மேனேஜர், மாதா, பிதா, குரு, தெய்வம்.!
யங்மேன் சண்டே சர்ச் எல்லாம் போகாதே வீட்ல கவனமா இரு, சாப்பாட்டுக்கு எல்லாம் ஸ்டோர் பண்ணிருக்கியா
ஆமா சார், சர்ச் எல்லாம் ஆண்லைன்ல தான் சார்
வெரிகுட், அப்படித்தான் பொறுப்பா இருக்கணும், நாடும் சட்டமும் மக்கள் நலனும் முக்கியம்பா, கடவுள் எல்லாம் அதுக்கு அப்புறம்தான்
ஆமா சார்
ஒகே நல்லா நாட்டுக்காக உலகத்துக்காக பிரே பண்ணிக்கப்பா
கண்டிப்பா சார், இந்தியாவுல ஒரு பழமொழி உண்டு சார்
என்னப்பா?
மேனேஜர், மாதா, பிதா, குரு, தெய்வம். அதாவது மேனேஜர் முதல்ல அம்மா அப்பா அப்புறம், டீச்சர் அப்புறம் கடைசியா தெய்வம்
ஏம்ப்பா..
சார், அம்மா அப்பா பெத்தவங்க அவங்க வளக்குறது கடமை, உலகத்துல நாமளும் ஒரு உயிர் படியளக்குறது தெய்வத்தோட கடமை. ஆனால் ஒருத்தனுக்கு தொழில் கொடுத்து, கத்தும் கொடுத்து, சம்பளமும் கொடுக்குறவன் மேனேஜர் சார், அதுனால அம்மா அப்பாவிட, சம்பளம் வாங்கி பாடம் நடத்தும் குருவினை விட, சம்பளத்தை கொடுத்து பாடம் கொடுக்கும் கம்பெனி மேனேஜர் பலமடங்கு மேலே சார்..
இந்தியா எவ்வளவு பெரிய தத்துவநாடுப்பா, ஆனா எல்லோரும் உன்னமாதிரி இல்லியே, என்னமோ இப்போதான் மோடின்னு ஒரு ஸ்ட்ராங் மேன் வந்திருக்கார் இனி எல்லாம் மாறும்
தேங்க்ஸ் சார்
அப்படியே கம்பெனிக்கும் ப்ரே பண்ணிகப்பா, கம்பெனி நல்லா இருந்தாதான் நாமெல்லாம் நல்லாருக்க முடியும் மறந்துராத..
சார், உங்களுக்கும் கம்பெனிக்கும் எதுக்கு தனி தனியா பிரேயர், கம்பெனியே நீங்கதானே சார்..
ஏம்பா இப்படியெல்லாம், அந்த காலத்துல வெள்ளைக்காரன் தமிழன ஏன் மதிச்சி நம்பி உலகமெல்லாம் கூட்டிட்டி போனான்னு உன்னை பார்த்த அப்புறம்தாம்பா தெரியுது.