எம் ஜி ஆரின் உள்ளும் புறமும்

Image may contain: 2 people

சினிமாவினை தவிர பெரும்பாலும் தன் சுய அனுபவத்தை, மனசாட்சியினை பதிவு செய்தவர் கண்ணதாசன்

பாடல்களை தவிர அவர் எங்கும் கற்பனையில் பொய்யில் எழுதியதில்லை..

அவரை பற்றிய கருப்பு பக்கங்களை கூட அவர் மறைக்கவில்லை

அப்படிபட்ட கண்ணதாசன் எழுதி வெளிவரமால் போன புத்தகம் “எம்ஜிஆர் உள்ளும் புறமும்”

ஒரு பெரியவர் சொல்வார், கண்ணதாசனின் பேச்சு கவிதை போலவே இருக்கும், அதுவும் அரசியல் பேச்சுக்கள் அப்படி இருக்கும், ஒருமுறை சொன்னார்

“அவர் சினிமாதுறையில் பிரபலமானவர், படப்பிடிப்புக்கு சென்ற எல்லோருக்கும் அவரை தெரியும்

குழந்தை மனமுள்ளவர், கபடமில்லாதவர்

அவருக்கொரு மனைவியுண்டு, அழகிலே சாகுந்தலை சாயலளவள்

எல்லோரையும் போல அந்த சண்டாளனையும் அவர் வீட்டிற்குள் அனுமதித்தார்,

சண்டாளன் அவர் இல்லாநேரம் ஒருமுறைதான் அவர் வீட்டிற்கு சென்றான், எதற்கு சென்றான் என்பது சண்டாளனை அறிந்த அனைவருக்கும் தெரியும்

அன்றே அந்த பெண் தூக்கில் தொங்கினாள், ஆம் அவள் உத்தமி

அவள் உடலால் செத்தாள், மனதால் செத்து அவனால் நடைபிணமானவர்கள் ஏராளம் உண்டு”

இப்படி எல்லாம் கவிஞர் யாரைபற்றி பேசினார் என்பது நமக்கு தெரியாது,

தெரியாமல் போகட்டும்

ஆனால் எம்ஜிஆரை பற்றி புத்தகத்தில் என்ன எழுதியிருக்கின்றார் என தெரிந்துகொள்ள ஆசை.

அந்த புத்தகத்தை எம்ஜிஆரே தடை செய்திருந்தார் என்றால் எப்படி இருந்திருக்கும்?

எங்கும் தேடியும் கிடைக்காத புத்தகம் அது

யார் கையிலாவது இருந்தால் கைநீட்டி யாசகம் கேட்கின்றேன்

கவிஞரின் எழுத்துக்களில் மகோராவினை படிப்பது மிக மிக மகிழ்வான அனுபவமாக இருக்கும்.

யாரிடமாவது அந்த புத்தகம் இருக்கின்றதா?

நெடுநாளாக தேடிகொண்டிருக்கின்றேன், யாரிடமாவது இருந்தால் கொடுத்து உதவுங்கள்..