பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தமிழக அரசியல்வாதிகளின் அட்டகாச “”ஜிமிக்கி கம்மல்”நடனம்

https://www.facebook.com/225334524661553/videos/226556867872652/ தமிழக அரசியல்வாதிகளின் அட்டகாச “”ஜிமிக்கி கம்மல்”நடனம், அதிலும் சின்னம்மாவின் அபிமானங்கள் தனி கெத்து. மிக அட்டகாசமான நடனம் அங்கிள் சைமனுடையது. பார்த்துவிட்டால் குறைந்தது அரைமணிநேரமாவது தொடர்ந்து சிரிக்கலாம். நான் ஒருமாதம் சிரிப்பேன் போல… கர்ப்பிணிகள், இதய நோயாளிகள், வயிற்று பிரச்சினை உள்ளவர்கள் டாக்டரின் அனுமதியினை பெற்றுவிட்டு இந்த வீடியோவினை பார்ப்பது நல்லது.  

தமிழிசை : “லூசாப்பா நீ”

நீட்டுக்கு எதிரான போராட்டத்தில் அனிதா படத்திற்கு அஞ்சலி செலுத்தினார் குமரி அனந்தன். இதனை பார்த்த தமிழிசை என்ன கேட்பார்? “லூசாப்பா நீ” (பிதாமகன் படத்தில் லைலாவின் தந்தை சொல்லும் வசனமான “லூசுதாம்மா..உன்னை மகளை பெத்த நான் லூசுதாம்மா” எனும் காட்சி உங்கள் நினைவுக்கு வரவே கூடாது.) வருகைப்பதிவேடு அழைப்பிற்கு மாணர்வர்கள் ‘ஜெய்ஹிந்த்’ சொல்லவேண்டும் : மபி மாநிலத்தில் சட்டம் வகுப்பிற்கு வராத மாணவர்கள் ஜெய்ஹிந்த் சொல்ல முடியாது, அதனால் அவர்கள் தேசவிரோதிகள் என அறிவிக்கப்ட்டாலும் ஆச்சரியமில்லை. போகிற […]

நதிகளை மீட்போம் இயக்கத்திற்கு குஷ்பூ ஆதரவு

நதிகளை மீட்போம் இயக்கத்திற்கு குஷ்பூ ஆதரவு சங்கம் திரளட்டும், காவேரி முதல் கங்கை மட்டுமல்ல சிந்து, டைக்கிரிஸ், நைல்நதி வரை இனி மீட்டுவிட வேண்டியதுதான்.

நேற்று சோமனூர் … நாளை சூலூர்…

கோவை சோமனூரை தொடர்ந்து சூலூரிலும் பஸ் நிலைய கூரை இடியும் அபாயம் முட்டு கொடுக்கும் பணி தொடங்கியது. சோமனூர் பஸ்நிலைய கூரையினை கட்டியவன் யார்? தகவல் இல்லை. இந்த சூலூரில் கட்டிய ஒப்பந்தக்காரன் யார்? தெரியவில்லை ஆனால் முட்டு கொடுக்கின்றார்கள். முட்டு பஸ்நிலைய கூரைக்கு மட்டுமல்ல‌ மாநில அரசுக்கு மத்திய அரசு முட்டு கொடுக்கின்றது, மாநில அரசு இப்படிபட்ட கட்டங்களுக்கு முட்டு கொடுக்கின்றது ஆக சமாளிப்பிலே செல்கின்றன எல்லா விஷயங்களும். எதற்கும் முடிவேயில்லை. இவ்வளவிற்கும் முதல்வர் பழனிச்சாமி […]

காஜல் அகர்வால் குடும்ப அட்டை

ஆக சரோஜா பெரியதம்பி என்பவர்தான் சினிமாவிற்காக காஜல் அகர்வால் என பெயரில் நடித்து கொண்டிருந்திருக்கின்றார் என அரசு ஆவணம் தெரிவிக்கின்றது. இது நமக்கு தெரியாமல் அவரை வடநாட்டு பெண் என நினைத்திருக்கின்றோம். Anthanan Shanmugam நடத்தும் சினிமா பத்திரிகை சொல்லாத விஷயத்தை எல்லாம் அரசு செய்தி சொல்லிற்று. இன்னும் தமண்ணா, நயன் எல்லாம் எந்த கிராமத்தவர்கள் என தெரிந்துகொள்ள தமிழக மக்களுக்கு கடும் ஆர்வம். அவர்கள் பற்றிய குடும்ப அட்டைபடமும் விரைவில் வரலாம்.   எம்ஜிஆரை சிறப்பிக்கும் ரூ.100, […]

இம்மானுவேல் சேகரன் என்பவர் யார்?

சில விஷயங்களை சொல்வதற்கு மனசாட்சியினை கழற்றி எறிந்துவிட்டிருக்க வேண்டும், அல்லது சொந்த மூளையினை அடகுவைத்துவிட்ட தற்குறியாக இருக்கவேண்டும் அப்படிபட்டவர்கள்தான் இம்மானுவேல் சேகரன் நினைவுநாளில் காமராஜரை தூற்றிகொண்டிருக்கின்றனர். 1957ல், அந்த‌ தேர்தலில் முத்துராமலிங்க தேவரின் ஆதரவு பெற்ற சசிவர்ணதேவர் வெற்றிபெற்றிருந்தார். இதனை தொடர்ந்து இராமநாதபுரம் பக்கம் கலவரம் பரவியது, ஏன் பரவியது என்பதுதான் மர்மம். அதற்கு முன்பாக இம்மானுவேல் சேகரன் என்பவர் யார்? என்றால், அவரும் அப்பகுதிக்காரர் அன்றே ராணுவத்தில் இருந்தவர், படித்தவர். 7 மொழிகள் அவருக்கு தெரிந்திருந்தன. […]

காவேரியில் வெள்ளம், தமிழக‌ கரையோர மக்களுக்கு எச்சரிக்கை & மோர்…

போலி சாமியார்கள் பெயர் பட்டியலில் பாபா ராம் தேவ் பெயர் இல்லாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது : காங்., மூத்த தலைவர் திக் விஜய் சிங் மிஸ்டர் திக் விஜய் சிங், நாங்களும் அந்த அதிர்ச்சியில்தான் உள்ளோம் நித்தி, ஜக்கி, பால் தினகரன், ஏஞ்சல் டிவி சாமியார், எஸ்ரா சற்குணம், ஜகீர் நாயக் போன்ற பல சாமியார்கள் பெயர் மிஸ்ஸிங். காவேரியில் வெள்ளம், தமிழக‌ கரையோர மக்களுக்கு எச்சரிக்கை “டெல்லி எசமான்களே, காவேரியில் வெள்ளம் வந்தாயிற்று. அங்கு […]

தினதந்தி அதிபர் பெயர் பா.ஆதித்தன்

கலைஞர் வந்தேறி, அண்ணா வந்தேறி இன்னும் ஏராளமானோர் உள்ள வந்தேறி வரிசையில் தினதந்தி ஆதித்தனாரையும் சிலர் சேர்த்துவிட்டனர் வழக்கமாக ஒருவருக்கு வந்தேறி பட்டம் கொடுப்பது சீமான் கோஷ்டிகள்தான், ஆனால் “தமிழர் தந்தை” என சிலர் சொல்லும் ஆதித்தனாரையே வந்தேறி என சொல்லி சீமானுக்கே கடுக்காய் கொடுக்க தொடங்கிவிட்டனர் சிலர். அதாவது ஆதித்தனார் குடும்பம் கேரளாவின் காயங்குளம் எனும் ஊரில் இருந்து இந்த தேரிகாட்டு காயாமொழிக்கு வந்தது என்பது அவர்கள் ஆராய்ச்சி முடிவாம். எப்படிபட்ட அபத்தம் இது? கொஞ்சமும் […]

ஜப்பான் சாமி … ஹரியானா சாமி …

முன்பு ஜப்பானில் ஒரு ஆசாமி சாமியாக இருந்தார், அவர் பெயர் ஷோகா ஆஷகரா. நான் தான் சிவன், இயேசு மற்றும் புத்தனின் மொத்த கலவை என சொல்லி போதித்தார், அவரின் அட்டகாசங்கள் ஏராளம், காமெடிகள் பெரும் சுவாரஸ்யம், அதனை எல்லாம் எழுதினால் பல நாட்கள் ஆகும். அதனால் சுருக்கமாக சொல்லிவிடலாம். நானே கடவுள் என கஞ்சா கலந்து அவர் கொடுத்த தீர்த்தத்தில் மயங்கி கிடந்தனர் சீடர்கள். கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமானார் பின் ஓம் ஷிரிங்யோ எனும் ஆசிரமத்தை […]

அபத்தமான ஆய்வு ஒன்றில் இறங்கியிருக்கின்றது நக்கீரன்

மிக அபத்தமான ஆய்வு ஒன்றில் இறங்கியிருக்கின்றது நக்கீரன் பத்திரிகை அதாவது தாதுமணல் என்பது அணுசக்தி பொருளாம், அதனால் அதனை ஏற்றுமதி செய்வதை இந்தியா நிறுத்திவிட்டதாம், இல்லையென்றால் பாகிஸ்தானும் சீனாவும் இந்திய மணல் கடத்தல்காரர்களிடம் இருந்து வாங்குமாம் இப்பொழுது இங்கு தாதுமணல் நின்றுவிட்டதால் இலங்கையில் இருந்து வாங்கி  அணுகுண்டு செய்கின்றார்களாம் இதனை விட பெரும் அபத்தமாக ஒரு பத்திரிகை உளற முடியாது. தாது மணலில் தோரியம் எனும் அணுசக்தி ஒரு விஷயம் மிக குறைந்த அளவில் இருப்பது உண்மை, […]