இலங்கையில் நடைபெற்ற தொடர்
இலங்கையில் நடைபெற்ற தொடர் போராட்டம் பெரும் வன்முறையில் முடிந்துள்ளது, பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் தன் பதவியினை துறந்துள்ளார்
அந்த தீவு நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக சில வாரங்களாக நடக்கும் ஆட்சிக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்தது, பதவி விலகமுடியாது என பிரதமர் மகிந்த ராஜபக்சே அறிவித்த்தபின் நிலமை இன்னும் மோசமானது
அதிபர் கோத்தபாய ராஜபக்சே அவசரநிலை பிரகடனம் செய்தபின்னும் நிலமை சரியாகவில்லை, நேற்று அதிபர் மாளிகை முன் நடந்த போராட்டம் ஆங்காங்கே போராட்டகாரர்களுக்கும் ஆளும்கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையாயன் மோதலாக உருவெடுத்தது
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தாக்கபட்டபின் நிலமை மோசமானது, ஆளும் ராஜபக்சே கட்சியான பொதுஜன பெருமுன கட்சியினர் போராட்டகாரர்களுடன் நேரடியாக மோதினர்
அந்த மோதலில் முன்னாள் எம்பி அமரகீர்த்தி அதுகொரால என்பவர் போராட்டகாரர்களை நோக்கி சுட்டதாகவும் அதனால் போராட்டகாரர்கள் அவரை தாக்கியதில் அவர் பலியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
நிலமையின் வீரியத்தை தொடர்ந்து நேற்று மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்
ஆனாலும் அதிபராக மகிந்தாவின் சகோதரர் கோத்தபாய இன்னமும் நீடிக்கின்றார், இலங்கை அரசியலமைப்புபடி அதிபரே பெரும் அதிகாரங்களை கொண்டவர், நிழல் அதிபர் எனும் வகையில் மகிந்தாவின் மறைமுக ஆட்சி இன்னமும் நீடிக்கின்றது
தொடர்ந்து கலவரங்கள் நடக்கின்றன, ராஜபக்சேவின் சொத்துக்கள் சில எரிக்கபடுகின்றன
இலங்கையின் நிலை சிக்கலானதை தொடர்ந்து அதிபர் கோத்தபாய ராஜபக்சே விரைவில் இந்தியாவின் டெல்லிக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
இலங்கையில் 1970களின் கம்யூனிச போரட்டங்கள், 1980களின் தமிழ் போராளி மோதல்கள் என இலங்கை அரசுக்கு சிக்கல் வரும்பொழுதெல்லாம் இந்தியாதான் களமிறங்கும், இன்னொரு நாட்டை இந்தியா அங்கு அனுமதிக்காது
அவ்வகையில் இம்முறையும் இந்தியா களமிறங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது, விரைவில் சில காட்சிகளை காணலாம்
எது எப்படியாயினும் இன்னும் சிலமாதம் அல்லது அடுத்த தேர்தலில் தமிழக தெருக்களில் இப்படி ஒரு குரல் ஒலிக்கும்
“என்ன நடந்து கொழும்புல.. என்ன நடந்து?
ராஜபக்சேவுக்கு எதிரான போராட்டத்துல கன்னத்துல மரு வச்சிட்டு நின்னவன் நானேதான் ஒரு பயலும் கண்டுபிடிக்க முடியலியே, ஏண்ணா அண்ணன் எனக்கு கத்து கொடுத்த சிங்களம் அப்படி
ராஜபக்சேவ குறிவச்சி நான் அடிக்கும் போதுதான் அந்த எம்பி மாட்டிகிட்டான், இல்லண்ணா ராஜபக்சே அவ்வளவுதான்
அவன் என்ன சொல்லி பதவி விலகுனான் தெரியுமா? இப்ப சொல்றேன்
பிரபாகரன கூட சமாளிக்கலாம் சீமான் வந்துட்டான் எனக்கு பயமாயிருக்கு… புஹஹஹா புஹஹஹா புஹஹஹா”
மக்களை வதைத்தால் இதுதான் கதி..
ஸ்ரீலங்கா நல்லபடியா இருக்கும் ஏனென்றால் ராஜபக்சே ராஜினாமா செய்துவிட்டார்…. ஆனாலும் ரொம்ப over…. சீமான் உஙகள் பதிவுகளில் நொந்து நூடுல்ஸ் ஆகி விடுகிறார்… நீங்கள் ஒருவர் போதும் சீமானை கலாய்க்க