பேனசிரின் நினைவு நாள் இன்று…

Image may contain: 7 people, text

இஸ்லாமிய நாடு ஒன்றில் ஒரு பெண் பிரதமாராக இருந்தார் என்ற முதல் பெருமைக்குரியவர் பேனசிர் பூட்டோ, அவரை தொடர்ந்தே வங்கதேசத்தில் பெண் பிரதமர் வந்தார்கள்

இஸ்லாமிய நாட்டினை ஒரு பெண் வழிநடத்துவதா என்ற குரல்கள் கேட்கதொடங்கின, ஆனாலும் அசராமல் நடத்தினார் பேனசிர்

இருமுறை அந்நாட்டின் பிரதமராக இருந்தாலும் , பூட்டோவினை விரட்டிய சக்திகள் பெனசிரையும் குறிவைத்தன‌

காரணம் பூட்டோவிற்கும், பேனசிருக்கும் கட்டுபாடான பாகிஸ்தான் பிடிக்கவில்லை. துபாய், துருக்கி போன்ற மதத்தால் இஸ்லாமாக ஆனால் நவீன உலகோடு ஒட்டிவரும் பாகிஸ்தானாக அத்தேசம் இருக்கவேண்டும் என்பதே விருப்பம்

பூட்டோ நன்றாகத்தான் ஆண்டார், ஆனால் பாகிஸ்தானுக்கு அணுகுண்டு செய்வேன் என கிளம்பி பின் அந்த உலக அரசியலால் தன் சொந்த தளபதியாலே தூக்கிலிடபட்டார்

பின் அந்த ஜியா உல்கக் என்பவனும் செத்தான்

இதன் பின் பதவிக்கு வந்த பேனசிர் பாகிஸ்தானை முன்னேற்ற அரும்பாடுபட்டார். அமைதியான பாகிஸ்தானை உருவாக்க எண்ணினார், ஜெயாவிற்கு சசிகலா போல பேனசிரின் பலவீனம் அவர் கணவரின் ஊழல்கள்

இந்த பெண்ணை எங்கு சாய்க்கலாம் என நின்ற ராணுவம் விடுமா? விரட்டினார்கள் துபாய்க்கு தப்பினார் பேனசிர்

அதன் பின் 2007 வாக்கில் வந்து அரசியலில் ஈடுபட்டார், 2008ல் இதே நாளில் கொல்லபட்டார்

பேனசிரின் கொலைக்கு ஒரே காரணம் இஸ்லாமிய அடிப்படைவாதம், ஒரு பெண் எப்படி ஆளலாம் எனும் ஒரே கொள்கை

அக்காலத்தில் பின்லேடன்,தாலிபான்கள் என பலரின் கட்டுபாட்டில் பாகிஸ்தான் இருந்தது. வெற்றிபெறும் நிலையில் இருந்த பேனசிரை பொறுக்காது கொன்றார்கள்

இந்த நவீன உலகிலும் பெண் அடிமைதனத்தின் பெரும் படுகொலை பேனசிரின் படுகொலைதான்

இஸ்லாமிய தேசத்தை வழிநடத்திய முதல் அரசி என வரலாறு குறித்த ரசியா பேகத்தினை அடுத்து அடையாளம் காட்டபட்ட பேனசிரின் நினைவு நாள் இன்று

பாகிஸ்தான் அரசியல்தான் சிக்கலே தவிர அம்மக்கள் என்றுமே மாற்றத்தை விரும்புகின்றவர்கள். தங்கள் அபிமான தலைவிக்காக இன்று கண்ணீர் சிந்தி அழுகின்றார்கள்

அந்த அழுகை வீணாகாது, ஒருநாள் நிச்சயம் மாற்றம் வரும், அங்கு மாற்றம் வந்தால் இந்தியாவும் அமைதியாகும்