கோவையில் சிறிய விமானபடை தளம்

கோவையில் சிறிய விமானபடை தளம் உண்டு, வெள்ளையன் காலத்திலே நிறுவபட்டது. அதற்கு பல காரணங்கள் உண்டு. தொழில்நகரம் அதற்கான தொலைநோக்கு பாதுகாப்பு என பல காரணம் , வெள்ளையன் அப்படித்தான் அவனுக்கு ஆசிரமம் எல்லாம் கட்ட தெரியாது.
இப்பொழுது கோவையில் தமிழக காவல்துறை சார்பாக ஒரு அருங்காட்சியகம் திறந்திருக்கின்றார்கள், பழைய ராணுவ தளவாடம், கார்கில் போரில் பயன்படுத்தபட்ட டாங்கி ஒன்றும் வைக்கபட்டிருக்கின்றது, இன்னும் ஏராளமான ராணுவ பொருள், இந்திய ராணுவம் கைபற்றிய பொருள் பொருட்கள் வைக்கபட்டிருக்கின்றதாம்
அதில் ஒரு பொருள் சுவாரஸ்யமானது
அதாவது புலிகள் இந்தியாவில் நடமாடிய காலங்களில் இங்கு பல ஆயுதங்களை செய்தனர், இந்நாட்டு ராணுவம் அவர்களுடன் ஈழத்தில் சண்டையிட்ட காலத்திலே அது நடந்தது, பின் ராஜிவ் கொலைக்கு பின் புலிகள் அடித்து விரட்டியபொழுது அவைகளில் சில கைபற்றபட்டன
அப்படி கைபற்றபட்ட சிறிய நீர்மூழ்கி ஒன்று பார்வைக்கு வைக்கபட்டுள்ளது, வைத்தாகிவிட்டது அல்லவா? போதாதா, தும்பி கூட்டம் சென்று பார்த்துவிட்டு தமிழனின் வீரப்பெருமை பேசிவிட்டு வந்துகொண்டிருக்கின்றதாம்
விரைவில் ராமசந்திரனுக்கு பிரபாகரன் கொடுத்த ஏ.கே 47 துப்பாக்கியினையும் (அவருக்கு ஏன் துப்பாக்கி? அதுவும் கடத்தல் துப்பாக்கி??) வைகோவிற்கு பிரபாரகன் கொடுத்த சயனைடு குப்பியினையும் அதில் வைக்க வேண்டும்
இந்த மியூசியத்தை காண அங்கிள் சைமன் என்று செல்வாரோ தெரியாது, நிச்சயம் செல்வார், அதன் பின் விடுவார் பாருங்கள் கதை இப்படி
“இந்த நீர்மூழ்கி கட்டும் திட்டத்தை அண்ணன் என்னிடம் தான் ஒப்படைத்திருந்தார், நானும் தம்பிகளும் கட்டி, அண்ணனும் நானும் இதில் ஏறி மூழ்கி பார்த்தபொழுதுதான் இந்திய படை சுற்றி வளைத்தது, சாகசமாக அவரும் நானும் மீன் வேடத்தில் நீந்தி, மீணவர் வலைக்கும் சிக்காமல் தப்பித்தோம், வியப்பும் திகைப்பும் நிறைந்த தப்புதல் அது
ஒரு விஷயம் புரிஞ்சிக்கணும் இந்த நீர்மூழ்கி நாங்க சோதித்தபொழுது எங்களை இந்திய ராணுவத்திற்கு பிடித்து கொடுத்தது அய்யா கருணாநிதி, அவர் அந்த துரோகத்தை செய்யாவிட்டால் இந்நீர்மூழ்கியால் இலங்கையினை அழித்திருப்போம், என்றோ ஈழம் கிடைத்திருக்கும்” “