இலங்கையில் தன் மாளிகையில் இருந்து வெளியேறிய மகிந்த ராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்பிவிட்டார் என்றும் இல்லை மறைவாக இருக்கின்றார் என்றும் தகவல்கள் கசிகின்றன
அவர் வேறு நாடுகளுக்கு செல்ல வாய்ப்பில்லை காரணம் 2006 போர் குற்றசர்ச்சையில் எளிதாக சிக்குவார், அது போல புலிகளின் பலம் கொண்ட ஐரோப்பிய நாடுகளுக்கும் அவர் செல்லமுடியாது
சீனா இம்மாதிரி விஷயங்களுக்கு கைகொடுக்காது அது உலக அரசியல்
இப்போது ராஜபக்சே திரிகோணமலை அருகே இருக்கும் இந்திய பாதுகாப்பு படைகளின் காவலில் இருக்கலாம் எனும் தியரியும் இல்லை இதர நாட்டு கப்பல்கள் பாதுகாப்பில் இருக்கலாம் எனும் தியரியும் ஓடுகின்றது
திரிகோணமலையில் இந்திய ஆயில் குடோன் அருகே இந்திய பாதுகாப்பு படைகள் எப்பொழுதும் உண்டு என்பதால் முதல் தகவலுக்கு வாய்ப்பு உண்டு
ராஜபக்சே ஓசைபடாமல் வட இந்தியாவுக்கு சென்றிருக்கலாம் என்பதை விட அந்தமானுக்கு சென்றிருக்கவும் வாய்ப்பு உண்டு, மிக அமைதியான பாதுகாப்பான இடம் அவருக்கு அதுதான்
சீனபிடியில் இருந்து இலங்கையினை ஏதோ ஒரு சக்தி கடுமையாக கைமாற்றுகின்றது, அதற்கு சீன ஆதரவாளர் என நம்பபடும் ராஜபக்சே கடுமையாக கையாளபடுகின்றார் என்பதுதான் நடக்கும் காட்சிகள் அது தவிர வேறொன்றுமில்லை
தன் குடுபத்தை பாதுகாப்பதில் கவனமாக உள்ளார். திரிகோண மலையில் தங்கி இருந்து தன் குடும்ப உறவுகளை வெளி நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக ஓரு சில தகவல்கள் கசிக்கின்றன.