் அதாவது அரசனிடம் தற்பெருமையும் தன் நிலைபற்றியும் எதுவுமே தானாக பேசகூடாது,அரசன் கேட்பதற்கு மட்டும் கவனமாக பதில் சொல்ல வேண்டும் என்பது புலவர் சொல்லும் […]

சேவல் விருத்தம் : 10

மகரசல நிதிசுவற உரகபதி முடிபதறமலைகள்கிடு கிடுகிடெனவேமகுடகுட வடசிகரி முகடுபட படபடெனமதகரிகள் உயிர்சிதறவேககனமுதல் அண்டங்கள் கண்டதுண் டப்படக்கர்ச்சித் திரைத்தலறியேகாரையா ழிந்நகரர் மாரைப் பிளந்துசிறகைக்கொட்டி நின்றாடுமாம் சுகவிமலை அமலைபரை இமையவரை தருகுமரிதுடியிடைய னகையசலையாள்சுதன் முருகன் மதுரமொழி உழைவநிதைஇபவநிதை துணைவனென திதயநிலையோன்திகுடதிகு டதிதிகுட தகுடதித குடதிகுடசெக்கண செகக்கணஎனத்திருநடனம் இடுமயிலில் வருகுமர குருபரன்சேவற் றிருத் துவசமே. முதல்வரி இதோ “மகரசல நிதிசுவற உரகபதி முடிபதறமலைகள்கிடு கிடுகிடெனவே” அதாவது மகர மீன்கள் வாழும் கடல் வற்றிப் போகவும் (மகர சலநிதி சுவற) ஆதிசேஷனின் ஆயிரம்முடிகளும் […]

ஒரு தீவிரவாத தலைவனை போல, ஆப்கானிய தாலிபன் போல, காஷ்மீர் தீவிரவாதிகளின் பயிற்றுனர் போல

என்மேல் எத்தனை வழக்கு என எனக்கே தெரியாது, உன் மேல் 10 வழக்காவது இருக்க வேண்டும், சட்டம் என்ன செய்யும்? இதை தவிர ஒன்றும் செய்யாது என அந்த திருமா தன் தொ(கு)ண்டர்களுக்கு பாடமெடுக்கும் அளவு இந்திய சட்டம் பலவீனமாக உள்ளது என்பதுதான் வேதனை எப்படிபட்ட ஆணவமான பேச்சு? ஒரு தீவிரவாத தலைவனை போல, ஆப்கானிய தாலிபன் போல, காஷ்மீர் தீவிரவாதிகளின் பயிற்றுனர் போல அவர் என்னவெல்லாமோ பொது வெளியில் பேசுவதெல்லாம் ஆபத்து பொதுசொத்தை சேதபடுத்துவது நாட்டிற்கு […]

சங்கி கீதம் : 01

“அண்ணாமலை என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். அவர் என்னைப் தேசியமும் ஆன்மீகமும் நிறந்த‌ புல்லுள்ள இடங்களில் மேய்த்து, சுத்தமான கங்கை அண்டையில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார். அவர் என் தேசிய ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை தேசத்தின் பாதைகளில் நடத்துகிறார். நான் திராவிட இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். என் திராவிட இந்துவிரோத சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை […]

பழமொழி நானூறு : 09

“கற்று அறிந்தார் கண்ட அடக்கம் அறியாதார்பொச்சாந்து தம்மைப் புகழ்ந்து உரைப்பர்-தெற்றஅறை கல் அருவி அணி மலை நாடநிறை குடம் நீர் தளும்பல் இல்” பாடலில் அருவிகள் கொட்டும் மலைநாட்டவனுக்கு போதிக்கின்றார் புலவர், அருவியின் நீரை கொண்டே அழகான தத்துவத்தை சொல்கின்றார் என்பதில் அவரின் கவிபுலமை தெரிகின்றது பெரும் ஆர்ப்பரிப்புடன் பாறையில் பாயும் அருவிகளை கொண்ட நாட்டுக்காரனே, கற்று அறிந்த ஞானியர் கொண்டிருக்கும் அடக்கத்தை அறைகுறையாக கற்றோரும் கல்லாதாரும் கொண்டிருக்க மாட்டார்கள், அவர்கள் தங்கள் பெருமையினை தானே பேசுவார்கள் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications