பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காவல்துறை என்பது மாநில அரசின் அடியாள்

Image may contain: one or more people and outdoor

ஸ்னைப்பர் எனப்படும் தொலைவில் இருந்து மிக சரியாக போராட்ட குழுவின் முன்னணிநபர்களை மண்டையில் சுடுவதெல்லாம் இஸ்ரேல் பாணி

சந்தேகம் வராமல் இருக்க சிலரை கூட சுடுவார்கள்

பாலஸ்தீனத்தில் அது அனுதினமும் இதைத்தான் செய்கின்றது

ஒருகாலமும் இந்த பூமியில் அச்சாயல் நடக்காது என இறுமாந்திருந்தோம்

Image may contain: one or more people and outdoorஇங்கெல்லாம் வானத்தை குறிபார்த்து சுடுதல், கண்ணீர் புகை வீசுதல், நீர் அடித்து கலைத்தல், முழங்காலுக்கு கீழ் சுடுதல் என்றுதான் விஷயம் இருந்தது. பொதுவான விஷயம் அதுதான்

அந்த நம்பிக்கை எல்லாம் தகர்கின்றன. ஸ்னைப்பர் என்பது போர்களங்களில் தளபதிகளை மிக குறிபார்த்து அடிக்கும் வகை, மக்கள் போராட்டங்களில் இஸ்ரேல் தவிர யாரும் பயன்படுத்துவதில்லை

ஆனால் முதன் முதலாக இந்தியாவிலே முதன் முறையாக மண்டையில் சுட்டு பலர்த்த அதிர்ச்சியினை தேசத்திற்கே கொடுத்திருக்கின்றார்கள்

இதெல்லாம் இங்கு தீவிரவாதிகளுக்கு எதிராக கூட நடக்காத விஷயங்கள், மும்பை தாக்குதலில் கூட பாகிஸ்தான் தீவிரவாதிகளை இப்படி சுடவில்லை

இதெல்லாம் மகா அச்சமூட்டும் விஷயங்கள்

காவல்துறைக்கு வேறு ஏதோ சக்திகள் பயிற்சி அளிக்காமல் இதெல்லாம் சாத்தியமில்லை, எங்கோ உதைக்கின்றது

மிக கடுமையாக மாநில மக்களை மிரட்ட வேண்டும் என்ற திட்டத்துடன் மிக கொடிய பயிற்சிகளை ஏதோ ஒரு சக்தியிடம் இருந்து இவர்கள் பெற்றிருப்பது புரிகின்றது

இவ்வளவிற்கும் இது தீவிரவாதம், நக்சலைட்டு எல்லாம் உள்ள பகுதி அல்ல, பின் ஏன்?

மிகபெரும் அழிவுசக்தியினை திட்டமிட்டு தமிழக காவல்துறையில் சத்தமில்லாமல் புகுத்தியிருக்கின்றார்கள், ஏதோ பெரும் கணக்கு உள்ளது

காவல்துறை என்பது இனி மாநில அரசின் அடியாளாக இப்படித்தான் குதறிக்கொண்டிருக்கும்

பாலஸ்தீன கொடூர‌ காட்சிகளை நம் மண்ணில் காணும்பொழுது அதுகொடுக்கும் மனதளர்ச்சிக்கு வார்த்தை இல்லை

இனி விரைவில் ராணுவ டேங்குகளும், கப்பல் தகர்க்கும் ஏவுகனைகளும் தமிழரை குறிவைக்கும்

அடுத்த கட்டம் அதுதான்

அண்ணா நாமம் வாழ்க, புர்ச்சி தலைவன் வாழ்க, புர்ச்சி தலைவி வாழ்க, எடப்பாடி சுவாமிகள் வாழ்க வாழ்க‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *