இலங்கையில் பெட்ரோல் விலை என்ன தெரியுமா? என சீறி கொண்டிருந்த கோஷ்டிகளெல்லாம் இப்பொழுது சத்தமே இல்லை

இலங்கையில் பெட்ரோல் விலை, பாகிஸ்தானில் பெட்ரோல் விலை என அளந்து கொண்டிருந்தவனெல்லாம் அந்நாடுகள் சரிந்து கிடக்கும் பொழுது பல்லி போல் சுவரோடு ஒட்டி கொள்கின்றான்

இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம் ஆனால் அது கொடுக்கும் வசூல் இந்திய மக்களின் பொருளாதாரத்துக்கும் பாதுகாப்புக்குமேதான் திருப்பிவிட படுகின்றது

தமிழக ஜவுளிகடை நகைகடை எல்லாம் சம்பாதிக்கும் காட்சிகளில், திரையரங்கும் மால்களும் நிலம் வீடுகளின் விலைவாசியின் காட்சிகளில் அந்த பெட்ரோல் விலை பெரிதல்ல‌

தேர்தலுக்கு கொட்டும் பல்லாயிரம் கோடிகளில் அந்த பெட்ரோல் பணம் பெரிதல்ல‌

இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம் என்பது அதன் பெரும் மக்கள் தொகைக்கு ஒரு பாதுகாப்பை கொடுக்கின்றது என்பதே சரி, அவ்வகையில் தேசம் சரியாக செல்கின்றது

அதற்குமேல் தமிழகத்தில் பெட்ரோல் விலையினை குறைக்க இந்திய நிதியமைச்சர் அவ்விலையினை மாகாண அரசு ஜிஎஸ்டி வரம்பில் கொண்டுவர உதவுகின்றோம் என்கின்றார், அதற்கு மாகாண அரசு ஏன் செவிமடுக்கவில்லை என யாராவது கேட்பார்களா என்றால் இல்லை

சொத்துவரியினை மத்திய அரசின் வழிகாட்டலில் உயர்த்தினோம் எனும் தமிழக மாகாண அரசு, பெட்ரோல் விலை குறைய மத்திய அரசு வழிகாட்டும்பொழுது கனத்த மவுனமாவதெல்லாம் திராவிட மாடல்