இலங்கையில் மகிந்த ராஜபக்சேவுக்கு நடப்பது ஒரு விதமான உலக அரசியல் அடி

ஒரு நாட்டுக்கு பலமான தலைவன் உருவாகிவிட கூடாது என்பது சில வல்லரசுகளின் கணக்கு, இதனால் தனிபெரும் தலைவன் ஒரு நாட்டுக்கு வரகூடாது வந்தாலும் நிலைக்க கூடாது அதுவும் சிறிய நாட்டுக்கு அல்லது வளரும் நாட்டுக்கு வரவே கூடாது என்பது உலக வல்லரசுகளின் அரசியல்

இதில் சீனா போன்ற இறுக்கமான நாடுகள் தப்பும், தப்ப முடியா நாடுகள் அப்படி ஒரு தலைவன் உருவாகும் பொழுது சிக்கும்

எகிப்தின் கர்னல் நாசர், ஈராக்கின் சதாம் உசேன், லிபியாவின் கடாபி என வரிசை பெரிது

அப்படி மக்களை தூண்டி சரிக்கமுடியாவிட்டால் போரால் செக் வைப்பார்கள் அந்த செக் இப்பொழுது ரஷ்ய அதிபர் புட்டீனுக்கு வைக்கபட்டிருக்கின்றது, சதாம் அப்படித்தான் சரிக்கபட்டார்

இந்தியாவில் தனிபெரும் தைரியமிக்க தலைவர்களான சாஸ்திரி, இந்திரா, ராஜிவ் அப்படி கொல்லபட்டனர்

சிரிய அதிபர் சதாத் தீரா சிக்கலுக்குள் தள்ளபட்டார், துருக்கி அதிபர் எர்டோகன் தந்திரமாக நீடிக்கின்றார்

இன்றைய உலகில் மன்னராட்சி தவிர (மன்னர்கள் சொத்தெல்லாம் மேலை நாட்டில் இருப்பதால் அடக்குவது எளிது, வடகொரியா தனி ரகம்) தங்கள் நாடுகளில் அசைக்கமுடியா தலைவர்கள் என இருப்பது சிலர்,

புட்டீன், ஜின்பெங், மோடி, ராஜபக்சே என வெகுசிலர்

இதனில் புட்டீன் கடும் சிக்கலில் கிடக்கின்றார் இனி மீள்வது சிரமம், ஜின்பெங் மூன்றாம் முறை பதவிக்கு வந்தாலும் அவரைபற்றி வரும் செய்திகள் சரியல்ல‌

மகிந்த ராஜபக்சே இதோ விரட்டியடிக்கபட்டுவிட்டார், இலங்கை எனும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாட்டின் தலைமை அரண் முறிக்கபட்டிருக்கின்றது

இப்பொழுது தன் நிலையில் அப்படியே வலுவாக நீடிப்பவர் பாரதபிரதமர் மோடி ஒருவர்தான், அவர்மேல் சில வெளிநாட்டு கைகூலிகள் ஏன் வன்மம் கொண்டு கத்தி திரிகின்றார்கள் என்றால் அதற்கு காரணம் தேவை இல்லை

பாரதத்துக்கு வராமல் வந்த மாமணியினை கண்ணின் மணிபோல் காக்க வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமையாகின்றது