பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 100 – அருளுடமை / குறள் : 06″

எல்லாப் பொருளு முடிக்கலா மீசன்றன்தொல்லையருள் பெற்றக் கால்”இவ்வரி “எல்லா பொருளும் முடிக்கலாம் ஈசன் தன் தொல்லையருள் பெற்றக்கால்”ஈசனின் மிக ஆழமான அருள் (தொல்லை) இருந்தால் எல்லா காரியத்தையும் வெற்றியாக முடிக்கலாம் என்பது பொருள்எல்லாவற்றுக்கும் மூலமான சிவனின் அருளை பெற்றால் இம்மைக்கான காரியங்களும் மறுமைக்கான காரியங்களும் வெற்றியாகும் என்கின்றார் ஒளவையார்.

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 34

“நட்புப் பிரித்தல் பகைநட்ட லொற்றிகழ்தல்பக்கத்தார் யாரையு மையுறுதல் – தக்கார்நெடுமொழி கோறல் குணம்பிறி தாதல்கெடுவது காட்டுங் குறி” தனக்கு நண்பர்களாக இருப்பவர்களை பிரித்துவிடுதல், பகைவருடன் நட்பு கொள்ளுதல், ஒற்றர்களை இகழ்ந்து ஒதுக்குதல், தன்னை சார்ந்த எல்லோர்மேலும் சந்தேகம் கொள்ளுதல், அறிவுடையர் ஆலோசனையினை புறக்கணித்தல் , கர்வம் கொள்ளுதல், அகங்காரம் கொண்டு செய்யதகாதன செய்தல் ஆகியவை ஒருவனுக்கு கேடுகாலம் வருவதற்கான அறிகுறிகள் என்பது பொருள் எவனுக்கு கேடுகாலம் நெருங்குமோ அவனுக்கான அறிகுறிகள் எதுவென மேற்சொன்ன காரியங்களை சொல்கின்றார் குமரகுருபரர்

குரு என்ற பெரும் ஸ்தானத்துக்கு இந்துக்கள் கொடுத்த இடம் மிக பெரிது, இந்துக்கள் வழிபாடே மூல பரம்பொருளை குருவாக கொண்டு வணங்கி நின்றது”குருபிரம்மா குரு விஷ்ணு, குருதேவோ மஹேஸ்வரகுரு சாட்சாத் பரப்பிரம்மா, தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ”என இறைவனே தனக்கு குருவாக வந்து வழிநடத்தவேண்டும் என வணங்கி நின்ற மதம் அது, குருவின் ஸ்தானத்தை இறைவனுக்கு நிகராக வைத்து கொண்டாடியது”மாதா பிதா குரு தெய்வம்” என வரிசையில் தெய்வத்துக்கு முன்பு குருவினை வைத்து உயர்த்தி போற்றி வணங்கிய […]

நாச்சியார் திருமொழி 1.8

நாச்சியார் திருமொழி 1.8ஆண்டாள் கண்ணனின் நினைவுகளில் எப்பொழுதும் போல் மூழ்கிகிடந்தாள், அவன் சிலைக்கு மாலையிட்டாள், பூஜைகள் செய்தாள், அவனை அழைத்து பார்த்தாள் அவன் வரவில்லைவெகுநேரம் காத்திருந்த அவள் சிறுமியர் விளையாடும் இடத்துக்கு சென்றாள், அவர்கள் மணல் வீடு கட்டி சொப்பு வைத்து விளையாடி கொண்டிருந்தார்கள்மணல் வீடு கட்டி, பல அறைகள் கட்டி அதனில் சமையலறையும் கட்டி சொப்பு பாத்திரங்கள் வைத்து சமையல் பாவனை செய்து உற்சாகமாக விளையாடினார்கள்ஆண்டாள் அவர்களை உற்று கவனித்தாள், அந்த சிறுமியர் வீட்டில் எப்படியெல்லாம் […]

ஆசியாவில் மட்டுமல்ல உலகின் மிகபெரிய கோவில்களில் நெல்லையப்பர் கோவிலுக்கும் இடம் உண்டு, இன்றும் உலகின் மூன்றாம் பெரியதேர் (திருவாரூர், ஸ்ரீவில்லிப்புத்தூர் அடுத்து) நெல்லையப்பருடையது நெல்லுக்கு சிவபெருமான் வேலியிட்டு காத்த அந்த தலம் காலத்தால் மிக மிக பழமையானது, தென்னகம் மண்மூடிபோன காலத்துக்கு முன்பே அது இருந்தது, பின்னாளில் அது மீட்டெடுக்கபட்டது அந்த ஆலயம் பாண்டியர்களின் தனிபெரும் ஆலயமாக இருந்தது, அகத்திய பெருமானும் இன்னும் பலரும் வணங்கிய அத்தலம் தனிபெருமையுடன் நின்றது சோழருக்கு திருவாரூர் என்றால் பாண்டியருக்கு மதுரை […]

இந்துக்களின் பாரம்பரியமான‌ சக்தி வழிபாட்டின் ஒரு வடிவம் காளி. ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு பெயரில் அவள் அழைக்கபட்டாலும் அவளின் பொதுவான பெயர் காளி அவள் உக்கிரவடிவானள், வீட்டுக்குள் வைத்து வணங்கதக்கவள் அல்ல, அவள் ரத்தம் குடிப்பவள், அவள் ஒரு ஆங்கார சக்தி என சொல்வோரும் அதை வைத்து கொண்டே அவள் ஒரு பிசாசு என சொல்லியும் அதை கொண்டே பயமுறுத்தி மதமாற்றும் கோஷ்டியும் உண்டு இதனை கொண்டு பகுத்தறிவு பேசி இந்து துவேஷம் செய்யும் பதர்களும் எக்காலத்திலும் […]

பொன்னியின் செல்வன் கதை உண்மை கதையா என்றால் வரலாறு சொல்வது இதுதான்இடைக்கால சோழர்கள் இருந்தது நிஜம், அங்கு ஆதித்த கரிகாலன் கொல்லபட்ட குழப்பத்தில் ராஜராஜசோழன் ஆட்சிக்கு வந்ததும் நிஜம்அது சேரர், சோழர், பாண்டியர் என மூவரும் ஒருவரை ஒருவர் முறைத்தும் அரவணைத்தும் ஆண்ட வகையில் அவரவர் நலனை காப்பதில் சரியாக இருந்தார்கள்உதாரணமாக சேர நாட்டுக்கு அரிசியும் இதர தேவைகளும் பாண்டிய சேர நாட்டில் இருந்துதான் செல்லவேண்டும், அதே நேரம் சோழர்களுக்கு யானையும் இதர விஷயங்களும் சேர நாட்டில் […]

இந்துக்களின் பாரம்பரியமான‌ சக்தி வழிபாட்டின் ஒரு வடிவம் காளி. ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு பெயரில் அவள் அழைக்கபட்டாலும் அவளின் பொதுவான பெயர் காளி அவள் உக்கிரவடிவானள், வீட்டுக்குள் வைத்து வணங்கதக்கவள் அல்ல, அவள் ரத்தம் குடிப்பவள், அவள் ஒரு ஆங்கார சக்தி என சொல்வோரும் அதை வைத்து கொண்டே அவள் ஒரு பிசாசு என சொல்லியும் அதை கொண்டே பயமுறுத்தி மதமாற்றும் கோஷ்டியும் உண்டு இதனை கொண்டு பகுத்தறிவு பேசி இந்து துவேஷம் செய்யும் பதர்களும் எக்காலத்திலும் […]

இலங்கை தன் 75 ஆண்டுகால வரலாற்றில்

மிகபெரும் தலைகுனிவினை நேற்று சந்தித்தது,எந்த அதிபரும் பெற்றிராத பெரும் அவமானத்தோடு வெளியேறியிருக்கின்றார் கோத்தபாய ராஜபக்சே இலங்கையின் இன்றைய சிக்கலுக்கு உலக அரசியலும் கொரோனாவும் ஒரு காரணம் என்றாலும் அந்த இந்துகடலின் ரத்தினம், தெற்காசிய முத்து என கொண்டாடபட்ட அழகிய தேசத்தின் அரசியல் ஸ்திரதன்மை ஆட்டம் காணவும் இனி இதிலிருந்து தமிழருக்கு விடியல்காலம் பிறக்கவும் அந்த பிரபாகரனே காரணம் உலகம் அவனை மிகபிரமாண்டமாக நோக்க போகும் காட்சியின் தொடக்கம் ராஜபக்சேவின் வீழ்ச்சிபிரபாகரன் ஒரு அபூர்வ பிறப்பு சந்தேகமில்லை, 16ம் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 110 – அருளுடமை / குறள் : 01 ஓளவையின் முதல் நூறு ஞானகுறளை பார்த்துவிட்டு 101ம் குறளுக்கு செல்கின்றோம் முதல் 100 குறளின் பிரபஞ்ச தத்துவம் உடலில் இருப்பதையும், உடலின் அமைப்பையும் அதன் நுட்பமான அசைவையும் அந்த உடலில் கலந்திருக்கும் இறைசக்தியினை யோகபயிற்சி, மூச்சுபயிற்சி மூலம் உணர்வது எப்படி என்பதையும் விளக்கிய ஒளவையார் அடுத்தடுத்து இறைநிலையினை நோக்கி மானிடரை அழைத்து செல்லும் வழிகளை போதிக்கின்றார் ஒளவையின் முதல் 100 […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications