பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கள்ள காதலில் ஒரு சிக்கல் உண்டு

கள்ள காதலில் ஒரு சிக்கல் உண்டு , உரிமையாய் உண்மை உறவினை சொல்லமுடியாது உறவே இல்லை என அழுது புரள வேண்டும், இல்லை என சொல்லிகொண்டே இருக்க வேண்டும் எப்படி? “எங்கள் பின்னால் மோடி இல்லை, அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் உறவு ஏதுமில்லை” என இவர்கள் சொல்லிகொண்டே இருப்பதை போல..

ஸ்காட்லாந்துடன் மல்லுகட்டி வென்றிருக்கின்றது வெஸ்ட் இண்டீஸ்

உலககோப்பை தகுதி போட்டிக்கு ஸ்காட்லாந்துடன் மல்லுகட்டி வென்றிருக்கின்றது வெஸ்ட் இண்டீஸ் ஒரு காலத்தில் கிரிக்கெட் உலகினையே மிரட்டிய வெஸ்ட் இண்டீஸ், கத்துகுட்டி அணியான ஸ்காட்லாந்திடம் ஆடி தகுதிபெறும் அளவிற்கு வீழ்ந்திருக்கின்றது அரசியலில் மட்டும் என்ன வாழ்கின்றது? திமுக எனும் அகில இந்தியாவிற்கே ஒரு காலத்தில் சவால் விட்ட‌ கட்சி இங்கு தமிழக பாஜகவுடன் தடுமாற்ற ஆட்டம் ஆட தொடங்கி இருக்கின்றது காலத்தின் கோலம் என்பது சத்தியமாக இதேதான்

தலைவியின் புன்னகையே புத்தமதத்தின் எளிமையான தத்துவம்

வழக்கமாக எல்லா தெய்வங்களும் தலைவியினை அவர்கள் வீட்டில் சென்றுதான் வாழ்த்தும் ஆனால் சனி வருவது நல்லதல்ல என சாஸ்திரம் சொல்வதால் தலைவி சனி பகவானை அவரின் இல்லத்தில் சென்று சந்தித்தார் இதெல்லாம் சாதரண விஷயம் இதற்கு போய் குஷ்பு கோவிலுக்கு செல்லலாமா? என பொங்குகின்றார்கள் தலைவி இஸ்லாமியராய் பிறந்தார், பெரியாரிஸ்டாய் வளர்ந்தார், இந்துவினை திருமணம் செய்தார் எம்போன்ற கிறிஸ்தவர்களை சங்கத்தின் முக்கிய பொறுப்பில் அமர்த்தியிருக்கின்றார், வேளாங்கண்ணி போன்ற ஆலயங்களிலும் அவருக்கு சிறப்பு பிரார்த்தனை நடக்கின்றது தலைவியின் புன்னகையே […]

சசிகலா புஷ்பா திருமணம்

சசிகலா புஷ்பாவுடனான‌ திருமணம் திட்டமிட்டபடி நடக்கும் : மணவாளர் ராமசாமி அதிமுக எம்பி என்பதால் சசிகலா புஷ்பாவின் மனதில் இந்தபாடல்தான் ஒலிக்கலாம் “பேசும் வார்த்தை உண்மை தானா பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேடமா?”  

எனது பாட்டிக்கு ஆதரவளித்தது போல் என்னையும் ஆதரிக்க வேண்டும் – ராகுல் காந்தி

எனது பாட்டிக்கு ஆதரவளித்தது போல் என்னையும் ஆதரிக்க வேண்டும் – ராகுல் காந்தி அதற்கு பாட்டி செய்த அத்தனை சர்வாதிகார வேலைகளையும் நீங்களும் செய்யவேண்டும் ராகுல் மிரட்டுதல், எதிர் கட்சியினை உடைத்தல், கட்சிக்குள் இருக்கும் சீனியர்களை ஓடவிட்டு அடித்தல், மாநில கட்சிகளை உடைத்து பலவீனமாக்குதல், அரசு இயந்திரத்தை தன் போக்கிற்கு இயக்குதல் , எதிர்த்தோரை தூக்கி போட்டு மிதித்தல் என அனைத்து தில்லாலங்கடி வேலைகளையும் முதலில் நீங்கள் செய்யவேண்டும் பாட்டி போல ஒரு காரியமும் செய்ய கூடாது, […]

ரஜினி இமயமலையில் இருந்து வந்துவிட்டார், இனி காலா படம் வரும்

ரஜினி இமயமலையில் இருந்து வந்துவிட்டார், இனி காலா படம் வரும் என்கின்றார்கள் படத்தின் கதைபடி ரஜினி கருப்பு தமிழர், சேரிவாழ் தமிழர் இன்னபிற புரட்சி, தலித், தமிழராக இருக்கட்டும் ஆனால் சிக்கல் வேறுவகையில் புகைகின்றது அதாகபட்டது மும்பையின் ரவுடி சாம்ராஜ்யத்தை பெரும்பாலும் ஆண்ட ரவுடிகள் எல்லாம் இஸ்லாம் மதத்தவராக இருந்து தொலைத்துவிட்டார்கள் ஹாஜி மஸ்தானில் இருந்து தாவுத் வரை அப்படித்தான் மும்பை தமிழ் ரவுடிகள் எல்லாம் இந்த ஹாஜி மஸ்தான் போன்ற ரவுடிகளுக்கு அடங்கிய கூலி ரவுடிகளாகவே […]

தலைவர் இப்பொழுதே துண்டு போட்டாயிற்று

வழக்கமா அரசியலுக்கு வந்து எல்லாம் இழந்துவிட்டுத்தான் எல்லோரும் தலையில் துண்டு போடுவார்கள் தலைவர் இப்பொழுதே துண்டு போட்டாயிற்று, கட்சி அகில உலக கட்சியாக இருக்கும் போலிருக்கின்றது. ஆன்மீக அரசியலின் ஆனந்த பரவச நிலையில் தொண்டர் ஒருவர் அருகில் நிற்கின்றார்

காவலர் தற்கொலை முயற்சி : செய்தி

சாதி பாகுபாடு காட்டபடுவதாக கூறி காவலர் தற்கொலை முயற்சி : செய்தி மத சர்ச்சை என்றால் இது பெரியார் பூமி, அண்ணா சாமி என குதிப்பவர்கள் யாரையும் சாதி சர்ச்சைகளில் காணமுடியாது பெரியார் இந்துமதத்தினை எதிர்க்க காரணமே இந்த சாதிதான், ஆனால் இதுபற்றி எல்லாம் பேசமாட்டார்கள் காரணம் சாதி பேசினால் வோட்டு வங்கி பாதிக்கும், மதம் பேசினால் அட்டகாசமாக அரசியல் செய்யலாம் பெரியார் பூமியில்தான் சாதி பல கொலைகளை செய்கின்றது, காவல்துறை காவலருக்கே தற்கொலை செய்யும் அளவு […]

தொடரும் மார்க் சூகர்பெர்க் சர்ச்சை

இந்தியாவில் முகநூலால் சர்ச்சை வந்தால் மார்க் சூகர்பெர்கை இந்தியா கொண்டுவந்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் : மத்திய அமைச்சர் ஏற்கனவே போபால் ஆண்டர்சன், குவாத்ரோச்சி எல்லாம் கொண்டுவந்து சட்டத்தின் முன் நிறுத்தினார்களே? அப்படியா? அட அவர்களை விடுங்கள், இந்த விஜய்மல்லையா, லலித் மோடி, நீரவ் மோடி எல்லாம் கொண்டு வந்தயாயிற்றா? இந்தியன் விஜய்மல்ல்லையாவினையே கொண்டுவர முடியவில்லை இதில் மார்க்கை தூக்கி கொண்டு வருவார்களாம் இந்த பாஜக மத்திய அமைச்சருக்கு மார்க் என்பவர் ஏதோ பழனிச்சாமி பன்னீர் வகையறா […]

சசிகலாவின் வாக்குமூலம் பன்னீர் கோஷ்டிக்கு சிக்கல்

அப்பல்லோவில் ஜெயலலிதாவினை எல்லா அமைச்சர்களும் பார்த்தார்கள் என வாக்குமூலம் வழங்கிவிட்டார் சசிகலா பன்னீரோ ஜெயாவினை யாரும் பார்க்கவில்லை பார்க்கவில்லை, எல்லாம் மர்மம் என்றுதான் தர்மயுத்தம் நடத்தினார் இப்பொழுது சசிகலாவின் வாக்குமூலம் பன்னீர் கோஷ்டிக்கு சிக்கல் பன்னீரின் வருங்கால மறுப்பு சசிகலாவிற்கு சிக்கல் இனி முன்னாள் முதல்வர் மரணத்தில் முன்னாள் முதல்வர் பன்னீரும் முதல்வர் பதவியினை தவறவிட்ட சசிகலாவும் அடித்துகொள்ள போகின்றார்கள் நீதிபதிகள் மீது சசிகலாவிற்கு கோபம் வருவது ஒன்றும் ஆச்சரியமல்ல, அவரின் கனவினை நொறுக்கிய பாவிகள் அவர்கள் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications