பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 160 – உருபாதீகம் / குறள் : 01

“கருவின்றி வீடாங் கருத்துற வேண்டில்உருவின்றி நிற்கு முணர்வு.” இக்குறள் “கருவின்றி வீடாக கருத்துற வேண்டில் உருவின்றி நிற்கும் உணர்வு” என பிரிந்து வரும் கரு என்றால் இங்கு மானிட பிறப்பை குறிக்கின்றது மீண்டும் பிறவாமல் வீடு எனும் முக்தி பேரை அடையும் பொருட்டு கருத்தாக இருந்தால் பரம்பொருள் மேலான ஞான உணர்வினை வளர்த்து தேகநினைவை முழுக்க அகற்ற வேண்டும் தேகத்தில் மனதை வைத்து அதன் சுகங்களுக்கு அடிமையாவதை விடுத்து பரம்பொருளின் ஞானநிலையில் நிலைத்தால் ,தேக உணர்வுகளை விடுத்து […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 150 – முக்தி காண்டல் / குறள் : 10

“உறக்க முணர்வு பசிகெடப் பட்டால் பிறக்கவும் வேண்டா பிறப்பு” இக்குறள் “உறக்கம் உணர்வு பசி கெடபட்டால் பிறக்கவும் வேண்டா பிறப்பு” என பிரிந்து பொருள் தரும்முக்தி காண்டல் எனும் அதிகாரத்தின் கடைசி குறளாக இதனை ஒளவையார் சொல்கின்றார், முக்தி நிலை என்றால் என்ன என்பதை சொல்கின்றார்உறக்கமற்ற உணர்வற்ற பசியற்ற நிலை என்கின்றார், இது உடலாலும் உள்ளத்தாலும் அடையும் நிலையினை குறிப்பதுஉறக்கமும் பசியும் உணர்வு எனும் ஆசா பாசமும் மயக்கமும் சாதாரண மனிதர்களுக்குரியது, முக்தி எனும் பெருநிலையினை அடைந்தவர்களுக்கு […]

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 88

எவ்வினைய ரேனு மிணைவிழைச் சொன்றிலரேற்றெவ்வுந் திசைநோக்கிக் கைதொழூஉம் – அவ்வினைகாத்த லிலரே லெனைத்துணைய ராயினும்தூர்த்தருந் தூர்ப்பா ரலர். ஒருவன் எவ்வளவு இழிசெயல்களை செய்தாலும் பெண்களிடம் தகாத உறவை கொண்டிராதவன் என்றால் உலகம் அவனை வணங்கும், அப்படி அல்லாமல் ஒருவன் அதில் வீழ்ந்துவிட்டால் எவ்வளவு புகழ் படைத்தவனாயிலும் அவன் இழகபடுவான், இழிவான துர்குணமிக்கோரும் அவனை இழ்வார்கள் என்பது பொருள் பெண்கள் உறவை விலக்கி ஒருவன் வாழ்வதே ஒருவனின் நிலைத்த‌ புகழுக்கு முதல்படி என்கின்றார் குமரகுருபரர்

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 87

“சிற்றின்பஞ் சின்னீர தாயினு மஃதுற்றார்மற்றின்பம் யாவையுங் கைவிடுப – முற்றுந்தாம்பேரின்ப மாக்கட லாடுவார் வீழ்பவோபாரின்பப் பாழ்ங்கும்பி யில்” சிற்றின்பம் என்பது மிக மிக சிறிய காலமே இன்பம் கொடுக்கும் என்றாலும், சிறிய தொட்டியில் நீரா ஆடுதல் போல அதன் அளவு குறுகியதாயினும் அந்த சுகத்தில் மூழ்கியவர்கள் மற்ற எல்லா இன்பங்களையும் கைவிட்டு எல்லா சுகங்களையும் விட்டு அதனிலேயே மூழ்கியிருப்பர் அதை விட்டுவெளி வர விரும்ப மாட்டார்கள் அப்படி மிக சில நொடிகளுக்கான இன்பத்தையே கைவிட விரும்பாத உலகில் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 150 – முக்தி காண்டல் / குறள் : 09

“தற்பர மான சதாசிவத்தோ டொன்றில்உற்றறி வில்லை யுயிர்க்கு” இவ்வரி “தற்பரமான சதாசிவத்தோடு ஒன்றில்லை உற்ற அறிவில்லை உயிர்க்கு” என பிரிந்து பொருள் தரும் தற்பரம் என்றால் இறைவன் என பொருள் பரம்பபொருள் எனும் சதாசிவமாகிய சிவனோடு ஒன்றித்த நிலையில் உயிர்களுக்கெல்லாம் பாசம் எனும் அறிவு அற்றுபோகும், இந்த உலகின் உணர்ச்சிகளை கொடுக்கும் அறிவுகளை அற்றுபோகும் என்பது குறளின் பொருள் அதாவது சிவனோடு மனம் ஒன்றித்தால் அந்நிலையில் பந்த பாசம், மாய லவுகீகம் என எல்லாவற்றில் இருந்தும் மனம் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 150 – முக்தி காண்டல் / குறள் : 08

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 150 – முக்தி காண்டல் / குறள் : 08 “மயிர்முனை யிற்பாதி மனத்தறி வுண்டேல்அயிர்ப்புண் டங்காதி நிலை” இக்குறள் “மயிர் முனையில் பாதி மனத்து அறிவு உண்டேல் அயிர்ப்பு உண்டு அங்கு ஆதி நிலை” என பிரிந்து பொருள் தரும் அதாவது மயிர் முனையிலும் பாதி அளவு புள்ளியில் மனதை செலுத்தி அறிவை குவித்து தியானித்தால் அங்கு ஆதியான சிவன் நிலைகொண்டிருப்பார் என்பது பொருள் மனதை ஒரு புள்ளியில் […]

கன்னட சிற்பி டமிலர் டந்தை

கன்னட சிற்பி விஸ்வேரய்யரும் தமிழ்நாட்டு ஈரோட்டு ராம்சாமியும் சமகாலத்தவர்கள்…இதில் கன்னட விஸ்வரர் ஒரு அய்யர், அக்காலத்திலே கட்டட பொறியியல் படித்து மைசூர் சமஸ்தானத்துக்கு திவானாக வந்தவர் மிக சிறந்த அறிவாளியும் தீர்க்கமான சிந்தனையும் மிக நீண்ட தொலைநோக்கும் கொண்டவர், அவரின் ஆற்றலும் அறிவும் அவரை திவான் எனும் நிலைக்கு உயர்த்தின‌ அன்றைய மைசூர் சமஸ்தானம் பின் தங்கித்தான் இருந்தது, காவேரியின் பிறப்பிடம் என்றாலும் சொல்லிகொள்ளும் அணை அவர்களுக்கு இல்லை இது போக தஞ்சாவூர் பக்கம் காவேரி வெள்ளம் […]

சென்பகராமன் பிள்ளை எனும் பாரத இளஞ்சிங்கம்..

அந்த சிறுவன் திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்து கொண்டிருந்தான், 1891ல் பிறந்த அவனுக்கு அப்பொழுது 13 வயதாகியிருந்தது அவன் தந்தை சின்னசாமி பிள்ளை திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் சமஸ்தான பணியில் இருந்தார், அந்த சமஸ்தானம் இன்றைய கன்னியாகுமரி வரை நீண்டிருந்தது, சென்பகராமனின் சொந்த ஊர் திருவனந்தபுரத்து புத்தன் சந்தை பகுதியாகும் அக்காலத்தில் அல்ல இக்காலத்திலும் கேரளத்தில் பிறந்தவர்கள் சிலம்பம், களறி போன்ற கலைகளை பழகுவது மரபு, சென்பகராமனும் அதில் கற்று தேர்ந்திருந்தார், வர்ம கலையும் அவருக்கு தெரிந்திருந்தது அவரின் தந்தைக்கும் […]

சுப்பிரமணிய சுவாமி

பாரத கண்டத்தில் எக்காலமும் ஒரு முனிவன் தனித்திருப்பான், அவன் தர்மத்திலும் சத்தியத்திலும் நிலைத்திருப்பான், தர்மம் அவனில் குடிகொண்டு அவனை காத்து நிற்கும் எவ்வளவு வல்லமை பெற்றவன் ஆண்டாலும், எத்தனையோ வரம்பெற்றவன் ஆண்டாலும் அந்த முனிவனை ஒன்றும் செய்யமுடியாது, அவன் தன் கண் அசைவிலே அதர்மக்காரனை ஆட்டிவைப்பான், அவன் பெயரை கேட்டாலே அதர்ம கும்பல் பெரும் அச்சம் கொள்ளும் இந்த முனிகள் ஒவ்வொரு காலமும் இருந்தனர், துர்வாச முனி முதல் அந்த பாரம்பரியம் தொடர்ந்து வந்தது நம் கண்முன் […]

நீதிநெறி விளக்கம் : 84

“பெண்மை வியவார் பெயரு மெடுத்தோதார்கண்ணோடு நெஞ்சுறைப்ப நோக்குறார் – பண்ணோடுபாடல் செவிமடார் பண்பல்ல பாராட்டார்வீடில் புலப்பகையி னார்” பெண்மையின் அழகை கண்டு வியக்கமாட்டார், பெண் அழகின் சிறப்பை தன் வாயால் சொல்லமாட்டார், பெண்களை தன் நெஞ்சில் பதியுமாறு நோக்கமாட்டார், பெண்களின் அழகிய குரலின் பாடல்களை கேட்கமாட்டார், உயர்ந்த செயல் அல்லாததை பாராட்டமாட்டார், தன் ஐம்புலன்களையும் அதன் போக்கில் விடாமல் (வீடில்) அதனை அதன் செயலுக்கு விரோதமாக்கி (பகையினர்) அடக்கி வைத்திருப்பார் நல்ல துறவிகள் துறவி என்பவன் ஐம்புலன்களையும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications