கொடுத்துவைத்த முதல்வர்

தமிழக சட்டசபை கூட்டம் நடக்கின்றது

சென்னை குடிநீர் தட்டுப்பாடு, ஹைட்ரோ கார்பன் சிக்கல், அணுகழிவு மையம், இன்னும் திறக்கபடாத காவேரி, நீட் உட்பட இதற பிரச்சினைகள் எதுவுமே அங்கு எதிரொலிக்கவில்லை

அணல் காற்று வீசும் என எதிர்பார்க்கபட்ட சட்டமன்றத்தில் பூங்காற்று வீசுகின்றது

அதில் பொன் ஊஞ்சலாடிகொண்டிருக்கின்றார் பழனிச்சாமி.

அவருக்கு கேள்வி கேட்கவோ, நெருக்கடி கொடுக்கவோ யாருமில்லை

அவர் போக்கில் கேக் வெட்டுவது போல மாவட்டங்களை வெட்டி வெட்டி விளையாடுகின்றார், இன்னும் என்னவெல்லாமோ அறிவிகின்றார்.

சிக்க வைக்கும் விவாதமில்லை, நெருக்கடி ஏதுமில்லை, எதிர்கட்சியோ இல்லை தினகரன் கோஷ்டியோ அவரை நெருங்கவே முடியவில்லை, அட அவரை எதிர்க்க வேண்டும் என யாருக்கும் தோன்றவில்லை

மாநிலத்தில் சிக்கலே இல்லை என்பது போல அவை நடக்கின்றது, “மாதம் மும்மாரி மழை பெய்கின்றதா” என பழனிச்சாமி கேட்டு அதற்கு துதிபாடிகள் பதில் சொல்லும் காட்சி ஒன்றுதான் பாக்கி..

எத்தனையோ முதல்வர்கள் இருந்த நாற்காலிதான் அது

ஆனால் ஒவ்வொருவரும் அவ்வளவு சிரமபட்டிருக்கின்றனர்

ராஜாஜி, குமாரசாமிராஜா, காமராஜர், அண்ணா, கலைஞர்,ராமசந்திரன், ஜெயா போன்றோர் எல்லாம் அங்கு நெருப்பாற்றை நீந்தினர்

அதுவும் கலைஞர் எதிர்கட்சி என்றால் அணல் பறக்கும், சிலநேரம் நாற்காலி எல்லாம் பறக்கும்

ஆனால் மிக சுகபோகமாக ஒரு முதல்வர் இம்சை அரசன் வடிவேலு போல பழம்வெட்டி விளையாடி கொண்டிருக்கின்றார் என்றால் அது நம் பழனிச்சாமி ஒருவர்தான்.

வரலாற்றில் அவர்போல் கொடுத்துவைத்த முதல்வர் யாருமே இல்லை, இனியும் வரப்போவதில்லை