இரண்டு ரோபோ
விண்வெளியில் உலக நாடுகள் அமைத்திருக்கும் விண்வெளி நிலையத்தில் மனிதர்கள் தங்கி இருப்பார்கள்
சில நேரம் அவர்கள் சில காரணங்களுக்காக வெளிவர வேண்டி இருக்கும், விண்வெளியில் உள்ள பல சிக்கல் காரணமாக அதில் மனிதர்களை பயன்படுத்துவது ஆபத்தானதும் சவால் நிறைந்ததுமாகும்
இதனால் ரஷ்யா ஒரு ரோபோவினை செய்து விண்வெளிக்கு அனுப்பியிருக்கின்றது
வழக்கமாக மனிதன் அமர்ந்து கிளம்பலாம் என சொல்லும் வார்த்தையினை ஒரு ரோபோ சொல்லி விண்வெளி நோக்கி சென்றிருக்கின்றது
இனி அது விண்வெளி நிலையத்தை சென்றடையும், அங்கு மனிதர்கள் செய்யும் சவாலான பணியினை அது செய்யும்
இப்பொழுதெல்லாம் ரஷ்யர்கள் ரோபோவில் அதிக கவனம் எடுக்கின்றார்கள், ராணுவம் முதல் சகலத்திலும் ரோபோவினை நிறுத்த பெரும் ஆய்வுகள் நடக்கின்றன
இனி ரஷ்ய விஞ்ஞானிகள் கட்டளை கொடுக்க கொடுக்க அந்த ரோபோ வேலை செய்யும்
இதை உலகம் ஆச்சரியமாக கவனிக்கின்றது, ஆனால் பரிதாபமான உலகிற்கு ஒரு உண்மை தெரியவில்லை
இந்தியாவில் ஒரு விஞ்ஞானி இரண்டு ரோபோக்களை வைத்து ஒரு மாநிலத்தையே ஆளுகின்றார், அவைகளும் சமத்தாக செயல்படுகின்றன
மோடி என்ற அந்த விஞ்ஞானி பழனிச்சாமி பன்னீர் என இரண்டு ரோபோக்களை உருவாக்கியுள்ளார் , அவை சென்னையில் இயங்குகின்றன
இந்த ரோபோக்களின் சிறப்பு என்னவென்றால் மோடி கட்டளை கொடுக்க வேண்டாம், வாயே திறக்க வேண்டாம்
அவர் மனதில் நினைத்ததை இந்த ரோபோக்கள் சட்டென புரிந்து உடனே வேலையினை செய்துவிடும்
இந்த அதிசய ரோபோக்கள் பற்றி உலகநாடுகள் அறியும் பொழுது நிச்சயம் மோடிக்கு பல ஆண்டுக்கான நோபல் பரிசு மொத்தமாக கொடுக்கபடும்
