ஆட்சி அதிகாரம் நோக்கி நம் பயணம் இருக்க வேண்டும், நம் ஆட்சி அமையவேண்டும் அதிகாரம் நம் கைக்கு வரவேண்டும் என சீறியிருக்கின்றார் துரை வையாபுரி
அதாவது வைகோவின் கட்சி கம்பெனிக்கு புது தலைவராகியிருக்கும் வைகோவின் மகன்
பொதுவாக திமுக கூட்டணி கட்சியினரின் கோஷமே “ஸ்டாலின் கரங்களை வலுபடுத்துவோம், அடுத்த பிரதமர் ஸ்டாலின், ஸ்டாலின் ஆயிரம் கருணாநிதிக்கு சமம், உதயநிதி காந்தியின் வடிவம்” என இருக்க வேண்டும் என்பது கூட்டணி தர்மம்
அந்த தர்மத்தை மீறி பொங்குகின்றார் துரையார்
சில திமுகவினர் “ஓ… வைகோ மகனா.. நோ வொண்டர்” என நகரும் நிலையில் சிலர் இதனை கடுமையாக கருதுகின்றார்கள்
வைகோவினை நம்பவும் முடியாது, தான் பேச நினைப்பதை தன் மகன் மூலம் பேசுகின்றார் என்கின்றது இன்னொரு தரப்பு
இனி என்னாகும்?
ஒன்றும் ஆகாது, ஆங்காங்கே கண்டனம் தெரிவிக்கபடும், சில தகறாறுகளும் வரலாம்
ஒரு படத்தில் முதலாளி அப்பா கவுண்டமணியிடம் அடிவாங்கும் அப்பா செந்தில் தன் மகன், முதலாளி மகன் கவுண்டமணியிடம் அடிவாங்கியபின் இருவரும் கட்டி அழுவார்கள் அல்லவா? அப்படி தகப்பனும் மகனும் அழலாம்

Excellent
இதுபோல் இன்னும் நிறைய சம்பவங்கள் நடக்கும்,
கூட்டணியில் இருக்கும் கட்சிகள்
ஒவ்வொன்றாய் தன் அதிகாரத்தை நிலைநிறுத்த பார்க்கும்,…..
பா ஜா க வை எதிர்க்க உருவான சந்தர்ப்பவாத கூட்டணிகள் இவை
தற்போது இருக்கும் மாநிலயரசு மத்தியரசுடன் இணக்கமாக இருப்பதை
வலுவாக எதிர்த்து வருகிறது,….
இந்நிலையில் இணைந்து செயல்பட முடியாமலும், எதிர்த்து போராட முடியாமலும் இந்த அரசு திணிறிக் கொண்டிருக்கிறது,…..
உரலுக்கு ஒருபக்கம் தான் இடி,
இவ்வரசுக்கு அனைத்து பக்கத்திலும் இடித்து கொண்டிருக்கிறார்கள்,…..
பதவிக்காகவும் பணத்திற்காகவும் நிறம் மாறும் பச்சோந்திகள்.
Super Comparison