சாதி, மத பேதமற்ற சமத்துவபுரமாக திகழ்கின்றது சென்னை

சாதி, மத பேதமற்ற சமத்துவபுரமாக திகழ்கின்றது சென்னை : முக ஸ்டாலின்

டெல்லி, பெங்களூர், மாஸ்கோ, லண்டன், டோக்கியோ, வாஷிங்டன், சிங்கப்பூர், ஹாங்காங் இன்னும் ஏகபட்ட நகரங்களில் எல்லாம் சாதியும் மதமும் தலைவிரித்தாடுகின்றன‌

சென்னை மட்டுமே சமத்துவபுரமாக விளங்குகின்றது

காரணம் 400 ஆண்டுக்கு முன் கோட்டை கட்டியவர் பெரியார், அதன் பின் சாதி மத கலவரங்களை எல்லாம் ஓடுக்கி 300 வருடத்துக்கு முன்பே சமத்துவபுர சென்னை அமைத்தவர் தளபதி அண்ணா

100 வருடத்துக்கு முன்பே நவீன சென்னைக்கு சமத்துவபுரகொள்கையினை சட்டமாக்கியவர் கலைஞர்

சென்னை எனும் மெட்ராஸ் ஆந்திராவுக்கு செல்ல இருந்த நிலையில் அது எங்கிருந்தால் என்ன திராவிடத்தில்தான் இருக்கும் என சொல்லிவிட்டு மல்லாக்க கிடந்த கட்சி திமுக‌

அவர்களெல்லாம் இன்று சென்னைபற்றி பேச வந்துவிட்டதுதான் காலகொடுமை..