பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மாவீரன் புலித்தேவனுக்கு வீரவணக்கம் செலுத்துவதில் தேசம் பெருமை அடைகின்றது

முன்பே பல இடங்களில் பார்த்திருக்கின்றோம், அலாவுதின் கில்ஜியின் படைகள் மதுரையினை தாக்கும் வரை சிக்கல் இல்லை இங்கே பாண்டிய மன்னரின் வாரிசு சண்டை அவனுக்கு வாய்ப்பாகவும் இருந்தது இஸ்லாமிய படையெடுப்பினை தடுக்க நாயக்கர்கள் மதுரை வந்தனர், இத்தோடு பாண்டிய வம்சம் மதுரையில் இருந்து அகற்றபட்டது ஆனால் பாண்டியர்கள் முழுவதும் ஒழியவில்லை, தென்காசி , செவல், வள்ளியூர் போன்ற பகுதிகளில் சிற்றரசர்களாக நீடித்தனர் அவர்கள் நாயக்க மன்னர்களோடு உறவு கொண்டாலும் தனி அரசர்களாகவே நீடித்தனர் மதுரையினை ஆண்ட வெள்ளையர்கள் […]

இன்று டயானாவின் நினைவுநாள்

கடந்த நூற்றாண்டில் அரசியல், பொதுசேவை, விஞ்ஞானம், ஊழல்,கொலை,கொள்ளை என பல துறைகளில் முத்திரை பதித்த பெண்கள் உண்டு, அதில் தன் வசீகரத்தாலும், எளிமையாலும், சேவையாலும் உலகை வென்றெடுத்த பெண்களில் முதன்மையாவர் டயானா ஒரு விசித்திரமான பெண்மணி அவர், அதனை விட மகா விசித்திரமானது அவர் வாழ்வு எந்த பெருமைக்கும், புகழுக்கும், பதவிக்கும் ஆசைபட்டு தன் சுதந்திரத்தை தொலைக்காமல் , தான் விரும்பிய வாழ்வினை வாழ்ந்தவர் அவர், அவரின் பலமும் அது, பல்வீனமும் அதுவே சிறுவயதில் பள்ளிக்கு செல்லவில்லை, […]

கலைவாணரை பற்றி நிறைய எழுதலாம்

கலைவாணரை பற்றி நிறைய எழுதியாகிவிட்டது ஆனாலும் அவரின் சுபாவம் மறுபடி மறுபடி நினைவுக்கு வருகின்றது அவர் கார் விபத்துகுள்ளாகி சரிகின்றது, சாவகாசமாக எழும்புகிறார் கலைவாணர், சுற்றி பார்க்கின்றார். காரிலிருந்து விழுந்த ஆரஞ்சு பழம் சிதறிகிடக்கின்றது, டிரைவரை எழுப்பி அவருக்கு 2 சுளை கொடுத்துவிட்டு சாலையோரமாக அமர்ந்து பழம் சாப்பிடுகின்றார் பின்னால் வந்த வாகனம் ஒன்று நிற்கின்றது, அலறி அடித்து ஓடி உதவ வந்தவர் என்ன ஆயிற்று என கேட்கின்றனர், பதற்றமே இன்றி சொல்கிறார் கலைவாணர் “அது ஒண்ணுமில்லீங்க..காரை […]

நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன்

கலைகளுக்கும் தமிழுக்கும் பெயர் பெற்ற தென்னகத்தில் அதற்கு அடையாளமாய் பலர் உண்டு அங்கிருந்து பலர் வந்தாலும் தனித்து அடையாளிமிட்டவர் என்.எஸ். கிருஷ்ணன். நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன். வடசேரி பக்கம் மளிகை கடைகளில் பணியாற்றிவர், டென்னிஸ் கோர்ட்டில் எடுபிடி, பின் வில்லுபாட்டு கலைஞன் அதன் பின்புதான் நாடக கம்பெனி நடிகன் தமிழ் திரையுலகம் பேசா படங்களிலிருந்து, பேசும் படங்கள் வந்த காலத்தில் அவர் நாடக கம்பெனியில் இருந்து சினிமாவிற்கு வந்தார். அக்காலத்தில் எம்ஜிஆர், கலைஞர் அறிமுகமான காலமது, அப்பொழுதுதான் […]

இன்று அன்னை தெரசா பிறந்தநாள்

இன்று அன்னை தெரசா பிறந்தநாள், இப்பொழுது பதிவு எழுதியவுடன் சங்கிளுடன் மல்லுகட்ட வேண்டும் அன்னையின் தொன்டை பற்றி சொன்னால் “ஏ சதிகாரா, நீ கிறிஸ்தவன் அவள் கிறிஸ்தவச்சி, மதமாற்றிய கிறிஸ்தவச்சி” என சங்கிகள் பொங்குவார்கள் திமுகவினருடன் சண்டை முடிந்த நிலையில் இன்னும் சில மணிதுளிகளில் சங்கிகளுடன் அடுத்த யுத்தம் தொடரும் இன்று அவர்களோடு மல்லுகட்டு என எம்பெருமான் இட்டமுடன் எழுதியிருக்கின்றான் கிறிஸ்து இயேசு எப்படி போதித்தார்?, “ஒடுக்கபட்டோருக்கும், அனாதைகளுக்கும், ஆதரவில்லா அபலைகளுக்கும், நோயுற்றோருக்கும்வாழ வழியற்றவருக்கும் வாழ்வளிக்கும் பொருட்டு […]

முருகபெருமானோடு கலந்துவிட்ட கிருபானந்த வாரியாருக்கு அஞ்சலிகள்

தமிழ்கடவுள் முருகன், அந்த முருகனுக்கு ஏகபட்ட அடியவர்களும் புலவர்களும் இங்கு இருந்தார்கள்,, அவ்வையார், அருணகிரி நாதர் என பலர் இருந்தார்கள். அவர்களை எல்லாம் நாம் கண்டதில்லை ஆனால் இவர்களை எல்லாம் நாம் வாழும் காலத்தில் ஒரு உருவத்தில் மொத்தமாக கண்டோம் என்றால் அது கிருபானந்த வாரியார் பிறவி ஞானி. பக்தி அவர் ரத்தத்தில் இயல்பாக வந்தது. முருகன் அவர் கருவில் இருக்கும்பொழுதே அவரை ஆட்கொண்டான் அது அவர் வளர வளர வளர்ந்தது, 12 வயதிலே ஆயிரகணக்கான பாடல்களை […]

ஏக்நாத் ராமகிருஷ்ன ராணடே

மத சர்ச்சைகள், கலவர சூழல் தமிழகத்தில் எழும்பொழுதெல்லாம் அக்கால காட்சிகள் சில கண்ணுக்குள் வந்து போகும் அப்படியாக பெரியார் சிலைகள் சர்ச்சையில் விவேகானந்தர் மண்டப நினைவும் வந்து போகின்றது அது 1963ம் ஆண்டு நேரு பிரதமராக இருந்த காலம், சீனப்போரில் ஆர்.எஸ்.எஸ் உருப்படியாக பணியாற்ற நேருவுக்கும் அவர்களுக்கும் ஒரு புரிந்துணர்வு வந்த நேரம் விவேகானந்தரின் நூற்றாண்டுவிழா அப்பொழுது தொடங்குகின்றது, காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை கொண்டாட தொடங்கினார்கள். அப்பொழுது அவர்கள் மனதில் உதித்த திட்டம்தான் கன்னியாகுமரி பாறையில் விவேகானந்தர் […]

சிவராசன், ஒற்றைகண் சிவராசன்

ஒரு பயலும் “தற்கொடையாளி மாவீரன்” சிவராசன் வாழ்க, தமிழின கண்ணகி “தற்கொடையாளி சுபா வாழ்க” என இன்னும் கிளம்பவில்லை இவர்களுக்கு எல்லாம் வீரவணக்கம் இல்லையா? அல்கய்தாவின் கதையினை படித்தவர்களுகு தெரியும் அதில் ஒரு இரக்கமில்லா கொலைகாரன் இருந்தான் அவன் பெயர் ரம்ஸி யூசுப் முதன் முதலில் அமெரிக்க இரட்டை கோபுரத்தை 1994ல் தகர்க்க தாக்கியது, கென்ய தான்சானிய தாக்குதல், பிலிப்பைன்ஸில் போப்பாண்டவரை கொல்ல முயன்றது என அவனின் அட்டகாசம் அதிகம், பின்பு அமெரிக்கா பிடித்து அவனை அமெரிக்க […]

இந்தியாவின் கென்னடி

இந்தியாவின் கென்னடி ஒரு மனிதனின் தலைவிதிபடியே வாழ்வு அமையும், அந்த விதியின் முடிவை நோக்கியே சூழ்நிலைகள் ஒருவனை கொண்டு செல்லும், மானிட வாழ்வின் பெரும் விசித்திரமிது, மதியினால் தப்பவேமுடியாது, பெரும் ஞானி சாணக்கியனும், பல ஞான நூல்களும், ஞானிகளும், பைபிளின் சில ஆகமங்களும் சொன்ன உண்மை இது. இந்த உண்மைக்கு பெரும் உதாரணமாக அமைந்தது ராஜிவ்காந்தியின் வாழ்க்கை, பெரும் சொத்துக்களும்,பாரம்பரியமும், அரசியலின் உச்சமும், கல்வியும், செல்வமும்,பேரழகும் ஒருங்கே அமைந்த அந்த காஷ்மீரிய பண்டிட் குடும்பத்தின் வாரிசாக பிறந்தவர் […]