நேற்று அண்ணாமலை கொடுத்துள்ள அந்த பேட்டி
நேற்று அண்ணாமலை கொடுத்துள்ள அந்த பேட்டி ஆழ்ந்து கவனிக்கதக்கது மட்டுமன்றி 75 ஆண்டுகால தமிழகம் சந்திக்கும் பெரும் அச்சுறுத்தல் பற்றிய கவலையினையும் கொடுத்திருக்கின்றது
தமிழகம் எப்பொழுதும் தேசிய உணர்வுமிக்க பகுதி, அதனாலே இங்கிருந்து புலித்தேவன், கட்டபொம்மன், வாஞ்சிநாதன், பாரதி, வ.உ.சி என அழியா பாரத சுடர்கள் தோன்றின
வடக்கே இந்து இஸ்லாம், இஸ்லாம் சீக்கியம் என குழப்பத்தை செய்து வங்கம், பஞ்சாபில் சுதந்திர போராட்டத்தை நசுக்கபார்த்த பிரிட்டிஷ்காரனுக்கு தமிழகத்தில் இந்துக்கள் பெரும்பான்மை என்பதால் சாதி, தமிழுனர்வு போன்றவை வாய்ப்பாயின
இதனை கொண்டு குழப்பம் விளைவிக்க தொடங்கினான், எனினும் தேச சுதந்திர நெருப்பு பற்றி எரிந்ததால் இந்த கும்பலின் ஆட்டம் பெரிதாக இல்லை, கொஞ்சம் எழுந்தும் அடங்கினார்கள்
சுதந்திரம் வந்தபொழுதே இங்கு 400 ஆண்டுகளாக வேர்விட்டிருந்த பல அன்னிய சக்திகளுக்கு தமிழகத்தை தங்கள் வேட்டைகாடாக வைத்திருந்த பரகாசுர சக்திகளுக்கு பயம் வந்தது, காரணம் சுதந்திர இந்தியாவில் வெள்ளையன் வெளியேறினால் அவனோடு சேர்ந்து தங்கள் சாம்ராஜ்யமும் அசையும் என அஞ்சின
ஆனால் நேரு அவர்களுக்கு வாய்பளித்தார், அவரின் மிக கருணையான மனதினாலே இக்கும்பல் மறு உயிர் பெற்ற்றது
காலை சுற்றிய பாம்புக்கு பால்வார்க்கின்றோம் என தெரியாமலே காமரஜாரும் அவர்கள்மேல் சலுகை காட்டினார்
விளைவு அந்த பாம்பு பலமானது, அதோடு இன்னும் பல நாகங்கள் சேர்ந்து கொண்டு வளர்ந்து காமராஜரையே சரித்தன, குழப்பமான 1960களில் இவை காங்கிரஸை நாடி பார்த்தன
காங்கிரசும் அந்நிய கைகூலி கட்சி என்றவுடன் இவைகளுக்கு உற்சாகம் கூடிற்று, இருவருக்கும் ரகசிய பிணைப்பு உண்டாயிற்று
இந்திய ஜனநாயகம் என்பதே சிறுபான்மையினருக்கு அதீக கவனம் கொடுத்து காப்பாற்றபடுவது எனும் அளவு சிறுபான்மைகள் தூக்கி நிறுத்தபட்டன, இந்த புள்ளியில் தேசவிரோதிகளெல்லாம் சேர்ந்து கொண்டார்கள்
அமைதியான தமிழகத்தில் சுதந்திரத்துக்கு முன்பு வரை அந்நியனை எதிர்த்த போராட்டங்கள் சொந்த தேசத்துக்கு எதிராக மாறின, காங்கிரஸால் இதனை அடக்கமுடியவில்லை காரணம் காங்கிரஸின் வேரும் இந்தியாவில் இல்லை
விளைவு தமிழகம் போராட்டங்களின் கூடாரமானது, எதற்கெடுத்தாலும் கலவரம் செய்வது திமுகவின் அரசியலாயிற்று, இதை புரட்சி என அவர்கள் சொல்லிகொண்டார்கள் காங்கிரசும் ஆமாம் என்றது
திமுகவின் அனைத்து அட்டகாசங்களுக்கும் காங்கிரஸ் மவுனமாக துணைபோனது நிஜம், காமராஜரே அமைதி காத்ததும் நிஜம்
இந்த புள்ளியில் தங்களை நிறுத்திகொண்ட அந்நிய சக்திகள் காமராஜரையே தூக்கி வீசின, பின் எங்கும் திராவிடம் நிறுத்தபட்டு மிகபெரிய களபேரங்கள் நடந்தன
திமுக ஆட்சிக்கு வந்ததும் வெடிகுண்டு கலாச்சாரம் ஊரை கொளுத்தும் கலாச்சாரமெல்லாம் புகுந்தது, அந்நிய சக்திகள் இங்கு திமுக ஆட்சியில் மிக இயல்பாய் திரிந்தார்கள்
மிசாகாலம் மட்டும் இல்லையென்றால் அன்று நினைத்து பார்க்கமுடியா கொடுமைகள் நடந்திருக்கும், அதை அடுத்தும் இந்திரா கொலைமுயற்சி இங்கு நடந்தது
காங்கிரஸ் வழக்கம்போல் அமைதியானது
மிசா முடிந்தபின் உலகெல்லாம் தீவிரவாதம் பெருகிற்று, ஆப்கன் முதல் எங்கெல்லாமோ தீவிரவாத அட்டகாசம் தொடங்கிற்று, இந்தியாவின் பஞ்சாப் எரியதொடங்கிற்று காஷ்மீர் எரிய தயாரானது
அப்பொழுது இலங்கை புலிகளை பிடித்து கொண்டு தமிழகத்தை சுடுகாடாக்கியது திராவிடம், இங்கு எல்லா வகை குண்டுகளும் வெடித்தன, துப்பாக்கிகள் சரளமாயின
பத்மநாபா உள்ளிட்ட கொலைகள் தொடர்ந்தன, இங்கு கம்யூனிஸ்ட் தமிழ்தேசியம் எனும் கும்பல் புதிதாக முளைத்தது, கொடைக்கானல் கோபுரமெல்லாம் குண்டுவைத்து தகர்க்கபட்டது
அந்த குற்றவாளி தியாகுவினையும் தூக்குதண்டனையில் இருந்து காப்பாற்றினார் கருணாநிதி
இந்திக்கு எதிரான தமிழுணர்வு ஆயுத குழப்பமாகி தமிழகத்தில் என்னவெல்லாமோ நடந்தது, அந்த தமிழுணர்வு அந்நிய புலிகளுக்கு ஆதரவாகி பெரும் ஆயுத கலாச்சாரத்தை முன்னெடுத்தது
திராவிடம் இதனை அனுமதித்தது, கருணாநிதியோ எம்ஜிஆர் என்பவரோ புலிகளை பகைக்க தயாராக இல்லை எனும் அளவு நிலமை மோசமானது
இந்தியாவின் உச்ச அவமானமாக இலங்கையில் இந்திய ராணுவத்துடன் மோதி சுமார் 1500 வீரர்களை கொன்ற புலிகளுக்கான சிகிச்சை தமிழகத்தின் கனஜோராக நடந்தது, திராவிட எம்பி வைகோ இலங்கை சென்று இந்திய தேசவிரோதி பிரபாகரனை சந்தித்தார்
ஆனால் அவர்மேல் நடவடிக்கையே இல்லை
இந்த பலத்தில் ராஜிவ்காந்தி உள்ளிட்ட 17 பேரை நாயினும் கேவலமாக கொன்றுபோட்டனர் புலிகள், உலகமே அதிர்ந்தது, நிச்சயம் இந்த கொலைக்கு காரணம் திமுக வளர்த்த தமிழ் உணர்வும் அது கொடுத்த புலி ஆதரவுமே
இதன் பின்னும் காங்கிரஸ் திமுக கூட்டணி தொடர்ந்ததுதான் விஷயம், அது ஆச்சரியமல்ல இருவருக்கும் ஐரோப்பியரே எஜமான்கள், புலிகளுக்கும் அவர்களே முதலாளிகள் எனும் வகையில் ராஜிவ் கொலையாளிகள் எளிதாக தப்பினார்கள்
எனினும் தேசத்தின் எதிர்ப்பை அடுத்தும் சர்வதேச நடவடிக்கையாலும் புலிகளை தமிழகம் கைவிட்டது, தந்திரசாலி கருணாநிதியும் மக்கள் விரும்பா புலிகளை கைவிட்டார்
வைகோவினை புலிகள் வளர்க்க விரும்பினாலும் தமிழகம் புறக்கணித்தது, பின் புலி அரசியல் ஓய்ந்தது
ஆனால் அடுத்த மிரட்டலாக இஸ்லாமிய ஜிகாத் கோஷ்டிகள் எழும்பினார்கள், வழக்கம் போல் இதனை கருணாநிதியும் திராவிடமும் வளர்த்தது
மெல்ல மெல்ல அவர்கள் உருவானார்கள்
மதுரையில் தொடங்கிய கொலைகள் வெடிகுண்டு தாக்குதலாக மாறின, மணிரத்னம் வீட்டில் குண்டு வீச்சு என உருமாறிய விஷயம் சென்னை ஆர்.எஸ்.எஸ் அலுவலக தகர்ப்பு வரை சென்றது, 12 பேர் பலியான நிலையிலும் திமுகவும் காங்கிரசும் அமைதி
அந்த தைரியத்தில் 1998ல் கோவை தகர்க்கபட்டது, அதன் பின்னணியில் கேரள ஜிகாதிகளும் இன்னும் பல ஜிகாதிகளும் இருந்தார்கள்
நாட்டை உலுக்கிய அந்த மாபெரும் குண்டுவெடிப்பு நடந்த இடத்துக்கு காங்கிரஸ், கருணாநிதி, ஜெயலலிதா என யாருமே செல்லவில்லை என்பதுதான் அதிர்ச்சி
நூற்றுகணக்கான இந்துக்கள் கொல்லபட்டு எவ்வளவோ கோடி சொத்து அழிக்கபட்ட நிலையிலும் அந்த அனாதைகளுக்கு யாருமில்லை
அங்கு வந்த அத்வாணியும் நொடிபொழுதில் உயிர்தப்பினார், அந்த அளவு நிலமை மோசமாக இருந்தது
இந்த மாபெரும் பிரச்சினைக்கு முதலில் முடிவுகாண விரும்பியவர் ஜெயா, வாஜ்பாய் பிரதமரான அந்நாட்களில் மத்திய மாகாண அரசுகள் ஒத்துழைப்பு இவ்விவகாரத்தில் சரியாக இருந்தது
இமாம் அலி போன்றவர்கள் வேட்டையாடபட்டனர், தமிழக காவல்துறை பெரும் கடமையாற்றி நெஞ்சை நிமிரத்தி நின்றது
பின் பின்லேடனுக்கும் அமெரிக்காவுக்குமான போரில் அமெரிக்கா கடுமைகாட்ட உலகெல்லாம் தீவிரவாதம் கட்டுபடுத்தபட்டது எனினும் இந்தியாவில் ஆங்காங்கு தாக்குதல்கள் நடந்தன
அதன்பின் நிலமை பரவாயில்லை காரணம் ஜெயா கருணாநிதி போன்ற அனுபவசாலிகளுக்கு இந்த கும்பலை கட்டுபடுத்தும் அனுபவமும் பலமும் இருந்தது
மோடி வந்தபின் என்.ஐ.ஏ பலமானது , அஜித்தோவல் போன்றோர் களத்தில் வந்தபின் உளவு பலமும் இன்னும் பலவும் அதிகரித்தன
அடிமை பழனிச்சாமி என சொல்லபட்டவர் கூட இவ்விவகாரத்தில் பின்னி எடுத்தார், பெரும் தீவிரவாத குழப்பமில்லை
உண்மையில் இலங்கை ஈஸ்டர்
ஆனால் ஓசைபடாமல் பி.எப்.ஐ அது இது என அக்கும்பல்கள் வாய்ப்புக்காக பதுங்கி இருந்தது நிஜம், தமிழக இலங்கை ஜிகாதி தொடர்பினை கண்டறிந்த இந்திய உளவுதுறை தமிழகத்தில் அதை நடக்கவிடாமல் தடுத்தது
தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமானது திமுக ஆட்சியில் இன்னும் அதிகரித்தது, தமிழக முதல்வரும் தன் அனுபவமின்மையால் 1998 கோவையினை மறந்தேவிட்டார்
ஆனால் திமுக கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளை பள்ளி குழந்தைகள் போல் காப்பதையும், ராஜிவ் குற்றவாளியினை முதல்வரே கட்டி தழுவியதும் அவர்களுக்கு உற்சாகம் கொடுத்திருக்க வேண்டும்
முன்பு திமுகவின் தமிழுணர்வு பெரும் அழிவுகளை புலிகள் வடிவில் கொடுத்தது போல் திமுகவின் இந்து துவேஷம் இந்த ஜிகாதிகள் வடிவில் பெரும் அழிவுகளை கொடுக்கும் நேரம் நெருங்கிற்று
அப்பொழுது நேரு இந்திராவுக்கு எதிராக தமிழ் எனும் வார்த்தையால் உருவான குழப்பம் ராஜிவ் கொலைவரை சென்றது போல மோடி காலத்தில் இந்துஎதிர்ப்பு, மதவாதம் என சொல்லி இன்னொரு பெரும் குழப்பத்துக்கு தமிழகம் தயாராயிற்று
ஸ்டாலினாரின் துபாய் பயணமும் அந்த சில தொடர்புகளும் இதை மவுனமாக சொன்னது
ஆனால் இந்தியா பெரும் சக்தியால் வழிநடத்தபடும் பூமி அல்லவா? இப்பொழுது மோடி அமித்ஷா அஜித்தோவல் என வலுவான சக்திகள் இருக்கும் நாடு அல்லவா?
அவர்கள் திட்டமிட்டு பெரும் கவனமாக காய்நகர்த்தினார்கள்
1980களில் புலிகளை வைத்து திமுக ஆடிய எல்லா ஆட்டமும் இனி ஜிகாதிகள் அல்லது விரும்பதகாத சக்திகளை கொண்டு ஆடுவார்கள் என்பதை ஊகித்தது
தமிழகம் பற்றி எரிவதை தடுக்க மிக பெரும் சக்திவாய்ந்த பிம்பங்கள், சட்டம், காவல், உளவு, ஆளுமை என எல்லாம் கலந்த தேசபக்தர்கள், மிரட்டலுக்கு அஞ்சாதவர்கள், உயிருக்கும் அஞ்சாதவர்கள் வேண்டும் என முடிவு செய்யபட்டது
தமிழக கவர்னரும் அண்ணாமலையும் அப்படி வந்தார்கள்
இது தேசவிரோதிகள் எதிர்பாரா விஷயம், கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை, தொடர்ந்து அதிரடிகள் தொடர்ந்தன, என்.ஐ.ஏ அடிக்கடி அதிரடி காட்டி பின் சர்ச்சைகுரிய இயக்கமும் தடை செய்யபட்டது
தங்களை திமுக காக்கும் என நம்பிய குழப்பவாதிகளும் திமுகமேல் கோபமடைந்தனர், ஆனால் திமுகவின் தலமை இதுபற்றி உணரவில்லை ஆபத்தை கண்டுகொள்ளவில்லை
தமிழக உளவுதுறை தோல்வி அடைந்தது அல்லது முதல்வர் கவனத்துக்கு விஷயங்களை கொண்டு செல்லவில்லை
விளைவு மிகபெரும் சதி தீபாவளியுமாக நடந்திருக்கின்றது
ஆச்சரியமாக என்.ஐ.ஏ அமைப்பு கூட தடுக்கமுடியா அச்சதியினை கோவை கோட்டை ஈஸ்வரன் தடுத்து உண்மையினை காட்டிவிட்டார்
இந்த இடத்தில் விஸ்வரூபம் எடுத்தார் அண்ணாமலை, நேற்று அவரின் பேட்டி அணல் காட்டியது
ஒரு காவல்துறை அதிகாரியாக அவர் பேசிய ஆதாரங்களும், துல்லிய தரவுகளும், தன்னிடம் இருக்கும் ரகசியங்கள் விவரமும் சொல்ல சொல்ல மொத்த தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே ஆடிபோனது
வழமையாக தமிழக பாஜக தலைவர்கள் “அய்யா கலைஞர்” “முக ஸ்டாலின் சகோதரரே..” என்பதோடு நிறுத்துவார்கள் அதை தவிர ஏதும் தெரியாது
அண்ணாமலை தான் புலி என காட்டினார், அவர் எழுப்பிய கேள்விக்கும் சவாலுக்கும் இந்நொடி வரை தமிழக முதல்வரும் காவல்துறையும் வாய்திறக்கவில்லை
மிக முக்கிய ஆதாரங்களை மத்திய உள்துறைக்கு அனுப்பிவிட்டு ஒருவாரம் மாகாண அரசுக்கு கெடு விதித்திருப்பது இதுவரை தமிழகம் காணா பெரும் அதிசயம்
இதுவரை திமுகவும் திராவிடமும் செய்த மொத்த பாவங்களுக்கும் தீர்வு கொடுக்கும் அவதாரமாக அண்ணாமலை உருவாகி நிற்கின்றார்
துல்லியமான விவரங்கள், உறுதியான வாதங்கள், தமிழக உளவுதுறையின் கோமாளிதனங்கள், காவல்துறை மக்களை திசைதிருப்பும் தந்திரங்கள், மாகாண காவல்துறை அமைச்சரான முதல்வரின் அமைதி என எல்லாவற்றையும் அவர் பேசியது மிகபெரிய விஷயம்
பிடிபட்ட குற்றவாளிகள் மேல் ஏன் தேசபாதுகாப்பு சட்டம் பாயவில்லை என அவர்கேட்டதற்கு எந்த பீடத்திடமும் பதில் இல்லை
இனி என்ன நடக்கின்றது என்பதை காலம் காட்டும், இது திமுக ஆட்சிக்கு மிகபெரிய நெருக்கடி
அண்ணாமலை பேசியது நியாமான வார்த்தைகள் இது மதவாதம் அல்ல, இஸ்லாமிய மக்களைகுறிவைக்கும் விஷயம் அல்ல இது தேசிய ஆபத்து என்பது சரியான வார்த்தை, அப்படியே அரசுக்கு ஒத்துழைக்கும் ஜமாத்துக்களையும் அவர் வரவேற்றார்
அதாவது மிகபொறுப்பாக தன் கட்சி தொண்டர்களை தூண்டி கலவரம் ஏற்படுத்தாமல் மிக அமைதியாக தீவிரவாத கும்பலை தனிமைபடுத்தி அகற்ற கோருகின்றார், இது சரியானது
இப்பொழுது நாம் நினைத்து பார்க்கின்றோம்
இப்படி ஒரு தலைவன் 1950களில் இருந்திருந்தால் தமிழகம் பெரிதும் சீரழிந்திருக்காது, 1960களில் இருந்திருந்தால் பெரும் அழிவினை செய்துவிட்டு “இந்தி போர்” என சொல்லும் தைரியம் திமுகவுக்கு வந்திருக்காது
1970க்ளில் இருந்திருந்தால் ராமனை செருப்பால் அடித்தது, இந்திராவினை கொல்ல முயன்றது போன்ற பெரும் களபேரங்கள் நடந்திருக்காது
1980களில் இப்படி ஒரு தலைவன் இருந்திருந்தால் புலிகளின் அட்டகாசம் தமிழகத்தில் இருந்திருக்காது, ராஜிவ் கொல்லபட்டிருக்கமாட்டார்
1990களில் இருந்திருந்தால் ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் 12 தியாகிகளோடு சரிந்திருக்காது, கோவை குண்டுவெடிப்பும் நடந்திருக்காது
இன்று கார் சிலிண்டர் வெடிப்பு என முதலில் மூடபட்ட வழக்கே அண்ணாமலையால் தூண்டபட்டு அதன் சதி வெளிவந்திருக்கின்றது
இப்படி எவ்வளவு சதிகள் வெறும் விபத்தாக, வெடிப்பாக மூடிவைக்கபட்டதோ யாருக்கு தெரியும்?
2010களில் அண்ணாமலை இருந்திருந்தால் காவல்ர்களை கொல்லும் தைரியம் ஜிகாதிகளுக்கு இருந்திருக்காது
அப்பொழுது இல்லா காவல் தலைவனை இப்பொழுது தமிழகம் பெற்றிருக்கின்றது
இந்த ஆபத்து நிச்சயம் பெரிது கேரளம், தமிழகம், இலங்கை என பல இடங்கள் இணைந்த பெரும் ஆபத்து இது, அந்த விவகாரத்தை தமிழக அரசியலுக்காக அந்த மாகாண அரசு அமைதிகாக்குமானால் இதன் விபரீதங்கள் பெரிது
அண்ணாமலை தன் கடமையினை காவல்துறை அதிகாரியாக கட்சி தலைவனாக சரியாக செய்கின்றார், அதே கடமையினை மாகாண முதல்வரும் செய்யட்டும், செய்யவேண்டும்
நேற்றைய பேட்டியில் அண்ணாமலை தமிழகத்தை காத்த அந்த கோட்டை ஈஸ்வரனின் ருத்தரசாயலாகவே தோன்றினார், அவரை வணங்கி நன்றிகண்ணீர் செலுத்துவதை விட அனாதை தமிழர்கள் வேறு என்ன செய்துவிட முடியும்?
“இப்படி ஒரு தலைவன் 1950களில்” லிருந்து கடைசி வரை, நிகரற்ற வரிகள்.
செம்மையான அலசல்.
Great of you..
அருமையான கருத்துக்கள்
நீண்ட பதிவாக இருந்தாலும தற்போதுள்ள சூழ்நிலையில் தேவையான பதிவு
தவிர.., நான் அன்றே தெளிவாக சொன்னேன் கேடுகெட்ட “விடியல்” ஆட்சியில் தமிழகம் விரைவில் இன்னொரு பாகிஸ்தானாக மாறி வருகிறது என்று….
அது தற்போது நிஜமாகி உள்ளது….
இதற்கு இன்னொரு முக்கியமான தீர்வு நம்மிடமும் உள்ளது…..
இந்துக்கள் யாரும் எந்த ஒரு முஸ்லீம் கிருஸ்துவன் கடைகளிலும் வியாபாரம் செய்யகூடாது அவர்கள் பெருளாதார ரீதியில் உயர்வதற்கு எந்த ஒரு தொடர்பும் நாம் வைத்துக் கொள்ள கூடாது…
இது தான் நாட்டிற்கு தற்போதைய சூழ்நிலையில் முக்கிய தேவை….
இதை நாம் ஒன்றிணைந்து செய்தாலே அவர்கள் தன்னால் அடங்கி விடுவார்கள்….
இப்படி ஒரு தலைவன்
2019 பிப்5 க்கு முன் இருந்திருந்தால் திருபுவனம் இராமலிங்கம் பிழைத்திருப்பார்
இப்படி ஒரு தலைவன் 2020 ஜன 8 க்கு முன் இருந்திருந்தால்
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடி சிறப்பு காவல் ஆய்வாளர் வில்சன் பிழைத்திருப்பார்….
இப்படி நிறைய
சொல்லிட்டு போகலாம்….
உண்மை… உண்மை…
உண்மை…
வாழ்க நீ எம்மான்…
வாழ்க நீ எம்மான்…
அருமையான உண்மையான அலசல்.