Somas Kandhan அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பெரியவர் Somas Kandhan அவரின் மூச்சு ,பேச்சு, வாழ்வு எல்லாமே திமுக. அப்படி ஒரு மிக பெரும் திமுக தொண்டர். தொண்டர்களில் பல வகை உண்டல்லவா? இவர் உணர்வு பூர்வமான, அறிவு பூர்வமாக சிந்திக்கும் அபூர்வ வகை

அவருக்கு இன்று பிறந்தநாள்

எப்படி அய்யா சிறப்பித்தீர்கள் என கேட்டால் மனிதர் திகைக்க வைக்கின்றார், இவ்வளவிற்கும் இவர் வீட்டில் இவரின் வம்சாவழிகளுக்கு இப்பொழுதுதான் திருமணம் முடிந்தது, அப்படி புது சொந்தங்கள் எல்லாம் கிடைத்த நிலையில் அவர் பிறந்தநாள் விமரிசையாக கொண்டாடபட்டிருக்க வேண்டும்

ஆனால் மனிதர் சொன்ன பதில் உருக வைக்கின்றது

த”லைவருக்கு உடல் நலமில்லை, கன்னியாகுமரி மக்களின் பாடு மனதை அழ வைக்கின்றது, ஆளும் கட்சி ஏதோ சமாளிக்கபார்க்கின்றது, மாநிலம் இப்படி பெரும் சிக்கலில் சிக்கியிருக்கும்பொழுது நமக்கு என்னய்யா கொண்டாட்டம்?”

இதுதான் உண்மையான திமுக தொண்டனின் குணம், தமிழகம் மகிழ்ச்சியாக இருந்தால் அவனும் மகிழ்ச்சியாக இருப்பான், தமிழகம் அழுதால் அவனும் அழுவான்

காரணம் அவனை பொறுத்தவரை அண்ணாவும், கலைஞரும் சொல்லிகொடுத்ததும், இவர்கள் எல்லோரும் போராடியதும் போராடுவதும் தமிழக நலனுக்காக‌

அந்த தமிழக நலனே நல்ல திமுக தொண்டனுக்கு மகா முக்கியம்

திமுக எனும் இயக்கம், தமிழக மிகபெரும் சக்தியாக இருக்க இவர்போன்ற தன்னலம் மறந்த தொண்டர்கள்தான் காரணம்

நிச்சயம் திமுக இவர்போன்ற தொண்டர்களை பெற்றதில் மிக்க மகிழ்ச்சி அடைய வேண்டும்

இவர் போன்ற தொண்டர்கள் இருக்கும்போது விரைவில் உதய சூரியன் தமிழகத்தில் உதிக்கும், காரிருள் அகலும் என்பதில் சந்தேகமே இல்லை

மிக சிறந்த திமுக காரரான Somas Kandhanஅவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்