கமல் உளற ஆரம்பித்துவிட்டார், அதாவது அரசியல்வாதியாகிவிட்டார்
கமலஹாசன் அரசியல்வாதி ஆகிவிட்டபடியால் பேட்டிகளில் இறங்கிவிட்டார், இப்பொழுது தினதந்திக்கு பேட்டி அளித்துள்ளார் மாவட்டம் தோறும் மிக பின் தங்கிய கிராமத்தை தத்தெடுத்து மார்டன் கிராமமாக வளர்ப்பாராம். இன்னும் என்னவெல்லாமோ பேசுகின்றார் மனிதர் “உன்னால் முடியும் தம்பி” எனும் சினிமாபாணியிலே இருப்பார் போலிருக்கின்றது தமிழக அரசு கடனை எப்படி அடைப்பீர்கள் என்றால் தொழிற்துறையினை வளர்ப்பாராம், லஞ்சத்தை கட்டுபடுத்துவாராம் மறந்தும் முறையாக வசூலிப்பேன் என்றோ, வரி செலுத்தா முதலாளிகளை பிடிப்பேன் என்றோ, மணல் முதல் குவாரி வரை கொள்ளையடிய்யோரை முடக்குவேன் […]