எம் தேசம் ஒரு காலமும் அசையாத
இலங்கையில் நடப்பது போல இந்தியாவிலும் சீரழிவுகள் நடக்கும் என அரசியல் பேசுபவனெல்லாம் நிச்சயம் நல்ல இந்தியனாக இருக்கமுடியாது
இவர்களுக்கு இலங்கை போல இந்தியாவும் ஆக வேண்டும் எனும் பெரும் கேடுகெட்ட பேராசை அன்றி வேறேதும் இருப்பதாக தெரியவில்லை, அரசியல் எனும் பெயரில் மோடி வெறுப்புக்கும் நாட்டுபற்றுக்கும் வித்தியாசமில்லாமல் அரைவேக்காட்டுதனமாக புலம்பிகொண்டிருக்கின்றார்கள் பதர்கள்
அரசுகள் வரும் போகும், தலைவர்களும் கட்சிகளும் வருவார்கள் போவார்கள், ஆனால் நாடு நிலையானது அதன் ஸ்திரதன்மையும் வளர்ச்சியும் முக்கியமானது
மோடியின் ஆட்சியில் ஆசியாவில் எண்ணெய் வளமும் (அரேபியா), உலக சந்தையில் சலுகைகளும் (ஜப்பான், தென்கொரியா, தைவான்) இல்லாத நாடுகளெல்லாம் தடுமாறும் பொழுது இந்தியா தனித்து ஜொலிக்கின்றது
இந்தியாவின் பொருளாதாரஸ்தரன்மை கொரொனா காலத்திலும் அசையவில்லை, சொந்தமருந்து கண்டறிந்து உலக கொரோனா போரில் நம்நாடு யாருக்கும் அடிமையாகாமல் தனித்து நிற்கின்றது
இலங்கையில் நடந்தது உள்நாட்டு அரசின் சொதப்பல் அல்ல, அது சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார காரணம், செய்த பாவங்களுக்கு தப்பிய ராஜபக்சே செய்யா பாவங்களுக்கு ஓடி ஒளிகின்றார்
அவரின் ஒரே தவறு சீனாவின் மேலான அபிமானம், புலிகளை ஒழிக்க இந்தியாவினை தாண்டி சீனாவினை இழுத்துவந்த தவறு அதுதான் அவர் முதுகில் ஓங்கி ஓங்கி அடிக்கின்றது
அதிபர் கோத்தபாயாவினை விட்டுவிட்டு மகிந்தாவினை போராட்டகும்பல் குறிவைக்கின்றதென்றால் அதுவும் ஓட ஓட அடிக்கின்றதென்றால் இதன் பின்னணியில் உள்ளவை எல்லாம் வேறுவிதமான அரசியல்
ஆக அண்டை நாட்டில் நடக்கும் அலங்கோலமெல்லாம் நம் நாட்டிலும் நடக்கும் என சொல்பவன் தேசவிரோதி, அப்படி சொல்பவன் உரிய காரணங்களை சொல்லியாவது இந்தியாவின் பொருளாதார நிலையினை சொல்லியாவது விளக்கலாம் அது மக்களுக்கும் அரசுக்கான ஆலோசனை என்றாவது வரும்
அதைவிடுத்து அண்டைநாடு எரிவது போல் நாமும் எரிவோம் என்பதெல்லாம் மனகோளாறும் ஒருவித வன்மமும் கொண்ட, நாட்டுபற்று இல்லாத, இந்நாட்டின் உப்பை தின்று இங்கு சுகமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் விசுவாசம் இல்லா மடத்தனம், முழு மூடதனம்
இவர்களால் நாட்டுக்கு எந்த உபயோகமும் இல்லை “நிலசும்மையென ” அவர்களை சுமக்க வேண்டியது தேசத்தின் தலைவிதி, இந்த பதர்களின் முட்டாள்தனம் கண்டு பரிதவிக்கின்றார்கள் தேசாபிமானிகள்
எம் தேசம் ஒரு காலமும் அசையாத பொருளாதாரபலம் கொண்டது, இந்நாட்டின் இந்துமத கலாச்சாரமும் அது கொடுத்த வாழ்வியலும் அப்படியானது
ஆயிரம் ஆண்டு ஆப்கானியர் ஆட்சியில் கூட அந்நிய தேசத்துக்கு யாரும் அகதியாய் செல்லவில்லை
முன்னூறு வருடம் இந்நாட்டின் செல்வத்தையெல்லாம் வெள்ளையன் அட்டை பூச்சியாக உறிஞ்சபொழுதும் இத்தேசம் அசையவில்லை
பெரும் ரத்தகளறி தீரா போர்கள் ஓயா தீவிரவாத தொல்லை, பெருங்குழப்பதிற்கு இடையிலும் 75 ஆண்டுகளில் உலகின் முன்னணி தேசமாக வளர்ந்து நிற்கின்றது
இந்நாடு ஒரு காலமும் வீழாது, அப்படி வீழவேண்டும் என ஆசைபட்டவனெல்லாம் அழிவானே தவிர இந்த தர்ம பூமி வீழாது, எத்தனையோ பேர் இந்நாடு வீழவேண்டும் என விரும்பி அவர்கள்தான் வீழ்ந்தார்கள், அப்படி இனியும் வீழ சிலர் தயாராகின்றார்கள் அதனால்தான் இப்படி உளறிகொண்டிருக்கின்றார்கள்
இந்தியாவின் பெருமையை உணர்ந்தவர்கள் இப்படி பேச மாட்டார்கள். இந்தியாவின் பழமையை நினைத்து பாருங்கள்…ஆங்கிலேயர்கள் இங்கு ஊடுருவும் முன்பு, இந்தியா பணக்கார நாடாகத்தான் திகழ்ந்தது. சூரியனை பூமி சுற்றி வர எடுத்துக் கொள்ளும் நாட்கள் எத்தனை என்பதை, ஐரோப்பிய வான சாஸ்திரி ஸ்மார்ட் கண்டுபிடித்து கூறுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, அதாவது, கி.பி.5-ம் நூற்றாண்டிலேயே இந்தியாவின் பட்டாச்சாரியர் கண்டுபிடித்துவிட்டார்.
கணித சாஸ்திரத்தில், பை என்பதன் மதிப்பைக் கணக்கிட்டவர் புதையனார் என்ற இந்தியரே. ஐரோப்பிய கணித மேதைகள், பித்தகோரஸ் தேற்றத்தை, விளக்குவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன், அதாவது, கி.பி.6-வது நூற்றாண்டிலேயே விளக்கினார் புதையனார்… தேச பக்தர்கள் யாரும் இப்படி நினைக்க மாட்டார்கள்… பாரதம் ஓரு அறிவு கடல். எத்தனை பாரம்பாரியத்தை கொண்டு விளங்குகிறது…. எதிர் எண்ண ஓட்டம் உள்ளவன் தான் இப்படி நினைப்பான்.P