பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 43 இறைமகனாகிய அரசன் ஒன்றை இகழ்ந்தால் குடிமக்களும் அதனை இகழ்வர். அரசன் ஒன்றைப் புகழ்ந்தால் எல்லாரும் அதனைப் புகழ்வர். வலிமை மிக்க மன்னனின் சீர் வழியில் செல்வதே மக்கள் வழி. சீரில் செல்லும் புனை ஓட்டுபவன் செலுத்தும் வழியில்தானே செல்லும். அரசனை மக்கள் அப்படியே பின்பற்றி நடப்பார்கள் என்பதால் அரசனானவன் மிக சரியான வழிகாட்டியாக நல்ல விஷயங்களை செய்து வரவேண்டும் என்கின்றார் குமரகுருபரர் அக்கால மன்னர்கள் நல்ல பக்திமான்களாகவும், பக்தியில் அதிசிறந்தவர்களாகவும் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 110 – நினைப்புறுதல் / குறள் : 05″அறமின்கள் சிந்தையி லாதாரத் தைச்சேர்ந்துறுமின்க ளும்முளே யோர்ந்து”இவ்வரி “அறமின்கள் சிந்தையில் ஆதாரத்தை சேர்ந்து அறுமின்களும் தம்முள்ளே ஓர்ந்து” என பொருள்படும்அறம் என்பது இங்கு இறைசக்தி எனும் பொருளிலாகின்றதுசிவனை சிந்தையில் நிறுத்தி யோகத்தில் ஆறு ஆதாரங்களையும் துலக்க வேண்டும், அப்படிபட்ட நிலையில் ஆசைகள் அறுபடும் (அறுமின்), ஆசைகளை அறுத்து உள்ளே தன்னை உள்ளே கவனித்து இறைவனோடு ஒன்றுதல் வேண்டும்சிவ நினைவோடு யோகம் செய்தால் […]

15ம் போர்ச்சுகீசியர் நூற்றாண்டில் அந்த கோவா பக்கம் மெல்ல மெல்ல கிறிஸ்துவத்தை புகுத்தினார்கள்ஆப்கானியரும் ஈரானியரும் வந்து பிடித்து தங்கள் மதத்தை பரப்பும் இந்தியாவில் தாங்களும் பரப்பினால் என்ன என அவர்களாக மதம் பரப்பினார்கள், அவர்கள் மதத்தின் பின்னால் காலணி ஆட்சி கணக்கு இருந்ததுஅந்த இந்துமக்கள் அன்று அந்நிய ஆட்சியில் சிக்கியிருந்தனர், அந்நியரான ஆப்கானியரும் ஈரானியரும் வந்து இஷ்டத்துக்கு ஆண்டுகொண்டிருந்ததில் அந்த மண்ணின் சொந்தமக்கள் வெகு பாதிப்புக்குள்ளாயினர், அவர்களுக்கென ஆட்சி இல்லை அதிகாரம் இல்லை ராணுவமில்லை எதுவுமில்லை எதுவுமே […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 110 – நினைப்புறுதல் / குறள் : 04″சிக்கெனத் தேர்ந்துகொள் சிந்தையி லீசனைமிக்க மலத்தை விடு”இவ்வரி “சிக்கென தேர்ந்து கொள் சிந்தையில் ஈசனை மிக்க மலத்தை விடு” என பொருள் தரும்இங்கு மலம் என்பது ஆணவம் , கண்மம் (ஆசை பாசம்), மாயை எனும் மூன்று அடிப்படை பாவங்களை குறிப்பது. உலகின் எல்லா பாவமும் கர்மாவும் இந்த மூன்று விஷயங்களின் அடிப்படையில்தான் அமைகின்றன‌இந்த மூன்று மலம் (குற்றம்) அடிப்படையில் செய்யபடும் […]

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 42 “புழுநெளிந்து புண்ணழுகி யோசனை நாறும்கழிமுடை நாற்றத்த வேனும் – விழலர்விளிவுன்னி வெய்துயிர்ப்பர் மெய்ப்பயன் கொண்டார்சுளியார் சுமைபோடு தற்கு” அறியா மானிடர் இந்த உடல் பெரும் உடலெல்லாம் புண்ணாகி புழுநெளிந்து நீண்ட தூரத்துக்கு துர்நாற்றமெடுத்தாலும் அந்த உடலை கைவிட விரும்பமாட்டார்கள் அவர்கள் சாதிக்கபோவது எதுவுமில்லை ஆனால் ஞானியரும் வீரர்களும் மாண்பாளர்கள் உடலை துச்சமாக கருதி அதனை பயன்படுத்திய பின் தூக்கி தூர எறிய தயாராய் இருப்பார்கள் உடலை அளவுக்கு மீறி நேசித்து […]

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 41 “கலனழிந்த கற்புடைப் பெண்டிரு மைந்துபுலனொருங்கப் பொய்கடிந் தாரும் – கொலைஞாட்பின்மொய்ம்புடை வீரரு மஞ்சார் முரண்மறலிதும்பை முடிச்சூ டினும்” “கலன் இழிந்த கற்புடை பெண்டிர்” என்பது அணிகலன்களை இழந்த கற்புடை பெண்கள் என்றாகின்றது. அணிகலன் என்றால் தாலி முதலான கலன்களை இழந்தவர்கள் என ஒரு பொருளும், பெண்களுக்கே உரித்தான நகை ஆசையினையும் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என நான்கையும் கடந்த பெண்களும் என்ற பொருளில் வரும் வரி இது அதாவது […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 110 – நினைப்புறுதல் / குறள் : 03 “ஓர்மின்கள் சிந்தையி லொன்றச் சிவன்றன்னைப்பார்மின் பழம்பொரு ளேயாம்” இக்குறள் “ஓர்மின்கள் (ஒருமித்த) சிந்தையில் ஒன்ற சிவன் தன்னை பார்மின் (பார்க்க கூடிய) பழம்பொருளே யாம்” என பிரிந்து பொருள் தரும் உள்ளத்தை ஒருமைபடுத்தி , அந்த ஒருமைபட்ட சிந்தனையில் ஒடுங்க செய்து அந்த ஏக தவத்தில் சிவனை காண வேண்டும் என்பது குறளின் பொருளாகும் உள்ளம் ஒருமுகபட்ட ஒரே சிந்தனையில் […]

அபிராமி அந்தாதி : 43

அபிராமி அந்தாதி : 43 “பரிபுரச் சீறடிப் பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல்திரிபுரசுந்தரி சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்புரிபுர வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச் சிலைக்கைஎரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே” முதல்வரி”பரிபுர சீறடி” என என்றாகின்றது, பரிபுரம் என்றால் சிலம்பு, பரிபுரம், ஞெகிழி, ஞெகிழம், அரதனம், நூபுரம் என பல பொருள் உண்டு எனினும் இவை எல்லாம் சிலம்பு எனும் கொலுசை குறிப்பதே அன்னை கால்களில் சிலம்பை அணிந்திருக்கின்றாள் என்பதை “பரிபுர சீறடி” என்கின்றார் பட்டர், இங்கு […]

ஆச்சாரகோவை : 27 “இழியாமை நன்கு உமிழ்ந்து எச்சில் அற வாய்அடியோடு நன்கு துடைத்து, வடிவு உடைத்தாமுக் கால் குடித்துத் துடைத்து முகத்து உறுப்புஒத்த வகையால் விரல் உறுத்தி வாய்பூசல் –மிக்கவர் கண்ட நெறி” இப்பாடல் உண்டு முடித்தபின் செய்யவேண்டிய காரியங்களை சொல்கின்றது உண்டு முடித்தபின் வாயில் நீரை எடுத்து அதை தொண்டைக்கு முன் நிறுத்தி வாயினை அலம்பி கொப்பளிக்க வேண்டும், பின் வாயினை துடைக்க வேண்டும் மும்முறை உள்ளங்கையினால் நீரை மும்முறை பருக வேண்டும் விரல்களில் […]

அந்த கொடியவன் ஆஷ் எனும் அயோக்கிய பிரிட்டிஷ்காரனுக்கு மணிமண்டபம் அதுவும் இந்திய தமிழர்களின் செலவில் மணிமண்டபம் என்பதெல்லாம் ஏன் சுதந்திரம் வாங்கியிருக்க வேண்டும், இதற்கு வெள்ளையனுக்கு அடிமையாக இருக்கலாமே என பெரும் ஆத்திரத்தை எழுப்பும் விஷயங்கள்அங்கு வ.உ.சிக்கு மண்டபம் அவர் பெயரில் துறைமுகம் என ஏகபட்ட அடையாளங்களை செய்துவிட்டு அவரின் நூற்றாண்டுவிழாவினை கொண்டாடிவிட்டு இப்பொழுது அவரை அழித்துபோட்ட ஆஷ் துரைக்கு மண்டபம் என்பதெல்லாம் மானமுள்ள இந்தியர் ஏற்கும் விஷயம் அல்ல‌காரணம் ஆஷ் செய்த கொடுமைகள் அப்படிஇன்றும் உலகின் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications