குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 76
“பிறன்வரை நின்றாள் கடைத்தலைச் சேறல்அறனன்றே யாயினு மாக – சிறுவரையும்நன்னலத்த தாயினுங் கொள்க நலமன்றேமெய்ந்நடுங்க வுண்ணடுங்கு நோய்” இன்னொருவன் மனைவியின் உறவுக்காக அவள் வீட்டு வாசலில் காத்திருப்பது அறம் ஆகாது, அவள் தரும் இன்பம் நல்ல இன்பமாக தோன்றினாலும் அது பலன் தராது, அதனை தொடர்ந்தால் உடலும் உள்ளமும் ஒருவித அச்சமும் பயமும் கொண்ட நோயால் பாதிக்கபடும், அப்படிபட்ட நோயினை தவிர்ப்பது நல்லது என்பது பாடலின் பொருள் ராமாயணம் எனும் இதிகாசமே அடுத்தவர் மனைவியால் நிகழும் தீமைகளை […]