12 மொழிகளில் தயாராகிறது திருக்குறள்

பிரதமர் வெளியிடும் வகையில் 12 மொழிகளில் தயாராகிறது திருக்குறள் : செய்தி

தேசிய ஒருமைப்பாடு என்றால் என்ன என்பதை மோடி அரசு தெளிவாக செய்கின்றது

முன்பெல்லாம் திமுக தரப்பு திருகுறள் தமிழர் தமிழ் என தூக்கிபிடித்து ஒருவகை பிரிவினைவாதம் பேசிற்று. இதனை காங்கிரசும் சரியான முறையில் அணுகாமல் இருக்க ஒரு குழப்பமான தமிழர் வெறுப்பு சித்தாந்தம் பல இடங்களில் பரவ ஆரம்பித்தது

அதன் தொடர்ச்சித்தான் முன்பு நாடெங்கும் திமுக திறக்க விரும்பி சர்ச்சையான திருவள்ளுவன் சிலை

நிச்சயம் காங்கிரஸ் சரியான நடவடிக்கை எடுத்திருந்தால், குறளை ஒரு தேசிய நூலாக அங்கீகரித்து எல்லா மொழியிலும் அரசே அதனை கொண்டுவந்திருந்தால் சிக்கல் வந்திருக்காது

இப்பொழுது மோடி அரசுதான் அதனை செய்கின்றது

முன்பு திமுக 15 வருடம் மத்திய அரசில் இருந்தும் செய்யாத இந்த விஷயத்தை, திருகுறளை எல்லா மொழியிலும் கொடுத்து அதை தேசிய நூலாக அங்கீகரிக்க வழி செய்ய தவறியதை பாஜக அரசுதான் சரி செய்திருக்கின்றது

ஆக தமிழும் திருவள்ளுவரும் மோடி அரசால்தான் காக்கபடுகின்றார்கள், நாடெல்லாம் கொண்டு சேர்க்கபடுகின்றார்கள் திமுகவினர் செய்யாததையெல்லாம் மோடி அரசுதான் செய்கின்றது

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட நாடு” எனும் மகாகவியின் வாக்கு மோடியாலேதான் நிறைவேறுகின்றது