ஞாநி சங்கரன் காலமானார் : ஆழ்ந்த அஞ்சலிகள்

தமிழக பத்திரிகையாளர்களின் முக்கியமானவரான ஞாநி சங்கரன் காலமானார் என்பது பெரும் வருத்தமளிக்கும் செய்தி
அவரின் எழுத்துக்களும், அவர் எழுப்பிய கேள்விகளும் தனித்துவம் வாய்ந்தவை, அதனால் பல எதிர்ப்புகளையும் சம்பாதித்தார்.
உண்மையினை எழுதியதால் பல பத்திரிகைகள் அவரை விரட்டின, அவரோ அஞ்சாமல் தனியே எழுதிகொண்டிருந்தார்
நாடக உலகிலும் அவரின் பங்களிப்பு உண்டு
நிச்சயமாக சொல்லலாம், ஒரு நல்ல பத்திரிகைகாரன் எப்படி இருக்கவேண்டுமோ அப்படி இருந்தார், எதற்கும் அவர் அஞ்சவில்லை.
பெரும் பொய்களும் இன்னும் பல அழிச்சாட்டியங்களும் வரும் பத்திரிகை உலகில் இறுதிவரை உண்மையினை உள்ளபடி எழுதிகொண்டிருந்தவர்
இந்த மக்களை நம்பி ஆம் ஆத்மி வேட்பாளராக தேர்தலில் எல்லாம் இறங்கினார், தினகரன் போன்றோர்கள் வெல்லும் தேர்தலில் இவர் வென்றிருந்தால்தான் அவமானம்
அவர் தோற்றது அவரின் தனிபட்ட கவுரவத்திற்கு கிடைத்த வெற்றி என்பதில் சந்தேகமில்லை.
காலத்தால் முந்திவிட்டார், இணைய தொடர்புள்ள இக்காலத்தில், எந்த எழுத்தாளனும் ஊடக பலம் இல்லாமல் தன் கருத்துக்களை துணிந்து சொல்லும் இக்காலத்தில் எழுத வந்திருந்தால் பெரும் புயலாக வீசியிருப்பார்.
“என்னை சந்திப்பவர்கள் எல்லாம் என் சொந்த ஊரில் கோவில் நிதி, கிணறு நிதி என்கின்றார்கள், ஒருவருக்காவது ஒரு நூலகம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை ..” என்ற அந்த வரிகள் மறக்க முடியாதவை
அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்