Today’s News 17/07/2019

சப்ரீசன் என்பவருக்கு வேறு பிறந்தநாளாம்

ராவணனோடு இருந்ததால் பெரும் வீரர்கள் எல்லாம் அழிந்தனர்

ராமனோடு இருந்ததால் குரங்குக்கும் கோவில் தோன்றிற்று

எல்லோரும் இருக்கும் இடத்தில் இருக்கவேண்டும், பாம்பெனினும் ஈசனின் கழுத்தில் சுற்றியதால் கருடனும் அதை வணங்க வேண்டும் என்பார்கள்.

நமக்கு இன்று ஏனோ இதெல்லாம் நினைவுக்கு வருக்கின்றது, இந்த சப்ரீசன் என்பவருக்கு வேறு பிறந்தநாளாம்

நீட் தேர்வு சரியான விஷயம் அல்ல, அது நீக்கபட வேண்டும் : சூர்யா

என்ன செய்வது சார், சினிமாவுக்கு என்ன தேர்வு உண்டு?

மருத்து கல்வியும் சினிமா தொழில் போல ஆகவேண்டும் என்பதுதான் உம் ஆசையா?

மும்மொழி கொள்கை ஏற்புடையதல்ல : நடிகர் சூர்யா

சார், நம்ம படம் மலையாளம், தெலுங்கு, கன்னடம்னு ஏகபட்ட மொழியில் டப் செய்யபட்டு ஓடுமே?

ஆமாம்

நீங்கள் கூட மலையாளம், தெலுங்கு கதைகளின் தமிழ்டப்பிங்கில் நடிப்பீரே?

கண்டிப்பாக‌

அதில் மற்ற மொழி இயக்குநர்கள், மற்ற மாநில நடிகைகள் எல்லோரும் இருப்பார்களே

அவங்க இல்லாம எப்படி?

மவனே, உம் முதுகை அந்த பேரழகன் படத்தில் வருவது போல் ஆக்காமல் விடவே கூடாது…

கவுண்டர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கவுண்டர் சூர்யாவினை வைத்தே குடைச்சல் கொடுப்பதுதான் தளபதி முக ஸ்டாலினின் ராஜதந்திரம் : சில திமுக அடிமைகள்

அடேய் உங்களுக்கு தும்பிகள் எவ்வளவோ பரவாயில்லை, தயவு செய்து கலைஞருக்கு மண்டபம் கட்டும்பொழுது அஸ்திபாரம் தோண்டியவுடன் உள்ளே சென்று படுத்துகொள்ளுங்கள்.

உடனே சூர்யாவினையும் ஜோதிகாவினையும் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்க்க வேண்டும்

இருவரையும் அரசு ஆசிரியர்களாக்கி உடனே பணிக்கு அனுப்ப வேண்டும்

நடிப்பினை விட்டுவிட்டு ஆசிரியபணிக்கு முதலில் சூர்யா திரும்பட்டும், முடிந்தால் தந்தை சிவகுமார் மற்றும் சகோதரன் கார்த்தியினையும் அழைத்து வந்து ஆசிரிய பணியில் அமரட்டும்.

மற்ற விஷயங்களை அதன்பின் பேசலாம்

அப்படித்தானே தமிழிசை அக்கா?

தமிழ்நாட்டில் ஈழ அகதிகள் மிகுந்த சிரமத்தில் இருக்கின்றார்கள் : அங்கிள் சைமன் வேதனை

சமீபத்திய ஈழ அகதி “லொசில்யா” மிகுந்த சவுகர்யத்துடன் பிக்பாஸ் வீட்டில் இருப்பது அன்னாருக்கு தெரியவில்லை போல..

முன்பொரு காலத்தில் இங்கு “நாம் தமிழர்” என்றொரு குரங்குக்கு முந்தைய இனம் வாழ்ந்ததை பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் உறுதிபடுத்தினர்.

ஒரு காலத்தில் பெரும் சத்தத்துடன் தாவி தாவி குதித்த இனம் திடீரென மொத்தமாக அழிந்தது எப்படி என்ற விவாதம் நடந்துகொண்டிருகின்றது..

நீங்கள் நம்மை பின் தொடர்பவராக இருந்தால் ஒன்றை உங்களால் யூகிக்க முடியும்

லைக்கா புரக்சன் எனும் ஈழதமிழரின் நிறுவணம், அந்த ஈழதமிழர் சுபாஷ்கரன், லைக்கா ஐங்கரான் போன்றவற்றில் இருக்கு ஈழதமிழருடன் தொடர்பில் இருக்க்கும் வைகோ அவரிடம் ஆசி வாங்கும் சூர்யா

விஷயம் புரிகின்றதா?

சூர்யா எங்கோ சிக்கிவிட்டார், அவரின் சமீபத்திய கருத்துக்களும் அது உண்டாக்கும் சர்ச்சைகளும் இந்திய மேலிடத்துக்கும் தமிழக மேலிடத்துக்கும் சிக்கலை ஏற்படுத்துகின்றதல்லவா?

வைகோ கோஷ்டியுடன் ஒருவர் சேர்ந்துவிட்டார் என்பதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும்?

ஆக சூர்யா இனி போராளியாகி அப்படியே இன்னும் என்னவெல்லாமோ ஆகி உருப்படாமல் போக போகின்றார் என்பது மட்டும் புரிகின்றது