தமிழக டிவிக்கள் பெரும் துரோகம் செய்கின்றன‌

இந்த தமிழக டிவிக்கள் குழந்தைகளுக்கும், மாணவ சமூகத்திற்கு எதிராகவும் பெரும் துரோகம் செய்கின்றன‌

ஒரு சேனலில் சிறு குழந்தைகள் எல்லாம் காதை பொத்திகொண்டு ஒரு கையால் மைக் பிடித்தபடி பாடல் பாடிகொண்டே இருக்கின்றனர், அது என்னவோ உலக சாதனை முயற்சி என்பது போல் பெற்றோர்களும் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிய பார்த்துகொண்டிருக்கின்றாகள்

இதற்கு நல்ல சம்பளம் வாங்கிகொண்டு ரிட்டையர்டு பாடகர்கள் ஜட்ஜ்களாம்

ஒரு டிவியில் பேய்பிடித்து ஆடும் நபர்கள் போல பிஞ்சுகள் ஆடிகொண்டிருக்கின்றன, இங்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் நாசா நேர்முக தேர்வில் பங்குபெறும் குழந்தைகள் போல கைதட்டி உற்சாக படுத்துகின்றார்களாம்

இங்கும் சில ஆட்டகாரிகள் ஜட்ஜாம், ஆட்டகாரிகள் என்னவோ சர்வதேச பொருளாதார விற்பனர்கள் போல இவர்கள் பணிந்து வணங்கி நிற்கின்றார்கள்

இன்னொரு டிவியில் குழந்தைகள் காமெடி ஷோ, சகிக்க முடியவில்லை

இவை எல்லாம் குழந்தைகளை, மாணவர்களின் திசையினை மாற்றிவிடும் கொடூரங்கள். அவர்களுக்கு வயது 6 முதல் 10 வயதுவரை இருக்கலாம். இப்படியே சென்றால் இன்னும் 8 அல்லது 10 வருடம் கழித்து அவர்களுக்கு ஆடல், பாடலை தவிர என்ன தெரியும்?

இப்படி கூத்துகார தலைமுறையினை உருவாக்குவதிலா தமிழகம் ஆரவம் கொண்டிருக்கின்றது???

ஒரு டிவியிலாவது சமூக பொறுப்போ, அறிவை வளர்க்கும் விஷயங்களோ, பெரும் அறிஞர்களை, விஞ்ஞானிகளை மாணவர்கள் உரையாடும் காட்சிகளோ இருக்கின்றதா என்றால் இல்லை

நல்ல விளையாட்டு வீரர்களை அறிமுகபடுத்தி விளையாட்டு ஆர்வத்தை தூண்டுகின்றன என்றாலும் இல்லை

மிகபெரும் துரோகத்தை இந்த டிவிக்கள் செய்கின்றன, வெறும் குப்பையான தலைமுறையினை உருவாக்கிகொண்டிருக்கின்றோம் இவர்களால் நாளை ஒரு நல்ல விஷயமும் தமிழகத்திற்கு விளையாது

அந்த டிவிக்கள் தொழில் அது, அங்கு வரும் ஜட்ஜ்கள் என வருபவர்கள் பணத்திற்காக வந்து அமர்ந்து பல்லை காட்டுவார்கள்

ஆனால் குழந்தைகள் அப்படி அல்ல, இவ்வாறான அழுத்தங்கள் அவற்றிற்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்

அது தெரிந்தே அனுப்பும் பெற்றொர்கள்தான் முதலில் தண்டிக்கபடவேண்டியவர்கள். தங்களை அறியாமல் இது அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு செய்யும் பெரும் துரோகம்

பின்னாளில் அது அவர்களுக்கு புரியும், இக்கால குழந்தைகளை அந்த டிவி பக்கம் பார்க்கவிடாமலும், டிவி நிகழ்ச்சிகளில் பங்கு எடுக்கவிடாமல் செய்தலுமே பெற்றோர் பிள்ளைகளுக்கு ஆற்றும் பேருதவியாக இருக்கும்