பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தனிநாடு வாங்கபோகின்றோம் என ஆடிய புலிகள்

ஈழ தமிழ்மக்களின் நிலங்களிலிருந்து சிங்கள ராணுவம் முழுமையாக வாபஸ் ஆகாத நிலையில் ஒரு தமிழ்பெண்ணின் சோகம் இப்படி இன்று இருந்தது “சிங்கள ராணுவம் எல்லாம் அக்காலத்தில் வடக்கே வராது, அதன் போக்கில் கொழும்பு பக்கம் இருக்கும் தனிநாடு வாங்கபோகின்றோம் என புலிகள் ஆடிய ஆட்டத்தினை அடக்கத்தான் சிங்கள ராணுவம் வந்தது தனிநாடு வாங்க கிளம்பி, தமிழக நிலங்களை எல்லாம் சிங்கள ராணுவத்திடம் ஒப்படைத்துவிட்டு புலிகள் அழிந்து போயினர்” ஆக சிங்கள ராணுவத்தை வலிய அழைத்து தமிழக நிலங்களை […]

தமிழக அரசு இன்னும் திறக்காத கட்டங்களை, பாமக திறக்கும் : ராமதாஸ் எச்சரிக்கை

தமிழக அரசு இன்னும் திறக்காத கட்டங்களை, பாமக திறக்கும் : ராமதாஸ் எச்சரிக்கை அட தாராளமாக திறங்கள் அய்யா, சரி அந்த பணியாளர்களுக்கு சம்பளம் கொடுப்பது யார்? உதாரணத்திற்கு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்புவிழா காணாமல் இருக்கின்றது, நமது அய்யா திறந்துவிடுவார் ஆனால் பணியார்களை நியமிப்பது, சம்பளம் கொடுப்பது எல்லாம் இவர் செய்வாரா? முடியுமா? அப்படி எல்லா செலவுகளையும் பாமக ஏற்கும் என சொல்லிவிட்டு இவர் அந்த கட்டங்களை திறக்க சென்றால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் செய்யமாட்டார் […]

ரீகன் , புஷ் , டிரம்ப் : ஈரான்

ஆயிரம் சொல்லுங்கள், அமெரிக்காவினை மிக தில்லுடன் எதிர்க்கும் நாடுகள் பட்டியலில் முதலிடம் ஈரானுக்கு இதோ 7 இஸ்லாமிய நாட்டு மக்கள் அமெரிக்காவில் நுழைய தடை என்றார் டிரம்ப். இது அமெரிக்க திமிர், எங்களை யார் என்ன கேட்கமுடியும் எனும் இறுமாப்பு அது. பதிலுக்கு எல்லா நாடுகளும் அழுதும் அலறியும் கொண்டிருக்க, கொஞ்சமும் யோசிக்காமல் ஈரானில் இருந்த எல்லா அமெரிக்க நிறுவணங்களையும் அப்படியே சொத்துக்களை போட்டு ஓடுங்கள் என வெளியேற்றுகின்றது ஈரான் உன் நாட்டில் எங்கள் மக்களுக்கு தடை […]

யாழ்பாணத்தில் ஒரு முருகன், மலேசிய பினாங்கில் இன்னொரு முருகனோ?

தைப்பூச ஊர்வலம் தொடர்பாக மலேசிய பினாங்கில் சில சர்ச்சைகள் வருகின்றன, அதாவது ஊர்வலம் எப்படி நடத்தப்டவேண்டும் என்ற விதிகள் உண்டு என இரு கோஷ்டிகளாக பிரிந்து சொல் வீசுகின்றார்கள் இதில் ஒரு கோஷ்டிக்கு ஆதரவாக வைகோ களமிறங்கி அறிக்கைவிட்டிருக்கின்றார் எப்படி? இது ஆலயம் சம்பந்தமான விஷயம், அதன் புனிததன்மை காக்கபட வேண்டும், அப்படி இப்படி என ஏக முருகபெருமான் அறிவுரைகள் இதே வைகோ, முன்பு யாழ்பாணத்தில் நல்லூர் முருகன் கோவில் வளாகத்தில் புலிகள் அவ்வளவு அட்டகாசம் செய்தபொழுதும், […]

ஷீலா பாலகிருஷ்ணன் விலகுகின்றாராம்

ஷீலா பாலகிருஷ்ணன் விலகுகின்றாராம், நாளை அதிமுக எம் எல் ஏக்கள் கூட்டமாம் அதற்கு முன் அதிருப்தியாளர்களுக்கு எல்லாம் கட்சி பதவியாம். இவ்வளவு நாளும் மூடிகொண்டு தூங்கிகொண்டிருந்த அப்பல்லோ ரெட்டி, திடீரென ஜெயாவின் மருத்துவ அறிக்கையினை வெளியிட தயார் என்கின்றாராம். ரஜினி ரசிகர்களை சந்தித்தால் விரைவில் அவர் படம் ரிலீசாகின்றது என்பது போல இந்த அறிகுறிகள் எல்லாம் எதனை தெரிவிக்கின்றன? அதாகபட்டது நாச்சியார் பட்டாபிஷேகத்திற்கான‌ நேரம் நெருங்கிகொண்டிருப்பதற்கான அற்குறிகள் தெரிகின்றன. அதன் பின் என்னாகும்? நாச்சியார் இருப்பை தக்கவைக்க […]

கைபேசியால் தொற்றும் நோய்….

தொற்றும் நோயுற்ற ஒருவர் பயன்படுத்தும் மொபைல்போனை இன்னொருவர் பயன்படுத்தினால் நோய் தொற்றுமாம் இது போன் என்று அல்ல, தொற்றுநோய்கள் இப்படி நோயாளி தொட்ட எல்லா பொருள் மூலமாகவும் பரவும் என்பது பாக்டீரியா அறிவியல் ஒரு வித தீண்டாமை மூலமே இதனை பரவாமல் தடுக்கலாம், அதனால் எல்லாம் தீண்டாமை சட்டம் பாயாது இவ்வளவுதான் செய்தி அதற்குள் போன் மூலம் நோய் பரவுகின்றது, மொபைல் போனில் பேசினாலே நோய் பரவுகின்றது என பலர் கிளம்பியிருக்கின்றார்கள் விரைவில் லைக் , ஷேர், […]

மீனுக்குள் பெருஞ்சுவை வைத்தான்

“மீனுக்குள் பெருஞ்சுவை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன் மண்ணுக்குள்ளே சில மூடர் அதில் ஐஸ் போட்டு கெடுத்தார்” சென்னையில் ஆயில் கொட்டி கெடுக்கின்றார்களாம் ஆக எல்லா இடத்திலும் எப்படியோ ஆளாளுக்கு மீன் சுவையினை கெடுத்துகொண்டே இருக்கின்றார்கள் அங்கு சென்று வந்தபின் ஒரு இடிந்தகரை நண்பர் இடிந்தகரைக்கு வருமாறு அழைக்கின்றார் அய்யா, ஒருவார்த்தை அங்கு இருக்கும்பொழுது சொல்லியிருக்க கூடாதா? ஒரு மண்பானையும் கொஞ்சம் மளிகையும் வாங்கிகொண்டு ஓடிவந்திருக்க மாட்டேனா? இடிந்தகரை குதிப்பு மீனென்றால் குதித்தோடிவாரதோர் நாவில் புண்ணுடையர் […]

பவுடர் முகத்துக்கு முன்னோடி “நடிகன்” பட மனோரமா ஆச்சி… குஷ்பு எப்படி வசிக்கிறார்?

https://youtu.be/YQL07Sn2iMU நடிகன் திரைபடம் குஷ்பூ நடித்த படங்கள் ஒன்றுவிடாமல் பார்க்கவேண்டும் என்பது நமக்கு நாமே வகுத்த விதி அப்படி பார்க்கும்பொழுதுதான் நடிகன் படமும், அந்த மனோரமா வேடமும் வந்தது கூடவே அந்த கட்சியியும், அந்த தொலைகாட்சியும் நினைவு வந்து தொலைக்கின்றது அந்த பவுடர் பூசிய முகத்தை கண்ட பலபேருக்கு இந்த நினைவு வருவதாக சொல்கின்றார்கள் நீங்களும் பாருங்கள், உங்களுக்கும் தோன்றும் ஆனால் மனோரமா மேக்கப் அதனை விட எல்லாம் மிகை என சொல்லிவிடமுடியாது. முதல் முறையாக குஷ்பூவினை […]

ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை…

ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க டெல்லி மேல்-சபையில் அ.தி.மு.க. கோரிக்கை தமிழகம் வறட்சியில் இருக்கின்றது, குடி நீர் தட்டுபாடு மோசமாகிகொண்டிருக்கின்றது, பட்ஜெட் அறிவிப்பிலும் தமிழகத்திற்கு பெரும் திட்டங்கள் இல்லை கச்சா எண்ணெய் கடலில் கவிழ்ந்து அப்பகுதி மீணவர் எல்லாம் பாதிக்கபட்டு திகைக்கின்றனர், கிட்டதட்ட 2 ஆயிரம் டன் கிலோ மீன்கள் கேட்பாரற்று கிடக்கின்றன‌ இன்னும் எத்தனையோ பெரும் சிக்கல்களும், பிரச்சினைகளும் தமிழகத்திற்கு உண்டு ஆனால் இவர்கள் கவலை எங்கிருக்கின்றது பார்த்தீர்களா? இனி என்ன செய்வார்கள் தெரியுமா? […]

மாறன்ஸ் விடுவிப்பு … குவைத் விசா வழங்க தடை…. மெரினா எண்ணை கழிவு … இன்னும் பிற …

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்தது நீதிமன்றம். நல்லவேளையாக மாறன் சகோதரர்களால் பாதிக்கபட்ட‌ சிவசங்கரன் தான் குற்றவாளி தீர்பளித்து அவரை உள்ளே தள்ளாமல் விட்டார்களே, அதனால் ஆனந்த கண்ணீரோடு உணர்ச்சி பொங்க சொல்லலாம் . நிதிகளை விடுவித்த இந்திய நீதி வாழ்க…… இனி அந்த மலேசிய ஆனந்தகிருஷ்ணன் இந்தியா வந்து ஆனந்தமாக உச்சநீதிமன்றம் முன்பு போட்டோவிற்கு போஸ் கொடுப்பார் அவருக்கும் ஏதோ ஒரு விருது கொடுத்து கவுரவித்தாலும் கவுரவிப்பார்கள். அமெரிக்கா பாணியில் குவைத்: 5 இஸ்லாமிய […]