பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை……

ஒரு குழந்தை உருவாக 10 மாதம் ஒரு பட்டதாரி உருவாக 4 வருடம் ஒரு தலைவன் உருவாக ஒரு யுகம் ஆனால் ஒரு குஷ்பூ உருவாக பல‌ யுகம் ஆகும் அது ஏண்டா உங்களுக்கு புரியவே மாட்டேங்குது? கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை……

தியாகத்தின் ஒரே திருவுருமான பாகம்பிரியாளின் பிறந்த நாள்

இன்று எனக்கு தெரிந்த தியாகத்தின் ஒரே திருவுருமான பாகம்பிரியாளின் பிறந்த நாள். அதுவும் எனக்காக தன் வாழ்வினை தியாகம் செய்தவர் என்ற முறையில் நான் பெரும் நன்றியுடையவனாகின்றேன் எனக்கு நன்றாக தெரியும், என்னோடு சராசரி பெண் வாழ்வது என்பது முடியவே முடியாத காரியம், ஏனென்றால் நான் அப்படித்தான். எதிலும் கவனமில்லை, எதுவுமே சீரியஸ் இல்லை என ஏதோ சித்தன் வழி செல்லும் ஒரு குழப்பாமான மனதிற்கு சொந்தகாரன், இதில் முன்கோபம் வேறு அவளுக்கு எனக்கும் சுத்தமாக பொருந்தாது, […]

தமிழ் சினிமாவிற்காக ராகுல்காந்தி குரல்கொடுத்திருப்பது அவருக்கு கறையே..

ஆயிரம் சமாதானம், காரணம் சொன்னாலும் தமிழ் சினிமாவிற்காக ராகுல்காந்தி குரல்கொடுத்திருப்பது அவருக்கு கறையே.. யாரோ தவறாக வழிகாட்டி அந்த அப்பாவி ராகுல் சிக்கவைக்கபட்டிருக்கின்றார். ராகுல் இதற்கெல்லாம் வந்திருக்க கூடாது, நிச்சயம் கூடாது இனியாவது அவர் விழித்துகொள்ளட்டும், விஜய் செய்திருப்பது பெரும் தவறு, இல்லாத பொய்களை அள்ளிவிட்டது பெரும் தவறு, சட்டபடி தண்டிக்க கூடிய விஷயம் நிச்சயம் அந்த அட்லியினை பிடித்து 3 மாதம் சிறையில் தள்ளவ்வேண்டிய விஷயம் இது, பொய்யான செய்திகளை பரப்புதல் என்பது சாதாரணம் அல்ல‌ […]

வாழ்த்துக்கள் ராஜாத்தி சல்மா அவர்களே…

உலகெல்லாம் பெண்ணியம், இலக்கியம் பேசும் பெண்களில் பெரும் இடம் பெற்றிருக்கின்றார் Rajathi Salma திமுக எப்பொழுதுமே பெரியார் கொள்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் இயக்கம், அப்படித்தான் தமிழகத்தில் கவனிக்கபட்ட சல்மாவினை கலைஞர் கண்டெடுத்தார், திமுகவில் இணைத்தார் அதன் பின் சல்மாவிற்கு பெரும் புத்துணர்ச்சி கிடைத்தது, அவரின் சிறகுகள் உயர விரிந்தன‌ உலகெல்லாம் சாதனை பெண்கள் கூடும் இடமெல்லாம் அவரும் அழைக்கபடுகின்றார், ஐரோப்பா அமெரிக்காவில் இருந்தெல்லாம் அவரை சந்தித்து அம்மாணவிகள் குறிப்பெடுத்து செல்கின்றார்கள். அவரது எழுத்துக்களை அந்த அளவு கொண்டாடுகின்றார்கள். மிகபெரும் […]

உளறுகின்றார் நம் காமெடி ஸ்டார் தமிழிசை

மறுபடியும் பெரும் உளறலை உளறுகின்றார் நம் காமெடி ஸ்டார் தமிழிசை அதாவது ஜெயா மரணம், டெங்கி எல்லாம் தாண்டி இந்த யழவு மெர்சல் விவகாரம் அரசியலாகிவிட்டது, ஜிஎஸ்டி விவகாரத்தில் காங்கிரஸ் விஜய்க்கு ஆதரவாக‌ வாய் திறக்கின்றது. சிதம்பரம் ராகுல்காந்தி எல்லாம் விஜய்க்கு கை கொடுக்கின்றார்கள். இதில் தமிழிசைக்கு கோபம் பொத்துவிட்டது, பதிலுக்கு இப்படி திரைப்படங்களை நீங்கள் கண்டிக்காமல் விட்டதால்தான் நாடு சீரழிந்துவிட்டது என்றாவது சொல்லியிருக்கலாம், மாறாக உளறிவிட்டார் ஆம், எம் தமிழினம் அழியும்பொழுது நீர் எங்கு சென்றீர் […]

விவாதிக்க தமிழிசை தயாரா : சீமான் சீற்றம்

என்னுடன் ஜிஎஸ்டி பற்றி விவாதிக்க தமிழிசை தயாரா : சீமான் சீற்றம் மிஸ்டர் சைமன் , ஜிஎஸ்டி பற்றி நல்ல விவரம் அறிந்த பொருளாதார வித்தகர்களுடன் விவாதிக்க நீர் தயாரா? அவர்கள் சொல்லும் கணக்கு புரியுமா? சிக்கலான வரி கணக்குகளில் ஒரு புள்ளிக்கு உம்மால் விளக்கம் அளிக்க முடியுமா? பொருளாதார விற்பனர்கள் இருவர் அதைபற்றி விவாதிக்கட்டும் ப.சிதம்பரமும் அருண் ஜெட்லியும் அல்லது ப.சிதம்பரமும் ரகுராஜ் ராஜனும் விவாதித்தால் அது விவாதம் தமிழிசை ஒரு அல்லக்கை, அந்த அல்லக்கையுடன் […]

தரமா? எங்கே தமிழக காங்கிரசிலா?

ஒரு வழியாக சுலோகம் ஒன்று சங்கத்தால் உறுதி செய்யபட்டிருக்கின்றது இதுதான் இப்பொழுது சங்கத்து கோஷம், இதைத்தான் சங்கத்தார் உரக்க சொல்லவேண்டும் என முடிவு செய்யபட்டிருக்கின்றது இதனை விட நல்ல சுலோகம் வந்தால் பின்பு பரிசீலிக்கபடும், தற்போது இதுதான் கோஷம், “சோற்றுக்கு உப்பு தமிழத்திற்கு குஷ்பு” தமிழக காங்கிரஸ் தலைவராக குஷ்பூவிற்கு தகுதி இல்லை, அவர் தலைவரானால் தமிழக காங்கிரஸின் தரம் குறையும், கட்சி அவமானபடும் என்றேல்லாம் சிலர் சொல்கின்றார்கள் தரமா? எங்கே தமிழக காங்கிரசிலா? அவமானமா? எது? […]

புல்டோசர் ஜனதா பார்ட்டி

தாஜ்மகாலை முறைக்க தொடங்கிவிட்டது பாஜக கோஷ்டி. நாளொரு தகவலை சொல்லிகொண்டே இருக்கின்றது ஏற்கனவே இப்படி சொல்லி சொல்லித்தான் பாபர் மசூதியினை இடித்து தள்ளினார்கள் எல்லாவற்றையும் இடிப்போம் என கிளம்பும் இது, புல்டோசர் ஜனதா பார்ட்டி போல.. தாஜ்மஹாலுக்கு இப்போது ஆபத்து இல்லை எனினும் அதனை கடும் காவலில் வைப்பது நல்லது, இவர்களுக்கு சிவசேனா பரவாயில்லை வெள்ளையன் கட்டிய ரயில் நிலையத்திற்கு சிவாஜி பெயரை வைத்துவிட்டு அமைதியாகிவிட்டார்கள், இடிக்க கிளம்பவிலை சரி இது வட இந்திய பிரச்சினை தென்னிந்தியாவில் […]

மெர்சல் படத்திலிருந்து ஜிஎஸ்டி விமர்சன காட்சிகள் நீக்கம்

மெர்சல் படத்திலிருந்து ஜிஎஸ்டி விமர்சன காட்சிகள் நீக்கம் வெற்றி..வெற்றி..மாபெரும் வெற்றி என தமிழிசை கைதட்டும் நேரம் ஆக தமிழிசைக்கு அஞ்சும் நிலைக்கு விஜய் சென்றுவிட்டார், இனி எவனாவது தளபதி தலைவலி என பேசட்டும் பார்க்கலாம் ஆனாலும் அன்று பராசக்தி முதல் ராமசந்திரனின் பல இம்சை காட்சிகளை அனுமதித்த காமராஜர், பக்தவக்சலம் போன்றோரின் பெருந்தன்மை தெரியும் நேரமிது அவர்கள் அன்றே இப்படி கழுத்தை நெறித்திருந்தால் இந்த ராமசந்திரன் எல்லாம் வந்திருக்க முடியுமா? இருக்கட்டும் “கலையின் வடிவம் சினிமா, அதுல […]