குமர குருபரர் நீதிநெறி : 04
குமர குருபரர் நீதிநெறி : 04
“எத்துணைய வாயினுங் கல்வி யிடமறிந்
துய்த்துணர் வில்லெனி னில்லாகும் – உய்த்துணர்ந்தும்
சொல்வன்மை யின்றெனி னென்னாகு மஃதுண்டேற்
பொன்மலர் நாற்ற முடைத்து”
இந்த பாடல் இப்படி பிரிந்து பொருள் தரும்
“எத்துணையவாயினும் கல்வி இடம் அறிந்து
உணர்வில்லை எனில் இல்லாகும் உய்த்து உணர்ந்தும்
சொல்வன்மையின்று எனின் இன்னாகும் அஃது உண்டேற்
பொன்மலர் நாற்றம் உடைத்து”
யாராக இருந்தாலும் கல்வியினை சரியாக உணர்ந்து படிக்காவிட்டால், உணர்வோடு படிக்காவிட்டால் அது கல்வி ஆகாது, அப்படி மிக நுணுக்கமாக கற்றும் அதை பிறருக்கு எடுத்து சொல்லும் நாவன்மை இல்லையென்றால் அதனால் பலனில்லை, அப்படி சொல்வன்மை இருந்தால் அது தங்கத்தில் செய்த மலருக்கு மணம் உண்டானது போல் சிறப்பானது
(அதாவது கற்றும் சரியாக எடுத்தியம்பும் திறன் இல்லாவிட்டால் அது தங்கத்தால் செய்தாலும் அம்மலருக்கு மணம் இல்லாதது போல் வீணானது)
கல்வியினை திறம்பட உணர்ந்து கற்றல் வேண்டும், கற்றதை பிறருக்கு எடுத்து சொல்லும் திறனும் வேண்டும் என்பது பாடலின் பொருள்
கல்வியை முறையாக் கற்று, அதை மற்றவர்க்கு எடுத்து கூற வேண்டும். தான் கற்ற கல்வியை தான் மட்டும் பயன் அடையாமல் மற்றவர்களுக்கும் செவி வழியாக கூற வேண்டும்… இதையே வள்ளுவர் கற்றலில் கேட்டல் நன்று என கூறி உள்ளார்.