பழமொழி நானூறு : 10
“விதிப்பட்ட நூலுணர்ந்து வேற்றுமை இல்லார்கதிப்பவர் நூலினைக் கையிகந்தார் ஆகிப்பதிப்பட வாழ்வார் பழியாய செய்தல்மதிப்புறத்துப் பட்ட மறு” நல்ல நூல்களை அதன் இயல்பு மாறாமல் உண்மை பொருளுடன் கற்று , தான் கற்றதற்கும் தன் நடத்தைக்கும் வேறுபாடு இல்லாமல் ஊரும் சபையும் உலகமும் போற்ற வாழ்பவர் ஒரு சிறிய தவறு செய்தாலும் அது நிலவில் கரை போல் களங்கமாய் படிந்துவிடும் என்பது பாடலின் பொருள் எவ்வளவு பெரும் நுண்ணிய நூல்களை கசடற கற்று அதன் வழி போதனையும் வாழ்வும் […]