டிவிட்டர்
வாகனதுறை, வான்வெளி ராக்கெட் துறை என பலவற்றை கையகபடுத்திகொண்டிருக்கும் அமெரிக்க கோடீஸ்வரர் மற்றும் டாலரீஸ்வரர் எலன் மஸ்க் டிவிட்டர் நிறுவணத்தை திடீரென வாங்கி உலகுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்
டிவிட்டர் இன்று சீனா ரஷ்யா வடகொரியா ஈரான் தவிர உலகின் எல்லா நாடுகளிலும் ஆட்சி செய்யும் தளம், உலக பணக்காரர், பிரபலங்கள் ஏன் ஆட்சி தலைவர்களே அதைத்தான் தங்கள் அதிகார பூர்வ ஏடாக கொண்டிருக்கின்றார்கள், அது எட்டியிருக்கும் வீச்சு கொஞ்சமல்ல
அந்த டிவிட்டரை ஏதோ திட்டத்துடன் வாங்கியிருக்கின்றார் மஸ்க், இதன் பாதிப்பு என்ன என்பது இனிதான் தெரியும்
வழக்கமாக யாரும் முயற்சிக்காத ஒன்றை பெரும் தோல்வியுடன் தொடங்கி பெரும் வெற்றியாக முடிப்பது அவர் ஸ்டைல், இப்பொழுதுதான் மிக வெற்றிபெற்ற ஒரு ஊடகத்தை வாங்கியிருக்கின்றார் இதை இனிஎன்ன செய்யபோவாரோ தெரியாது
தமிழக ஆளுநரை கண்டு ஒரு கூட்டம் அலறுவது போல டிவிட்டரிலும் இதர சமூக ஊடகங்களிலும் பல அறலகள் கேட்கின்றன