இந்தியாவின் சீன எல்லை விளையாட்டு…

முதல் முறையாக இந்தியாவும் வியட்நாமும் சேர்ந்து செய்த ராணுவ பயிற்சிகள் நிறைவு பெற்றிருப்பதாக இந்திய ராணுவ செய்திகள் அறிவிக்கின்றன‌

ஆகஸ்டு 1 முதல் 20ம் தேதிவரை நடக்க திட்டமிடபட்ட பயிற்சி இன்றோடு முடிந்து நாளை முறைப்படி முடிவதாக அறிக்கைகள் சொல்கின்றன‌

வியட்நாம் சீனாவினை அண்மித்து இருக்கும் நாடு, இந்தியாவுக்கு இலங்கை போல சீனாவுக்கு வியட்நாம்

அந்த வியட்நாமுக்கும் சீனாவுக்கும் பொருந்தாது, காரணம் தன்னை சுற்றி இருக்கும் எல்லா நாடுகளுடனும் வம்பிழுத்து வைப்பதுதான் நல்லாட்சி என நம்பும் சீனா வியட்நாமுக்குள்ளும் புகுந்து சில தீவுகளுக்கு உரிமைகோரியது, போர்குணம் கொண்ட வியட்நாம் அதை மறுத்து சீன கப்பல்களையே விரட்டியது

ஆனானபட்ட அமெரிக்காவினையே 1970களில் அடித்துவிரட்டிய நாடு வியட்நாம், அமெரிக்காவின் ஒரே பெருந்தோல்வி வரலாற்றில் அதுதான்

அப்படிபட்ட வியட்நாம் தன் எல்லைக்கு வந்த சீன கப்பலையும் விரட்டி அடித்து உலகை அசத்தியது, இதனை கூர்ந்து கவனித்த இந்தியா வியட்நாமோடு நல்லுறவு கொண்டது, வியட்நாமுக்கும் இந்தியாவுக்கும் ராணுவ உடன்பாடு வந்தது, வியட்நாமுக்கு பிரம்மோஸ் ஏவுகனைகள் கொடுக்க இந்தியா விருப்பம்தெரிவித்தது

இந்நிலையில்தான் வரலாற்றில் முதன் முறையாக வியட்நாம் இந்திய ராணுவ பயிற்சி இந்தியாவின் ஹரியாணா மாகாணம் சண்டி மந்திரில் நடந்தது, இது சீனாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பது சொல்லிதெரியவேண்டியதில்லை

இப்பொழுது இலங்கைக்கு சீன கப்பல் ஏன் வந்தது என்பதற்கான விடை எல்லோருக்கும் கிடைத்திருக்கும் அது இரு நாட்களில் சென்றுவிடுவது ஏன் என்பதும் தெரிந்திருக்கும்

சரி, சென்னை வந்த அமெரிக்க கப்பல் என்ன ஆனது, அதன் பழுது சரிபார்க்கபட்டதா, அது எப்பொழுது கிளம்பும் என்பது பற்றி ஒரு தகவலையவாது எங்காவது பார்க்கமுடியுமா?

முடியாது

சரி, ஒரு காலத்தில் அமெரிக்க பெரும் எதிரியான வியட்நாம் இப்பொழுது அமெரிக்க கூட்டாளியான இந்தியாவிடம் முதல்தடவை பயிற்சிக்கு வரும்பொழுது அமெரிக்கா ஏன் எதிர்க்கவில்லை?

என்னதான் வியட்நாமும் அமெரிக்காவும் டிரம்பர் காலத்தில் கைகுலுக்கினாலும் இந்தியாவில் ஏன் வியட்நாமுக்கு பயிற்சிகள் வழங்கபடுகின்றன, அதை அமெரிக்கா ஏன் அனுமதிக்கின்றது

இதுதான் உலக அரசியல் அது அப்படித்தான் இருக்கும்.

உலக அரசியல் இப்படித்தான் செய்திகளை வழங்கும், அங்கொன்றும் இங்கொன்றுமாக ரகசிய செய்திகள் மேலோட்டமாக கசியவிடபடும் அதை படித்து பொருத்தி உண்மையினை நாமாகத்தான் அறியவேண்டும்

ஆக வியட்நாமுக்கு நீ வந்தால் இலங்கைக்கு நான் வருவேன் என்பது சீனமிரட்டல், அதையே இலங்கைக்கு நீ வந்தால் வியட்நாமுக்கு நான் வருவேன் என திருப்பி மிரட்டுகின்றது இந்தியா

மோடியின் இந்தியா

ஆம் லடாக்கிலோ இலங்கையிலோ சீனா வந்து வாலாட்டமுடியுமென்றால் தன்னால் சீனாவின் தென் எல்லையிலும் வந்து அடிக்க முடியும் என சீனாவுக்கு பெரும் எச்சரிக்கை செய்கின்றது இந்தியா