பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பிக் பாஸ் – 2 : 100 நாட்கள் படுஜோராக தமிழகம் மகா மகிழ்ச்சியாக இருக்கும்

பிக்பாஸுக்கு இந்த பொன்னம்பலம் மும்தாஜை அனுப்புவதை விட பழைய சரோஜாதேவி, ஏ.எல் ராகவன், கே.ஆர் விஜயா, சவுகார் ஜாணகி, விஜயகுமாரி கோஷ்டிகளை வீல்சேரில் அனுப்பினால் கூட பழைய படங்களின் அனுபவங்களையாவது பேசிகொண்டிருப்பார்கள்

ஒரே சிக்கல் ஒரு மூட்டுவலி மருத்துவரையும் உடன் அனுப்ப வேண்டும் அவ்வளவுதான்

அப்படியே அக்கால வசனகர்த்தா ஆரூர் தாஸ் முதல் பலரை அனுப்பினால் இன்னும் நன்றாக இருக்கும்

அட அவ்வளவு ஏன் கங்கை அமரன் போன்றவர்களை அனுப்பினால் கூட பழம் அனுபவங்களை கொட்டுவார்கள்

அதை விட்டு யாரென்றே தெரியாத சிலரை அனுப்பி இம்சைபடுத்துகின்றார்கள், காலா படத்தை விட மோசமான தண்டனை இந்த பிக்பாஸ் 2

இந்த பிக்பாஸுக்கு திரையுலகம் மற்றும் மார்டலிங் உலகிலிருந்துதான் பங்கேற்பாளர்கள் வரவேண்டும் என்ற விதியினை மாற்ற வேண்டும்

அரசியல்வாதிகள் 100 நாள் விடுமுறை எடுத்துகொண்டு வந்தால் ஒன்றும் கெட்டுவிடாது, சமூகமாவது அமைதியாக இருக்கும்

Image may contain: 1 personதமிழிசை, எச்.ராசா, திருமா, கிருஷ்ணசாமி, அன்புமணி, துரை முருகன், டிடிவி தினகரன், தங்க தமிழ்செல்வன், பழனிச்சாமி கோஷ்டி, ஈவிகே எஸ் இங்கோவன், அங்கிள் சைமன் என அனுப்பினால் எப்படி இருக்கும்?

100 நாட்களாக படுஜோராக தமிழகம் மகா மகிழ்ச்சியாக இருக்கும்

அவர்களும் வேண்டாமென்றால் இந்த நித்தி, மதுரை ஆதீனம், பால் தினகரன், ஈஷா சாமி, ஜவஹருல்லா கோஷ்டிகளை அனுப்பினால் இன்னும் மாபெரும் கொண்டாட்டமாக இருக்கும்


“மய்யம்” மேடை என்றால் மட்டும் நம்மை அழைக்கின்றார், பிக்பாஸ் மேடை என்றால் அவர் மட்டும் போய் பேசிகொண்டே இருக்கின்றார்

ஹும், பிக்பாஸ் வீட்டுக்கே அனுப்பாத இவரா நம்மை சட்டமன்றம் அனுப்ப போகின்றார்? இவரிடம் இனி மிக கவனமாக இருக்க வேண்டும்

மய்யமும் மண்ணாங்கட்டியும்….


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *