தேவி மஹாத்மியம்
தேவி மஹாத்மியம் 01 : மதுகைடப வதம் மார்க்கண்டேய மஹரிஷி கூறினார் “எவர் சூரிய குமாரனோ, எவர் ஸாவர்ணி என்கிற எட்டாவது மனுவாக கூறப்பட்டுள்ளானோ, அந்த மனுவினுடைய சரிதத்தை விரிவாகச் சொல்கிறேன், கேட்பீராக. ஸாவர்ணி மனு, மஹாமாயையினுடைய கருணையால் அனைத்து மந்வந்த்ரங்களுக்கும் அதிபரானார். முன்பு ஸ்வாரோசிஷன் என்ற மனுவின் கால முடிவில் சைத்ர வம்சத்தில் உதித்த, ஸுரதன் என்னும் அரசன் இப்பூமண்டலம் முழுமைக்கும் தலைவனாயிருந்தான். நாட்டு மக்களை தன் குழந்தைகளைப் போல பாதுகாத்து ஆட்சி புரிந்து வந்த […]