சிதறல்கள்

ஜமால் கொலையில் பல தகவல்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றது
முதலில் நம்பியார் ஸ்டைலில் “டேய் அந்த கசோகியினை தூக்கிட்டு வந்து என் முன்னால உயிரோடு போடுங்கடா” என்றுதான் மன்னர் சொல்லியிருகின்றாராம்
அப்படி அந்த 15 பேர் கொண்ட குழு சென்றிருக்கின்றது, முதலில் ஜமாலை பேசி மசியவைத்து சவுதிக்கு கொண்டு செல்லத்தான் திட்டமாம், முடியாத பட்சத்தில் மயக்க ஊசி போட்டு கொண்டு செல்ல டாக்டர் சகிதம் சென்றிருக்கின்றார்கள்
மிக நுட்பமான திட்டம்தான், ஜமால் சவுதி தூதரகம் உள்ளே வந்தது சிசிடிவில் இருப்பது போல் அவர் வெளி சென்றார் என்பதை காட்டுவதற்காக அவரை போல் ஒருவரை வெளியே எல்லாம் அனுப்பியிருக்கின்றார்கள்
விஷயம் எதில் சொதப்பியது என்றால், இவர்கள் சவுதிக்கு வா என்றதும் ஜமால் கத்தியிருக்கின்றார், அது பெரும் சலசலப்பினை ஏற்படுத்தியிருக்கின்றது
கத்திவிட்டார் இனி இவரை சவுதிக்கு அழைத்தது தெரிந்துவிடும் என்ற அச்சமும், மன்னர் உத்தரே மகேசன் உத்தரவு என்ற கடமை உணர்வும் சேர்ந்த குழப்பத்தில் இருந்திருக்கின்றது சவுதி உளவுதுறை
இவர் வரமாட்டேன் என்கின்றார், மன்னரோ தூக்க சொல்லியிருக்கின்றார், போடு ஊசியினை என குத்தியிருக்கின்றார்கள்
ஏற்கனவே வெளிதெரியாத நோயால் இருந்த ஜமால் பொட்டென போய்விட்டார் என்கின்றார்கள்
எப்படியோ அவரை கொல்ல திட்டமிடவில்லை, மாறாக அவரை கடத்த முயன்றபொழுது ஏற்பட்ட சிக்கலில் அவர் தவறுதலாக இறந்துவிட்டார் என்கின்றன சில செய்திகள்
இன்னும் பரபரப்பு ஓயவில்லை, ஓய்போவதுமில்லை
இம்மாதிரியான விஷயங்களில் மொசாத் புலி, அவர்கள் பயிற்சி அப்படி
சவுதி எனும் பூனை புலிபோல வேடம் போட்டு மாட்டிகொண்டது
நல்ல வேளையாக நம்ம ஊர் வைரமுத்து இப்படியாக பாடகிகளை கடத்தமுயன்று கொலை வழக்கில் எல்லாம் மாட்டவில்லை [ October 26, 2018 ]

============================================================================

ஹாங்காங் என்பது சீனாவின் கவுரவ அடையாளமாக சீனா கருதுகின்றது. சீனாவுடன் போர் புரிந்த வெள்ளையரிடம் அதை சமாதானத்திற்காக‌ குத்தகைக்கு வைத்தது
அந்த போர் அபினி போர் என வரலாறு சொல்லும், தன் குடிமக்களை போதை அடிமையாக்கி பிரிட்டிசார் ஹாங்காங்கை கைபற்றியதாக அது கருதிற்று
ஒப்பந்தம் முடிந்து 1997ல் ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கபட்டபொழுது சுயமரியாதை காக்கபட்டதாக கர்வபட்டது சீனா
ஆனால் ஹாங்காங் என்பது வளர்ந்துவிட்ட பகுதியும் மாறுபட்ட சுதந்திர கலாச்சாரமும் கொண்டது என்பதால் இன்றுவரை சுயாட்சி பிரதேசமாகவே சீனா கையாள்கின்றது
அந்த ஹாங்காங்கிற்கு இதுவரை கடல்வழிமட்டும்தான் இருந்தது, இப்பொழுது உலகம் வியக்கும் வகையில் பாலம் கட்டி அசத்திவிட்டார்கள்
உலகின் மிக நீண்ட பாலம் இதுதான், பாம்பன் பாலத்தை விட பல மடங்கு நீளமாது
இதில் ஒரு சிக்கலும் வந்தது, பாலம் கட்டினால் கப்பல் எப்படி போகும்? சிக்கலை எளிதாக தீர்த்தார்கள்
பாதி பாலத்தை கடலுக்குள் சுரங்கமாக விட்டு, பாதாளம் வழியாக ஹாங்காங்கோடு இணைத்தாயிற்று, மேலே கப்பல் கீழே சுரங்கத்தில் கார்கள்
இப்படி ஹாங்காங்கை மட்டுமல்ல அருகிருக்கும் மக்காவ் தீவினையும் பாலம் கட்டி இணைத்துவிட்டார்கள், ஹாங்காங் வியாபாரத்திற்கு என்றால் மக்காவ் சூதாட்டத்திற்கு பேர் போன தீவு
ஆம், சீனர்களின் சூதாட்டம் உலகறிந்தது, இன்னொன்று மக்காவ் போர்த்துகீசியரின் கையில் இருந்ததால் கோவா போன்று பல காரியங்களுக்கு பிரசித்தி
இப்படியாக அருகிருக்கும் தீவுகளுக்கு எல்லாம் பாலம் கட்டும் சீனா, விரைவில் தைவானுக்கு கட்டுவோம் என காமெடி செய்தாலும் செய்யலாம்
தைவன் தனிநாடு என்றாலும் எங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா சொல்ல, தைவானோ மறுக்கின்றது
சொல்லமுடியாது விரைவில் தைவானுக்கு பாலம் கட்டினாலும் கட்டும் சீனா
நாம் தமிழர் ஆட்சியில் கச்சதீவுக்கும் இப்படி அங்கிள் சைமன் பாலம் கட்டுவார் என உற்சாகமாக கனவில் இருக்கின்றது அங்கிள் கோஷ்டி
[ October 26, 2018 ]

============================================================================

ஒரு விஷயம் உன்னிப்பாக கவனித்தால் புரிகின்றது
இதுகாலம் கலைஞரின் உற்ற நண்பர்களாக இருந்தவர்கள் மேல் புகார்கள் குவிகின்றன‌
வைரமுத்தினை தொடர்ந்து சுபவீ என்பவரும் சிக்குகின்றார். சுபவீ மீது பாலியல் சர்ச்சை இல்லை எனினும் பாலியல் சர்ச்சையில் சிக்கியவரை காப்பாற்ற கட்ட பஞ்சாயத்து செய்ததார் என்ற சர்ச்சை வருகின்றது
மேடையில் பகுத்தறிவு பெண் விடுலை என பேசும் சுப வீ, உண்மையில் பெண் உரிமையினை மதிக்காதவர் என பாதிக்கபட்ட பெண்கள் கிளம்புகின்றார்கள்
வைரமுத்துவின் மேலான புகாரை சின்மயி தொடங்கி வைக்க, ஒரு டஜன் புகார்கள் குவிந்தாயிற்று. அவர்கள் சொல்லும் குற்றசாட்டு “மேலிடத்தில் என் செல்வாக்கு என்ன தெரியுமா?” என மிரட்டினார் வைரமுத்து
இப்பொழுது சுபவீ மேலான குற்றசாட்டை Kavignar Thamaraiதொடங்கி வைக்க‌ பல பெண்கள் வந்து நிற்கின்றனர், அதே சாயல் குற்றசாட்டுக்கள், “கலைஞரிடம் சொல்லியாச்சி” என்றே சுபவீ மிரட்ட தொடங்குவார்.
ஆக கலைஞர் பெயரை சொல்லி பலர் கடும் அழிச்சாட்டியம் செய்திருகின்றன, கலைஞர் இல்லா நிலையில் பலமிழந்த அவர்களை நேரம் பார்த்து ஆளாளுக்கு போட்டு அடிக்கின்றார்கள்
பல பெண்கொடுமை குற்றசாட்டுகளை எதிர்கொள்வோ, கலைஞர் நண்பர்கள் எனும் சங்கிலியில் இணைகின்றார்கள்
இன்னும் யாரெல்லாம் சிக்குவார்களோ தெரியாது, ஆனால் பட்டியல் நீளலாம்
உண்மையிலே கலைஞர் இவர்கள் அழிச்சாட்டியத்தினை கண்டு கொள்ளாமல் இருந்தாரா என்பது அவர் வந்து சொல்லாமல் யாருக்கும் தெரியபோவதுமில்லை என்பது வேறு விஷயம்
ஆனால் அவர் இல்லாத காலத்தில்தான் அவர் பெயரை சொல்லி எப்படி எல்லாம் அட்டகாசம் செய்திருக்கின்றார்கள் என்பது வெளிவருகின்றது
விரைவில் கலைஞர் சமாதியிலும் தர்மயுத்தம் அல்லது அடித்து சத்தியம் செய்தல் போன்ற காட்சிகள் நடைபெறலாம் போலிருகின்றது
[ October 26, 2018 ]
Image may contain: text
============================================================================

தீர்ப்பு கொடுத்துட்டாங்க‌ தீர்ப்பு, அண்ணன் ராசா சொன்னது சரியாகத்தான் இருக்கின்றது

ஏன்யா, திடீர்னு 20 தொகுதிக்கு தேர்தல் என அறிவித்தால் நாங்கள் வேட்பாளருக்கு எங்கே போவோம்?

[ October 26, 2018 ]
Image may contain: 1 person, closeup
============================================================================

20 தொகுதிக்கு தேர்தல் வந்தால் யாரை எதிர்த்து என்ன பேசுறது? எத சொல்லி வோட்டு கேட்க?

இந்த‌ முன் ஜாமீன் எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டு உள்ளே போயிர வேண்டியதுதான், வேற வழி இல்ல‌

தம்பிக கேட்டால் “தந்திரோபயமான பின்வாங்கல்” ன்னு சொல்லி சமாளிப்போம்

[ October 26, 2018 ]
Image may contain: 1 person, closeup
============================================================================

மக்கள் டிவியில் சில மருத்துவர்கள் மருத்துவ ஆலோசனை வழங்கி கொண்டே இருக்கின்றார்கள், எல்லா நோய்க்கும் அவர்களிடம் குணப்படுத்தும் ஆலோசனை இருக்கின்றது, இலவசமாக அள்ளி அள்ளி வழங்குகின்றார்கள்

ஆனால் இப்படிபட்ட மிகசிறந்த மருத்துவ சிகாமணிகள் இருந்தும் காடுவெட்டி குருவினை அவர்கள் தவறவிட்டதுதான் சோகம்

[ October 26, 2018 ]

============================================================================