போதைக்கு அடிமையான சிறுவர்களை

போதைக்கு அடிமையான சிறுவர்களை மீட்க தனிவழி மதுரையில் இருக்கு இலவச மறுவாழ்வு மையம் : செய்தி

பெரும்பாலான நாடுகளில் கடும் போதையினை கொடுக்கும் போதை பொருட்களை தவிர மது வகைகள் அனுமதிக்கபட்டிருக்கின்றன, ஆனால் அவர்கள் மனநிலையும் வாழ்க்கை முறையும் பொருளாதார பலமும் வேறு

அதனால் குடி வகைகளை மிக சாதாரணமாக அவர்கள் கடக்கின்றார்கள் அல்லது சரியாக கையாள்கின்றாகள், இதனால் குடி சமூக ஆபத்து இல்லை பெரும் போதை வஸ்துகளே ஆபத்து என அவர்கள் கருதுகின்றார்கள்
அவர்கள் மனநிலைக்கும் பொருளாதாரத்துக்கும் அது சரியாக இருக்கலாம்

ஆனால் வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் இதெல்லாம் சரியல்ல, அரசே மதுகடைகளை நடத்துவதும் சினிமாவும் டிவியும் அதற்கு இலவச விளம்பரங்களை கொடுப்பதும் நிச்சயம் சரியல்ல‌

அது வருங்கால தலைமுறையினை பெரிதும் பாதிக்கின்றது, சிறுவயதிலே ஒரு குடிகார தலைமுறையினை உருவாக்குதல் என்பது பெரும் வீழ்ச்சியினை எதிர்காலத்தில் கொடுக்கும்

“கள்ளுண்ணாமை” போதித்த வள்ளுவனுக்கு வானுயர் சிலை வைத்தவர்கள் மாகாணமெங்கும் சிறுவர்கள் கூட குடிக்கபழகும் அளவு மதுகடைகளை திறந்திருப்பது பெரும் வீழ்ச்சி

சிறுவர்கள் மது அடிமை ஆகின்றார்கள் அவர்களுக்கு மையங்கள் என்பதெல்லாம் தேசத்துக்கு நல்லதல்ல, இவர்கள்தான் நாளை தலைவர்களாக, விஞ்ஞானிகளாக, ராணுவ வீரர்களாக, பொருளாதர தூண்களாக, சிந்தனையாளர்களாக நாட்டை காக்க வேண்டியவர்கள்

அவர்கள் இப்படி தறிகெட்டு திரிந்தால், திரிய வாய்ப்பளித்தால் தேசம் என்னாகும் என்பதுதான் பெரும் கவலை, இதற்கெல்லாம் விரைவில் முடிவு கட்டுதல் வேண்டும்

இதிகாசங்களும் புராணங்களும் வெற்று கற்பனை அல்ல, குடியால் ஏற்படும் இழிவுகளை ராமாயணம் உள்ளிடவை பல இடங்களில் சொல்கின்றது, தமிழ் இந்து இலக்கியத்தில் ஓளவையும், கம்பனும், வள்ளுவனும் இன்னும் பலரும் அழுத்தமாக சொல்கின்றார்கள்

தமிழகம் தங்கள் மரபில் இருந்து மாறியதுதான் இந்த வீழ்ச்சிக்கு காரணம்

சிறுவயதில் இருந்தே காலை மாலை மணிக்கு குளித்து பூஜைகளிலும் பிரார்த்தனையிலும் மனதை செலுத்தும் ஒரு தலைமுறையினை உருவாக்கியிருந்தால் , ஆன்மீகத்திலும் கலாச்சார பயிற்சியிலும் அவர்கள் மனதை திருப்பியிருந்தால் இம்மாதிரி குடிமறுவாழ்வு மையங்கள் அவசியமே இராது