துள்ளுவதோ பலூன்

இப்பொழுதெல்லாம் ஒரு விஷயம் டிரென்ட் ஆகின்றது, அது போட்டியாக கூட சில இடங்களில் நடக்கின்றது
அதாவது பலூனை உடைக்க பல வழிகள் உண்டு, குண்டூசியால் குத்தினால் கூட போதும், ஆனால் அதில் என்ன கொண்டாட்டம்?
இதனால் ஆண் பெண்ணை எதிரெதிரே நிற்க வைத்து நடுவில் பலூனை வைத்து அழுத்தி உடைப்பது இபொழுதெல்லாம் விளையாட்டு, யார் அதிக பலூனை உடைப்பார்களோ அந்த ஜோடி வெல்லுமாம்
இந்த விபரீத விளையாட்டு முதலில் தம்பதியருக்கு இடையே அறிமுகமாகி இப்பொழுது தறிகெட்டு எங்கெல்லாமோ நடக்கின்றது
இதில் பலூன் வியாபாரிகளுக்கு ஏக கொண்டாட்டம்
இப்போதைக்கு ஆண்களுக்கு அது பிடித்த விளையாட்டாம், ஆனால் ஆணோடு ஆண் சேர்ந்து பலூன் உடைக்க ஒரு பயலுக்கும் விருப்பம் இல்லை
ஆங்காங்கே ரகசியமாக நடந்த விளையாட்டு கொழும்பில் பகிரங்கமாக நடந்துவிட்டது, அது பவுத்தர்கள் அல்ல மாறாக இஸ்லாமியர் ஆடியிருக்கின்றார்கள்
போதாதா? அய்யகோ கொழும்பின் புனிதம் போனது என புத்த குரு கூட்டம் கிளம்பிவிட்டது, பலர் அந்த விளையாட்டை பார்த்து முகம் சுளிக்கின்றனர்
இது எங்கே பாதிக்கும்?
தமிழகத்தில் இந்த விளையாட்டை சினிமாவில் உடனே கொண்டு வரும் பட்டியலில் இருப்பவர்கள் எஸ்.ஜே சூர்யா மற்றும் சிம்பு
கஸ்தூரி ராஜா எல்லாம் பீல்டு அவுட் இல்லை என்றால் “துள்ளுவதோ பலூன்” என கிளம்பியிருப்பார்
இதில் எஸ்.ஜே சூர்யா இப்பொழுது திருந்திவிட்டார், நடிப்பு மட்டும் என அவர் பாதை மாறிவிட்டது, சும்மா சொல்ல கூடாது அட்டகாசமான நடிப்பு. முத்துராமனுக்கு பின் நவரச நடிப்பு அவருக்கு வருகின்றது
ஆனால் சிம்பு இன்னும் திருந்தவில்லை, திருந்தவும் மாட்டார்
அதனால் இந்த பலூன் விளையாட்டு சிம்பு படத்தில் வரலாம், ஆனால் அதற்குள் ஜூனியர் சிம்புவான ஜிவி பிரகாஷ் முந்தினாலும் முந்தலாம்