ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 8 – அர்ச்சனை / குறள் : 09

ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 8 – அர்ச்சனை / குறள் : 09

“பேராக் கருத்தினாற் பிண்டத்தி னுண்ணினைந்
தாராதனை செய்யு மாறு”

இக்குறள் “பேரா கருத்தினால் பிண்டத்தின் உண்ணினைந்து ஆராதனை செய்யு மாறு”

அதாவது ஒருமித்த ஒரே சிந்தனையால் (பேரா கருத்தினால்) உடலினினுள் (பிண்டத்தின்) ஆன்மாவோடு இணைந்த நிலையில் மனதால் வழிபட வேண்டும் என்று பொருள்

அசையாத ஒரே சிந்தனையோடு உடலும் உள்ளமும் ஒரு புள்ளியில் இணைந்த நிலையில் மனதால் சிவனை வழிபட வேண்டும் என்பது பொருள்

உள்ளும் புறமும் தூய்மையான நிலையில் இறைவனை ஞானத்தால் தேடி மனதால் வழிபட வேண்டும் என்கின்றார் ஓளவையார்