பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ரஜினியும் பாஜகவும் இணைந்தால் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் : குருமூர்த்தி

ரஜினியும் பாஜகவும் இணைந்தால் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் : குருமூர்த்தி ரஜினியின் வோட்டு வங்கி இன்னும் தெரியாது, ஆனால் சர்வ நிச்சயமாக 40% எல்லாம் இருக்கமுடியாது, அதற்கும் மிக குறைவுதான், அவர் தேர்தலை சந்தித்தால்தான் உண்மை தெரியும் பாஜக பற்றி உலகிற்கே தெரியும், வேட்பாளர் கூட கிடைக்காத கட்சி அது, கிடைத்தவருக்கு தேர்தல் கமிஷன் அபராதம் செலுத்தாமல் விட்டதே பெரிய விஷயம், டெப்பாசிட்டை மட்டும் பிடுங்கிகொண்டார்கள் இதில் ரஜினி பாஜகவினை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையினை குருமூர்த்தி […]

தாய் மண்ணிற்கு வர காத்திருப்பது ஒருவிதமான வலி

தாய் மண்ணிற்கு வர காத்திருப்பது ஒருவிதமான வலி, அதுவும் டிக்கெட் வந்துவிட்டால் அதன் பின் உண்ண தோன்றாது, உறக்கம் வராது நினைவுகள் அங்கே சுற்றிகொண்டே இருக்கும் ஒவ்வொரு முறையும் கிளம்பும்பொழுது ஆயிரம் திட்டம் இருக்கும், இம்முறை பலரை சந்திக்கவேண்டும் பல இடங்களை பார்க்க வேண்டும் என கடும் திட்டமிடல் உண்டு செங்கோட்டை முதல் பாஞ்சாலங்குறிச்சி கோட்டைவரை குறித்து வைத்துவிட்டுத்தான் வருவது, ஆனால் வந்து தாயின் முகம் கண்டுவிட்டால் எல்லாம் மறந்துவிடும், ஒரு அடி நகர மனம் வராது, […]

ஞாநி சங்கரன் காலமானார் : ஆழ்ந்த அஞ்சலிகள்

தமிழக பத்திரிகையாளர்களின் முக்கியமானவரான ஞாநி சங்கரன் காலமானார் என்பது பெரும் வருத்தமளிக்கும் செய்தி அவரின் எழுத்துக்களும், அவர் எழுப்பிய கேள்விகளும் தனித்துவம் வாய்ந்தவை, அதனால் பல எதிர்ப்புகளையும் சம்பாதித்தார். உண்மையினை எழுதியதால் பல பத்திரிகைகள் அவரை விரட்டின, அவரோ அஞ்சாமல் தனியே எழுதிகொண்டிருந்தார் நாடக உலகிலும் அவரின் பங்களிப்பு உண்டு நிச்சயமாக சொல்லலாம், ஒரு நல்ல பத்திரிகைகாரன் எப்படி இருக்கவேண்டுமோ அப்படி இருந்தார், எதற்கும் அவர் அஞ்சவில்லை. பெரும் பொய்களும் இன்னும் பல அழிச்சாட்டியங்களும் வரும் பத்திரிகை […]

அண்ணாமலை : மறு விமர்சனம்

பொங்கலுக்கு என்னதான் சிறப்பு படங்கள் பார்த்தாலும் “அண்ணாமலை” படம் பார்த்தபின்புதான் பொங்கல் கொண்டாடிய திருப்தி இருந்தது அந்த படத்தின் கதை என்னவென்றால், நவநாகரீக இளம்பெண் ஒருத்தி ப்ரு அப்பாவி பால்காரனை காதலால் மணம் செய்து கொள்கின்றாள். அவன் குடிசையில் தயக்கமின்றி வாழ்கின்றாள்மா. மாடும் பாலுமாக சுற்றிகொண்டிருந்த அவள் கணவன் நண்பனால் ஏமாற்றபட்டு நடுதெருவிற்கு வந்தபின்னால் அவனோடு இருந்து அவனின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டு அவனை தொழிலதிபர் ஆக்கி அவன் சவாலில் வெல்ல வைக்கின்றாள் என்பதுதான் அந்த இளம்பெண்ணை சுற்றித்தான் […]

இந்திய பாஸ்போர்ட் நிறத்தை இனி காவிகலர் ஆக்குமாம்…

எப்படி எல்லாம் இத்தேசத்தை காவிமயபடுத்துவது என் தீரா சிந்தனையில் இருக்கும் அரசு இது , “வெற்றிலை போட்டு தெருவெல்லாம், சுவரெல்லாம் துப்புவர்களை கூட, அடடே காவி நிறம் ஆக்குகின்றீர்களே, நீங்கள்தான் தேச பக்தர்கள்” என ஊக்குவிக்கும் எண்ணம் கொண்ட அரசு இது சும்மா இருக்குமா? இந்திய பாஸ்போர்ட் நிறத்தை இனி காவிகலர் ஆக்குமாம், கேட்டால் அப்படி அல்ல இது ஆரன்ஞ் நிறம் அவ்வளவுதான். அப்பழம் காவி கலரில் இருந்தால் நாங்கள் என்ன செய்ய? என அமைதியாய் சொல்கின்றார்கள். […]

முகநூலில் காதல் திருமணம் என ஆசைகாட்டி மோசம் செய்யும் கோஷ்டி….

முகநூலில் அப்பெண்ணின் ஐடி மைதிலி என்றிருந்திருக்கின்றது, ஆளாளுக்கு முதலில் லைக் போட்டிருக்கின்றார்கள், பின் இன்பாக்ஸில் ஹாய் போட்டிருக்கின்றார்கள் அந்த ஐடியோ மிக நுட்பமாக வடிகட்டியிருக்கின்றது யாரெல்லாம் வெளிநாட்டில் இருக்கும் சம்பாதிக்கும் பேச்சுலர் என உறுதிபடுத்தி அங்கு வலையினை வீசியிருக்கின்றது முதலில் பழகுவது பின் படங்களை அனுப்புவது பின் பேசுவது அதன் பின் திருமணம் என பேச்சை தொடங்குவது என பெரும் நுட்பமான திட்டமெல்லாம் வைத்திருக்கின்றது அந்த ஐடி இதில் வசமாக சிக்கி இருக்கின்றனர் தமிழக வாலிபர்கள் பலர், […]

அமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலம் பொங்கலை உலகின் பழமையான கலாச்சார பண்டிகையாக அறிவிப்பு

அமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலம் பொங்கலை உலகின் பழமையான கலாச்சார பண்டிகையாக அறிவித்தாயிற்று , இனி அது அங்கு அரசு விழாவாக நடைபெறும் பிரிட்டன் பிரதமர் தெரசா மே தமிழரால் இங்கிலாந்திற்கு பெருமை என நெகிழ்ந்திருக்கின்றார் தமிழர் இருக்குமிடமெல்லாம் பொங்கல் மிக விமரிசையாக கொண்டாடபடுகின்றது, அந்நாட்டு தலைவர்கள் எல்லாம் வாழ்த்து தெரிவிக்கின்றார்கள் பிஜி முதல் மேற்கிந்திய தீவு, தென்னமெரிக்கா வரை வெள்ளையன் தமிழரை அழைத்து சென்றான், அவன் சொன்ன காரணம் தமிழர்கள் மிக சிறந்த உழைப்பாளிகள். அதனை விட […]

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாகு இந்தியா வந்தார்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாகு இந்தியா வந்தார் ஜெருசலேம் விவகாரத்தில் இந்தியா பின் வாங்கியது, இஸ்ரேலுடனான டாங்க் எதிர்ப்பு ஏவுகனை ஒப்பந்தத்தை ரத்து செய்தது போன்ற பல விவகாரங்களுக்கு பின் இஸ்ரேல் அதிபர் இந்தியா வந்திருக்கின்றார் இஸ்ரேலிய பிரதமர் ஒன்றும் சாமன்யம் அல்ல, உளவுதுறை ராணுவம் என எல்லாவற்றிலும் பணியாற்றிவிட்டு பதவிக்கு வந்திருக்கும் ஜெகஜால கில்லாடி மோடியுடன் சிரித்து பேசினாலும் அவரின் உள்மனம் இப்படித்தான் சொல்லும் “நான் யாருண்ணு உலகத்துக்கே தெரியும், நீர் யாருண்ணு எனக்கு தெரியும், […]

பூ பூக்கும் மாதம் தை மாதம்

எத்தனை கோடி பொங்கல் வாழ்த்து வந்தாலும் தலைவியின் “பூ பூக்கும் மாதம் தை மாதம்.” எனும் பொங்கல் வாழ்த்திற்கு ஈடாகாது. தலைவி அட்டகாசமாக தொடங்கிய‌ “பொங்கல பொங்கல வைக்க மஞ்சள மஞ்சள எடு” எனும் பாடல் வரிதான் இன்று தமிழர் கீதம் டிவி, வானொலி எல்லாம் அந்த பாடலையே பரப்பி பொங்கல் வாழ்த்தினை தெரிவித்து கொண்டிருக்கின்றது இனி காணும் பொங்கலுக்கும் தலைவியின் “போவாமா ஊர்கோலம்..” பாடலையே தமிழர்கள் கேட்க போகின்றார்கள் குஷ்பு தமிழர் வாழ்வில் கலந்துவிட்டவர் என […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications