குமர குருபரர் நீதிநெறி : 02

“தொடங்குங்காற் றுன்பமா யின்பம் பயக்கும்
மடங்கொன் றறிவகற்றுங் கல்வி – நெடுங்காமம்
முற்பயக்குஞ் சின்னீர வின்பத்தின் முற்றிழாய்
பிற்பயக்கும் பீழை பெரிது”

இப்பாடல் பொருள் கொண்டு பிரித்தால் இப்படி பிரியும்

“தொடங்குங் கால் துன்பமாய் இன்பம் பயக்கும்
மடம் கொன்று அறிவு அகற்றும் கல்வி நெடும்காமம்
முறபயக்கும் சின்னீர இன்பத்தின் முற்றி இழாய்
பிற்பயக்கும் பீழை பெரிது”

அதாவது தொடங்கும் பொழுது துன்பமாய் இருக்கும் பின் இன்பம் பயக்கும் அறியாமை (மடம்) கொன்று அறிவை விரிடைய செய்யும் (அறிவை அகற்றும் அதாவது அகலமாக்கும்) கல்வி

காமம் எனும் மயக்கம், பெண் மோக மயக்கம் முதலில் இன்பமாகும் பின் விந்து நீர் திரும் நிலை வந்தபின் அது கொடுக்கும் துன்பமும் இழிவும் பெரியது என்பது பொருள்

கல்வி தொடக்கத்தில் கடினமாய் துன்பமாய் இருந்தாலும் பின்னாளில் அது அறிவை விரிவடைய செய்து இன்பம் கொடுக்கும், பெண்களை சேர்தல் எனும் காமம் முதலில் இன்பத்தை கொடுத்தாலும் பின்னாளில் தீரா துன்பம் கொடுக்கும் என்பது பொருள்