ஈரோட்டு ராம்சாமி இல்லையென்றால்

ஈரோட்டு ராம்சாமி இல்லையென்றால்….

ஈரோட்டு ராம்சாமி இல்லையென்றால் கல்வி இல்லை, பெண் உரிமை இல்லை என சொல்லும் கோஷ்டி சொல்லிகொண்டேதான் இருக்கும், உண்மையில் ராம்சாமி என்ன கிழித்தது என்றால் ஒன்றுமே இல்லை

வைக்கம் போராட்டத்தில் கூட ஏற்கனவே நடந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவராக கலந்துகொண்டாரே அன்றி அப்போராட்டத்தை ராம்சாமி தொடங்கவுமில்லை தலமையேற்று நடத்தவுமில்லை

ஆங்கில அடிவருடியான நீதிகட்சியில் ராம்சாமி இணைந்தார், ஆனால் அக்கட்சி அவரை எந்த பதவியிலும் அமர்த்தவுமில்லை, மக்கள் பிரநிதியாக ராம்சாமி ஆட்சியில் இருந்து எந்த உத்தரவும் இடவுமில்லை

பின் சுயமரியாதை இயக்கம், திராவிட கழகம் தனக்கு சில கைகூலிகள் அடியாட்கள் கூலிக்கு எழுதுபவன் என சிலரோடு சுற்றிகொண்டிருந்தாரே தவிர அவரின் போராட்டமே பேச்சோ எழுத்தோ இங்கு ஒருமாற்றமும் கொண்டு வரவே இல்லை

வெள்ளையனுக்கு ஆதரவாக அவர் என்னவோ பேசிகொண்டிருந்தபொழுது தமிழகம் உள்ளிட்ட சென்னை மாகாண பகுதிகள் அவரை இடதுகையால் ஒதுக்கிவிட்டு அதன் போக்கில் தேசியத்தில் இருந்தது

தான் ஒரு செல்லாகாசு என்பதை உணர்ந்துதான் ராம்சாமி தனிகட்சி தொடங்கவில்லை அமைதியாக புலம்புவதை புலம்பிகொண்டே இருந்தார்

ராம்சாமியிடம் இருந்தால் உருப்படமுடியாது என்றுதான் திமுக தனி கட்சி கண்டது, அதுவும் அச்சில் ஏற்றமுடியா வகையில் திமுகவினருக்கும் ராம்சாமிக்கும் அறிக்கைபோர் வார்த்தைபோர் மூண்டது

காமராஜரின் ஆட்சி தமிழகத்துக்கு பொற்காலம், அது தேசிய ஆட்சியாக இருந்ததே தவிர திராவிட ஆட்சியாக இல்லவே இல்லை

இட ஒதுக்கீடு போன்றவை அம்பேத்கர் எழுதிய சட்டம் மூலம் வந்ததே தவிர ராம்சாமி முதல்வராக பிரதமராக அமைச்சராக இருந்து எழுதிய உத்தரவில் வரவே இல்லை

ராம்சாமி உண்மையில் நாம் தமிழர் சைமன் போல் கத்திகொண்டிருந்தார் அவரை கண்டுகொள்ளவும் யாருமில்லை

காமராஜரை பட்டவர்த்தனமாக ராம்சாமி ஆதரிக்க திமுக எதிர்த்து கொண்டிருந்தது

ராம்சாமி திராவிட நாட்டை மறந்த நிலையில் அண்ணா கத்திகொண்டே இருந்தார்

திமுக ராம்சாமியின் அனைத்து கொள்கையிலும் தடம்மாறியது, கடவுள் இல்லை என ராம்சாமி சொன்னால் திருமூலரின் “ஒன்றே தேவன்” என திமுக சொல்ல தொடங்கியது

இப்படிபட்ட காலத்தில்தான் நடிகரான எம்ஜி ராம்சந்திரனை திமுக முன் நிறுத்தியது அதனை கண்டித்தவர் ராம்சாமி

ஆம், திமுக ராம்சாமி கொள்கையோ இல்லை தங்கள் கொள்கையோ விளக்கி வாக்கு கேட்கவில்லை மாறாக ராம்சந்திரனை முன்னிறுத்தியே வாக்கு கேட்டது

அதனில்தான் அது ஆட்சிக்கே வந்தது ஆக திமுக வெல்ல அதன் திராவிட கொள்கையோ ராம்சாமியோ காரணமே அல்ல, ஒரே காரணம் எம்ஜிஆர்

அதனை எம்ஜிஆர் தனிகட்சி தொடங்கி காட்டினார், பின் ஜெயா நிரூபித்தார் இன்றுவரை அதிமுக நிரூபிக்கின்றது

ராம்சாமியினை இம்மண் ஒரு காலமும் ஏற்றதுமில்லை ஏற்க போவதுமில்லை என்பதை காலம் சொல்லிகொண்டே இருக்கின்றது

இம்முறையும் திமுக வீரமணியினை முன்னிறுத்தி ராம்சாமி கொள்கைகளுக்காக வாக்கு கேட்கவுமில்லை பேசவுமில்லை

10 வருட அதிமுக ஆட்சியின் அதிருப்தித்தான் திமுகவுக்கு சாதகமே தவிர ராம்சாமியின் கொள்கைகள் அல்ல‌

திமுகவுக்கும் இது தெரியும், அது அதனால்தான் ஏதோ கூட்டணி தந்திரத்திலும் தேர்தல் மைய வாக்குசாவடி வித்தைகளிலும் தன்னை காட்டி நிறுத்துகின்றதே தவிர அதற்கு தனிபட்ட மக்கள் அபிமானம் குறைவு

மக்களின் பெரும் அதிருப்தி, சினிமா மோகம், கூட்டணி குழப்பம் என ஏதோ ஒரு அதிர்ஷ்டத்தில்தான் திமுக ஆட்சிக்கு வருமே தவிர ஒரு காலமும் அதற்கு ராம்சாமி கொள்கையோ இதர மண்ணாங்கட்டியோ காரணம் அல்ல‌

ராம்சாமி கடைசி வரை பெரும் பதவியில் இல்லாத ஆசாமி , அவரின் போராட்டமும் கோரிக்கையும் இங்கு எந்த மாற்றமும் ஏற்படுத்தவில்லை

அவர் பெரும் கல்வி நிலையங்களும் கல்லூரிகளும் தொடக்கத்தில் நடத்தியவரும் அல்ல, பெரும் பட்டதாரிகளை உருவாக்கியவரும் அல்ல‌

சில மேடை பேச்சு, ஒரு பத்திரிகை என சதா சர்வ காலமும் இந்துக்களையும் பிராமணர்களையும் பிரிட்டிஷ் ஏஜெண்டாக திட்டிகொண்டே இருந்தார், சுதந்திர இந்தியாவில் திமுகவினை திட்டிகொண்டே இருந்தார்

இதுதான் அவரின் சாதனை, அவரின் பெரும் சாதனை ஆட்சியில் இருப்போரை பகைக்காமல் சென்றது கடைசி வரை அது ஒன்றில் சரியாக இருந்தார், காரணம் அவருக்கு சொத்துக்கள் இருந்தன‌

அப்படிபட்ட ஆசாமி, நாம் தமிழர் தும்பி போல கத்திகொண்டிருந்த ஆசாமி அதை கிழித்தார் இதை கிழித்தார் என்பதெல்லாம் இந்த நூற்றாண்டின் மிகபெரிய காமெடி

ராமசாமி இல்லையென்றால் வீரமணிக்கு சோறு கிடைத்திருக்காது அது ஒன்றுதான் நடந்திருக்கும்…