பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ரஜினி என்றால் தன் சினிமாவில் ஏதாவது ஒரு பெண்ணோடு தகறாறு செய்வார்

Image may contain: 3 people, people smiling

ஒரு மலேசிய தமிழ் முதியவர் முன்பொருமுறை சொன்னார்

“என்னய்யா இந்த ரஜினிபய, எல்லா படத்திலேயும் ஏதாவது ஒரு பொம்பளகிட்ட சண்ட போட்டுகிட்டே இருக்கார்,

அதில ஏகபட்ட‌ அட்வைஸ் வேற, உங்க ஊர் பெண்களுக்கு எல்லாம் கோபம் வரலியா?

சரி அப்படியும் சினிமாவுல பெண்களோட சண்டை போடும் ரஜினி, நிஜத்தில் ஜெயலலிதாவாவினை எதிர்ப்பாரா என்றால் இல்லை. சில அறிவுரையாவது ஜெயாவிற்கு சொன்னால்தான் என்ன?”

ரஜினி படங்களை பற்றி அவரின் அபிப்ராயம் அப்படி இருந்திருக்கின்றது, ரஜினி என்றால் தன் சினிமாவில் ஏதாவது ஒரு பெண்ணோடு தகறாறு செய்வார்.

யோசித்து பார்த்தால், மூன்றுமுடிச்சு , அவர்கள் படங்களில் தொடங்கி தங்கமகன், மாப்பிள்ளை, மன்னன், படையப்பா என பெரும்பான்மை படங்களில் பெண்களோடுதான் சண்டையிட்டு கொண்டே இருந்திருக்கின்றார்

அப்படிபட்ட அன்னார் இப்பொழுது ஆன்மீக அரசியலில் பெண்கள் நலம் காப்பாராம்

“முத்து” படத்தில் ரஜினி சொன்ன டயலாக்கினை இப்பொழுது நாம் இந்த மங்கையர் கூட்டத்திற்கு சொல்லலாம்

“ஹாஹஹஹா எல்லாமே நாடகம், நடக்கபோற நாடகத்த பார்க்கத்தான் இந்த ஜடம் இங்கே இருக்கு ஹஹாஹ்ஹஹா”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *